4
காளமகாரிஷிவனம்
1
பாண்டவர் காட்டு வாழ்க்கையில் நான்காம் ஆண்டு தொடங்கிற்று
கூடை தலைமேலே குடிவாழ்க்கை கானகத்ததில்கோலி வைத்த சும்மாடு கூடை தலைமேலேமன்னி வைத்த சும்மாடு வனவாசகம் குடித்தனமாம்
முருக முனி வனத்தை விட்டுக் காளமுனி வனத்துக்கு வந்தனர்
பச்சைத் தழையால் 5 அடுக்கு மாளிகைஅந்தப் பர்னசாலையில் குடித்தனம்காயும் கனியும் தின்று காலம் கழிக்கின்றனர்
அரவக் கொடியோன் துரியோதனன் சொல்கிறான்
காளிபேரண்டாபாண்டவர் எந்த வனத்தில் உள்ளனர் என்று கண்டு வாகாளிபேரண்டன் தேடி வந்தான்காளமுனி வனத்தில் கண்டான்திரும்பினான்துரியோதனனிடம் கூறினான்.துரியோதனன் கண்கள் சிவந்தன
மாமா சகுனி
ஐவரைக் கொல்ல வழி சொல்
என்றான்
காளமுனியை நோக்கித் தவம் செய்அவரிடம் வரம் கேள்அவர் நினைத்தால் முடியும் என்றான் மாமன்
துரியோதனன் தவம் செய்தான்
முனிவர் வந்தார்
துரியோதனன் வணங்கினான்வாய் பொத்தி நின்றான்முனிவர் மகிழ்ந்தார்எதற்காக என்னை நினைத்தாய்வேண்டும் வரம் தருவேன்எனக்குபண்டும் பகையாளிபாதிநாள் தாயாதிஎண்ணும் பகையாளிபஞ்சவர்இருக்கிறார் உன் வனத்தில்ஐவரையும் கொன்றால் நான் முழு நாட்டையும் ஆள்வேன் - என்றான்
முனிவர் ஒப்புக்கொண்டார்
ஐவரைக் காக்கஆதிசிவன்பாதாளத்தார்பிரமன்யார் வந்தாலும் தடுத்துக் கொல்லுவேன் என்று வாக்களித்தார்
துரியோதனன் மகிழ்ந்தான்
வேதாளம்
ஐவரைக் கொல்லக்கூடிய வேதாளம் பிறக்க வேள்வி செய்தார்மந்திரத்தால் வேதாளத்தை அழைத்தார்
இதனைக் கண்ணன் நினைத்தான்
நம்பினவரை நாமல்லோ காக்க வேண்டும் என்று நினைத்தான்கருடனில் ஏறிக்கொண்டு வந்தார்எமனிடம் வந்தார்எமன் வணங்கினான்இருக்கை தந்தான்மாயன் அமர்ந்தார்வேதாளம் வரப்போவது பற்றிக் கூறினர்
துரியோதனன் விருப்பப்படி, பாண்டவரைக் கொல்லும் வேதாளத்தை உண்டாக்க, காளமுனி வேள்வி செய்கிறார்
வேதாளம் பிறந்தாலே வேந்தரைக் கொன்றுவிடும்மாண்டு மடிவார்கள் மகாராஜர் பஞ்சவர்கள்செத்து மடிவாரே சீரான பஞ்சவர்கள்நம்பினவரை நாமல்லவோ காக்க வேண்டும்அதற்காக உம்மை அழைக்க வந்தேன்என்றார்
இருவரும் வந்தனர்
எமன் கிடா மேல் எம்பெருமாள் கெருடன் மேல்வந்தனர்
அந்தரப் பொய்கை ஒன்றை மாயவர் உருவாக்கினார்
அது தாமரைப் பொய்கைஅல்லி, தாமரை, ஆம்பல்,அதன் திட்டில் கொட்டி மரங்கள்கரையில் பூ மரங்கள்மல்லிகை, முல்லை, மாதுளைகொன்றை, குருக்கத்தி, கோங்குசண்பகம், ஆல், அரசு, வேம்புபார்த்த இடபெல்லாம் பழங்கள்கண்ட இடமெல்லாம் கனிகள்இப்படி மாயன் தோற்றுவித்தார்
மான்
எமன் குயில் வடிவம் கொண்டு கூவுகிறான்மாயன் புள்ளிமான் வடிவம் கொண்டு விளையாடுகிறார்பன்னசாலை முன் மான் விளையாடுகிறதுஅந்த மானைப் பிடித்து எனக்கு விளையாடத் தா - துரௌபதி கேட்கிறாள்தருமரைக் கேட்டாள்
யார் வளர்த்த மானோ தெரியவில்லை
மனிதன் வளர்க்காத மான் என்றால் நம்மிடம் வந்து மருவி விளையாடாதுபிடித்தால் நமக்குத் துன்பம் உண்டாகும்பெண் புத்தியாலே கெட்டவர்கள் பலர்இராமர் பட்ட பாடு தெரியாதாஎன்றார்
மானால் இராமர் பட்ட கதையைச் சொல் - என்றாள் பாஞ்சாலி
தருமர் இராமர் மான் பிடிக்கச் சென்றதுஅதனால் அவர் பட்ட துன்பம் ஆகியவற்றை விளக்கமாகச் சொன்னார்.மானைப் பிடிக்க மாட்டேன் என்றார்.
பாஞ்சாலி
மான் வேண்டும்
என்று அடம்பிடித்தாள்
வீமனை அனுப்பி மானைப் பிடித்துத் தா - என்றார்வீமன் மானைத் தொடர்ந்தான்மான் பொய்கை பக்கம் வந்தது
மயில்
குயில்
வீமனுக்குத் தண்ணீர் தாகம்நா வறண்டதுமாயன் மயில் ஆனார்மயில் ஆடுகிறது(எமன்) குயில் கூவுகிறது
குளிர்ந்த இடத்தில் குயிலும் மயிலும் இருக்கும் என்பார்கள்அங்கே நீர் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு சென்றான்.
மாயவன் வானிலிருந்து பேசுகிறார்
ஆரடா நீஇந்தக் குளம் என்னுடையதுதண்ணீர் குடிக்காதேஎன்றார்
அந்தரத்தில் பேசுவது ஆர்
பேயோபிசாசோபிணம் தின்னும் பூச்சியோஅந்தர தேவதையோஆகாச துர்க்ககையோமந்திர தேவதையோவந்து என்னைக் கேட்பது யார்என்றான்
வாடாப் பயிர் எது
வருந்தமான பாரம் எது
இதற்கு விடை சொல்லிவிட்டுக் குடிஎன்றது
வீமனுக்கு விடை தெரியவில்லைதண்ணீரை அள்ளிக் குடித்தான்
அவனுக்குத் தலை சுற்றுகிறதுகண் சொருகுகிறதுமரத்தடியில் படுத்துக்கொண்டான்
மாயன் எமனை அழைத்தார்
இவன் உயிரை வாங்கு என்றார்
சூலத்தால் குத்திபாசத்தால் கட்டிஉயிரை வாங்கு என்றார்
வீமன் குளக்கரையில் செத்து மடிந்தான்.
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)
No comments:
Post a Comment