பக்கம் 105
மதுரையில் அல்லியரசியிடம் சேதி சொன்ன மறையவன் மாயன் அத்திபுரம் வந்தான்.
வேதியரைத் துரியோதனன் கண்டான்.
அன்பான வேதியரே
32 அறங்களும் செய்துவிட்டேன்.
இன்று அந்த எட்டாம் நாள் என்று துரியோதனன் கூறினான்.
உன் மனம் போல் செய் என்றார் வேதியர்.
துரியோதனன் கர்னரை அழைத்துவரச் சொன்னான்.
கர்னர் வந்தார்..
கலந்தாரியை அழைத்துவருக - என்றான்
வேதியர் மாதவன் கண்சாடை காட்டினார்
வேதியன் கண் சிமிட்டியதைக் கர்னர் உணர்ந்துகொண்டார்
கலந்தாரி மாளிகைக்கு வந்தான்
கலந்தாரி வரவேற்றாள்
எதற்காக வந்தீர் என்றாள்
விவரத்தைக் கூறினார் கர்னர்
சீக்கிரம் வருக என்றார்
தீயில் எரியவா நீ பிறந்தாய் - என்று கூறித் தாதியர் வருந்தினர்
நான் கணவனைக் கூடியது உண்மையானால் தீயிலிருந்து தப்புவேன்.
கலங்கவேண்டாம் என்று தாதியரிடம் கூறினாள்.
நீராடினாள்
மஞ்சள் ஆடை உடுத்திக்கொண்டாள்
கோடாலி சிண்டு போட்டுக்கொண்டாள்
மல்லிகைப் பூ வைத்துக்கொண்டாள்
நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டாள்
பட்டாடை உடுத்திக்கொண்டு பதுமை போல் வந்தாள்
தோழியர் சூழ வந்தாள்
கர்னர் படையும் உடன் வந்தது
சந்திரனைக் காணாத தங்கை வெளிப்பட்டாளாம்
சூரியனைக் காணாத தோகை வெளிப்பட்டாளாம்
கால் பீலி கல கல என கை வளையல் பள பள என
நெற்றி சுட்டி நின்று இலங்க தீல விழி மை துலங்க
கோட்டை கடந்து கொத்தளமும் தான்கடந்து
ஆற்றங்கரை ஓரம் ஆரணங்கு வருகையிலே
எள்ளு விழ இடம் இல்லாமல் நெருக்கமாய் மக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர்
தீக் குண்டத்தை நெருங்கினாள்
அந்த நேரத்தில் மாயன் மாயம் செய்தான்.
மேகம் இருண்டது.
மின்னி இடித்தது
மழை கொட்டியது.
அந்த நேரத்தில் அங்கு வந்த மதுரைப் பெருமாள் வெள்ளத்தில் புளியைக் கரைத்து விட்டார்.
புளிப்பு விரும்பும் கலந்தாரி அதனை அள்ளிக் குடித்தாள்.
உள்ளம் குளிர்ந்தாள்
துரியோதனன் கலந்தாரியை விரைந்து அழைத்துவாருங்கள் என்றான்.
அழைத்துவந்தனர்
மழைவெள்ளம் தீயை அணைத்தது
அப்போது அல்லிபோல் வேடம் அணிந்தவர் அங்கு வந்தனர்
ஆரடா என் மருமகளை தீயில் தள்ள - என்றனர்.
கலந்தாரியை அவளுடைய மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்,
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர்
எளிய நடையில்
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல்
(பாடல் பகுதிகளுடன் கதை)
No comments:
Post a Comment