பக்கம் 113
கலந்தாரி போல் வேடம் அணிந்தவர் துரியோதனனை மிரட்டினர்.
ஆரடா என் மருமகளைத் தீயில் தள்ள - என்றனர்
கலந்தாரியை அவளுடைய மாளிகைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தனர்.
துரியோதனன் தன் எண்ணம் தோற்றுப் போனதைப் பலவாறாக எண்ணிப் பார்த்தான்.
- அக்கினி வளர்த்து அவலமாய்ப் போனது
- வெள்ளம் புரண்டு வந்தது
- வெள்ளத்தில் பலர் மிதந்தது
- மதுரைப் பெண்களின் படை வந்து தன்னைச் சாடியது
- தான் வெட்கம் கெட்டு நின்றது
- சின்னப்பட்டது
- தன் சேனைகள் ஓடியது
- கிழப் பார்ப்பான் சொன்ன கேடான வார்த்தைகள்
- அடையாளம் தெரிந்துகொண்ட பின்பும் அக்கினி வளர்த்து
ஆகியவற்றையெல்லாம் எண்ணிப் பெருமூச்சு விட்டான்.
தான் குருடன் மகன் ஆயிற்றே - என்று நினைத்தான்
மிதமிஞ்சிப் போனதற்காக வருந்தினான்
கண்டோர் நகைக்க, கனத்த உடல் எடுத்திருக்கிறேனே எனக் கவன்றான்
கர்னரை அழைத்தான்
சொல்கிறான்
நீர் சொன்னது உண்மை ஆயிற்று
அடையாளக் குறிப்பை ஆராய்ந்து பார்க்காமல் உன்மேல் வீண்பழி சுமத்தினேன்
புலந்திரன்தான் வந்தான் என்று இப்போது தெரிகிறது
அல்லி மருமகளை நீ சமாதானப் படுத்து
உறவு கொள்ளும்படிச் செய்
கர்னர் அல்லிப் பெண்களைக் கண்டார்
அவர்கள் கர்னரை வணங்கினர்
கர்னர் வாழ்த்தினார்
அந்தணரும் கர்னரும் காந்தாரியிடம் வந்தனர்
கற்பு மிகுந்தவளே கன்னியரே நீர் வாழி
என வாழ்த்தினர்.
அனைவரும் கலந்தாரி அரண்மனைக்கு வந்தனர்
தாயார் துற்சடையும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள்
கலந்தாரியை அழகுபடுத்தினர்
கலந்தாரிக்கு ஆலாத்தி எடுத்துத் திருஷ்டி கழித்தார்கள்
மதுரையிலிருந்து வந்த பெண்கள் கலந்தாரிக்குச் சீமந்தம் செய்தனர்
மங்கல இசைக்கருவிகள் முழங்கின
கொச்சிமலை தேனும் குடகுமலைத் தேனும்
சீனிச் சருக்கரையும் சிறந்த பலாச்சுளையும்
வாழைக் கனி ருசியும் மாம்பழமும் சற்கரையும்
மற்ற பலகாரமும் வகை இனிப்பு புளிப்புகளும்
கொச்சித் தமர்த்தம் கொய்யாக் கனி முதலாய்
வடை சுழியம் பலகாரம் அதிரசம் தோசையுடன்
படையல் செய்தனர்
எல்லாரும் பசியாறினர்
மாயன் துவாரகை மீண்டான்
மதுராபுரிப் பெண்கள் சில காலம் கலந்தாரியுடன் இருந்தனர்
பத்து மாதம் சென்றது
கலந்தாரி மகனைப் பெற்றாள்.
அருச்சுனன் - என்று பாட்டன் பெயர் அவனுக்குச் சூட்டப்பட்டது.
இந்தச் சின்ன-அருச்சுனன் சித்திர வில் போன்றவன்
மதுரை மகளிர் மதுரை மீண்டனர்
கர்னர் அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருந்தார்.
இந்தக் கதையைக் கேட்டவர்கள் கீர்த்தியுடன் வாழ்க
புலந்திரன் களவுமாலை முற்றிற்று
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்,
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர்
எளிய நடையில்
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல்
(பாடல் பகுதிகளுடன் கதை)
No comments:
Post a Comment