பக்கம் 94
புலந்திரன் கலந்தாரிக்குத் தந்த அருச்சுனன் மோதிரத்தைத் துரியோதரனின் தந்து இது யார் மோதிரம் சொல்லும் - என்றான்.
துரியோதனன் உற்று நோக்கினான்.
அந்த மோதிரம் மதுரை நகர வேலைப்பாடுகளைக் கொண்டிருந்ததை உணர்ந்தான்.
அறியாமல் சொன்னேன். பொறுத்தருள் என்று சொல்லிக்கொண்டு சமாதானத்தின் அடையாளமாக, துரியன் வெற்றிலைப்பாக்கு கொடுத்தான்.
பாண்டவர் காட்டுக்குப் போய்விட்டனர்
இது அவர்களின் மோதிரம் அன்று என்றான், துரியாதனன்
புலந்திரனின் மாணிக்க மோதிரம் துற்சடையாள் அரண்மனை மாணிக்கப் பேழையில் இருக்கிறது. எடுத்துவாருங்கள் - என்று கர்னர் கூறினார்.
எடுத்து வந்தனர்
இதில் உள்ளது கர்னர் வேலைப்பாடு - என்று துரியோதனன் கூறினான்.
துரியோதனன் ஆர் சொன்னாலும் கேட்கமாட்டான். காந்தாரியை இன்றோடு இழந்துவிட்டோம் என்று நொந்துகொண்டாள்.
துரியோதனன் காவலரை அழைத்தான்
காவலர் வந்தனர்
அல்லி மருமகளை வெட்டித் தீக்குழியில் தள்ளுங்கள் என்றான்
தீ வளர்க்க எங்கே குழி வெட்டுவது என வினவினர்
ஆசார வாசலில் வெட்டுங்கள் என்றான்.
குழி வெட்டினர்
தீ வளர்த்தனர்
தீ வளர்த்தாயிற்று என்றனர்
இன்று அந்திப் பொழுதில் கலந்தாரியைத் தீயில் தள்ளவேண்டும் என்று
அவளை அழைத்துவருமாறு கர்னருக்கு ஆணையிட்டான்.
என்மேலா சந்தேகம் என்று சொல்லிக்கொண்டு கர்னர் தீயில் குதிக்கச் சென்றார்.
அது கண்டு அங்கிருந்தவர் எல்லாரும் கர்னரைத் தீயில் விழாமல் பிடித்துக்கொண்டனர்.
தீயில் தள்ள, கலந்தாரியை அழைத்துவருமாறு கர்னரைப் பணித்தான்.
துரியோதனன் பணித்ததை, காவலர்கள் கர்னரிடம் தெரிவித்தனர்
இது நிகழ்ந்தால் பாண்டவர் பொறுப்பாரோ
பொறுத்திருந்து பாரும்
என்றான் கரனன்
பணிப்பெண்கள் கலந்தாரியிடம் சென்றனர்
கர்னர் வந்திருப்பதாகக் கூறினர்
கலந்தாரி வந்தாள்
கைத்தாங்கலாக அவளை அழைத்துவந்தனர்
கர்னரைப் பணிந்தாள்
கர்னர் அவளை வாழ்த்தினார்
இருக்கை கொடுத்தாள்
அதில் ஏறாமல் கர்னர் நின்றார்.
எதற்காக வந்தீர் என்றாள்
மதுரைப் புலந்திரன் இங்கு வரவில்லை என்று உன்னைத் தீயில் தள்ள, துரியோதனன் அழைத்திருக்கிறான் - என்றார், கர்னர்.
கலந்தாரி வெகுண்டாள்
அல்லி மருமகளை அக்கினியால் தள்ளிவிட்டு
ஆள்வானோ பின்னிருந்து அத்திநகர் பட்டணத்தை
அறியானோ தானும் ஐவரது சேவகத்தை
ஆணால் அழகுள்ள அருச்சுண ராஜதுரை
மதுரைத் துரைச்சியரை மணமாலை சூட்ட என்று
பூமியை வலமாக வருகின்ற வேளையிலே
காசொன்றும் நேராதே காளை அந்த அருச்சுனனார்
தாலியும் நேராதே தார்வேந்தர் அந்நேரம்
மாது கருங்குழலை மன்னவர் மாலையிட்டு
தேவேந்திரப் பட்டணம் கொண்டு சென்றார்
ஐவர் பணி அப்படிப்பட்டது
என்னைத் தீயில் தள்ள இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?
தள்ள முடியுமா
என்றாள்
மாலைக்குழலாளே உன்னை நான் சோதித்தேன். எதற்கும் அஞ்சாதே - என்றார் கர்னர்
காவலரை அழைத்து இவள் கூறிய மொழிகளை, துரியாதனினடம் சொல்லுங்கள் என்றான் கர்னன்
இதனைக் கேட்ட துரியன் வேதியர் பெரியோரை அழையுங்கள் என்றான்.
கர்னர் அந்தணரைத் தேடலானார்.
இதனைக் கண்ணன் பெருமாள் அறிந்தார்.
வேதம் கண்ட வேதியர் வடிவம் கொண்டு வந்தார்.
விருத்தக் கிழவர் வடிவில் வந்தார்
தீரப் படித்துத் தெளிவடைந்த வேதியர் போல வந்தார்
கர்னர் பார்த்தார்
வணங்கி வரவேற்றார்
வேதியர் வாழ்த்தினார்
நான் கண்ணன் இந்த வேடத்தில் வந்திருக்கிறேன்
துரியனுக்குச் சோதிடம் சொல்ல வந்திருக்கிறேன் - என்றார்
கர்னர் மகிழ்ந்தார்.
வேதியரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தார்
துரியன் வேதியரைக் கண்டான்
மரியாதையுடன் வரவேற்றான்
அரியணை தந்து இருக்கச் செய்தான்
எம்மை எதற்காக அழைத்தாய் என்று வேதியர் வினவினார்
அல்லி மருமகளை அக்கினியில் தள்ள நல்ல நேரம் பார்த்துச் சொல்லவேண்டும் என்றான் துரியன்
இன்று அஸ்த நட்சத்திரம்
இன்றைக்கு எட்டாம் நாள் தள்ளிவிடலாம் என்றார்
துரியன் ஒப்புக்கொண்டான்
இன்றைக்கு எட்டாம் நாள் வருவேன்
அதுவரையில் நெருப்பு எரிந்துகொண்டிருகட்டும் என்றான்
நான் வந்ததும் இருவரும் சேர்ந்து கலந்தாரியைத் தீயில் தள்ளிவிடலாம் என்றான்.
போய்விட்டான்
பெருமாள் அல்லியிடம் வந்தார்
வடமதுரையைத் தாண்டித் தென்மதுரை வந்தார்
பிறவா முடி தரித்த பெண் பெருமாள் நாயகியும்
கண்டளவே வேதியரை கன்னி இள மயிலும்
வேதியரைக் கண்டவுடன் மெல்லியரும் தெண்டனிட்டாள்
எந்த ஊர்
எந்த தேசம்
எதற்காக இங்கு வந்தீர் என்றாள்
துற்சாதனன் தம்பியர் 99 பேர்
அவர்கள் 100 பேரும் ஒன்று திரண்டனர்
யாரோ ஒரு பெண்
பெயர் கலந்தாரியாம்
அவள் வயிற்றில் திருட்டுப் பிள்ளை உண்டாயிற்றாம்
அதற்காக அவளைத் தீயில் தள்ள முடிவெடுத்துள்ளனர்
அதற்கு, கோதானம், பூதானம் கொடுக்கிறார்களாம்
அதனைப் பெறப் போகலாம் என்றால் வழி தெரியவில்லை.
உன்னைக் கேட்டு வழி தெரிந்துகொண்டு போகலாம் என்று இங்கு வந்தேன் -
என்றார் வேதியர்.
அல்லி கேட்டாள்
சினம் கொண்டாள்
வேதியரைச் சிறையில் அடையுங்கள் என்றாள்
அல்லி ஆங்கார நீலி என்று அந்தணர் மகிழ்ந்தார்
தன் சுய ரூபத்தை எடுத்தார்
கண்டவர் நடுங்கினர்
அல்லியும் நடுங்கினாள்
மாயனைப் பணிந்தாள்
நான் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும் - என வேண்டினாள்
மாயவன் சொல்கிறான்
கலந்தாரியைத் தீயில் தள்ள துரியன் நினைத்தான்
கேட்டை, மூலம் கெடுதி நாள்
இன்றைக்கு எட்டாம் நாள் தள்ளலாம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்
ஒப்புக்கொண்டிருக்கிறான்.
நீ என்ன சொல்கிறாய் என அல்லியை வினவினார்
என்னாலே என்ன ஆகும்
பெருமாளே நீரே சொல்லும் என்றாள்
பெருமாள் சொல்கிறார்
அந்த நேரத்தில் உன்னைப்போல் 10 பெண்களை அனுப்பு
சீமந்தப் பழங்கள் கொண்டுவருமாறு அனுப்பு
அப்போது ஊசி போல் மின்னி இடியுடன் மழை பொழிய வைப்பேன்
வெள்ளம் பாய்ந்து அக்கினியை அணைக்கும்
துரியோதனன் படை வெள்ளத்தில் மிதக்கும்
அப்போது நீ அனுப்பிய தாதியர் தன் ஆயுதங்களால் துரியோதனன் படைகளைச் சிதற அடிக்கட்டும் - என்றார்
அப்படியே செய்வேன் என்று அல்லி கூறினாள்.
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்,
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர்
எளிய நடையில்
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல்
(பாடல் பகுதிகளுடன் கதை)
No comments:
Post a Comment