3. முருக முனிவர் வனம் - 4
தருமர் தம்பி நால்வரும், திரௌபதையும்
சயிந்தவனை அலங்கோலப் படுத்தி,
கழுதைமேல் ஏற்றி
நடந்ததைத் துரியனுக்குச் சொல் என்று
அனுப்பி வைத்தனர்.
கழுதை சயிந்தவன் படை இருக்குமிடத்துக்கு வந்தது.கட்டை அவிழ்க்கக் கழுதையைத் தொட்டவர்கள் அதனோடு ஒட்டிக்கொண்டனர்.கழுதை ஓடிற்றுகாடு மலைகளைக் கடந்து அத்தினாபுரம் வந்ததுகடைத்தெருவில் கழுதையைத் தொட்டவர்களும் ஒட்டிக்கொண்டு கழுதையுடன் வந்தனர்பட்டணத்தில் உள்ளவர்கள் பரிவோடு பார்த்தனர்மாடங்களிலும்கோபுரங்களிலும்ஏறி நின்றுகொண்டு பார்த்தனர்குலுங்கிக் குலுங்கிச் சிரித்தனர்சீச்சீ என்றனர்இவனுக்கு இந்தக் கழுதை ஏது - என்றனர்காமத் துரோகி இவன் சதி செய்தான் - என்றனர்
படைவீரன் ஒருவன் நிகழ்தவற்றைப் புட்டு வைத்தான்
அந்தத் தெருவைத் தாண்டி, கழுதை அப்பாலே சென்றதுமாடத் தெருமன்னர்கள் வாழும் வீதி தாண்டிதிரியோதனன் இருக்கும் அரியணை அருகில் வந்தது
திரியோதனன் கண்டான்சிந்தை கலங்கினான்இறங்கு என்று கை கொடுத்தான்கழுதை அவனையும் இழுத்துக்கொண்டு ஓடிற்றுதிரியோதனன் தம்பியர் அண்ணனைப் பிடித்து இழுத்தனர்அவர்களும் கழுதையோடு ஒட்டிக்கொண்டு ஓடினர்ஐயையோ தெய்வம் என்று அல்லவரும் புலம்புகின்றார்அங்கிருந்த அரசர்களும் அமைச்சர்களும் பார்த்து நடுங்கினர்
இப்படியாகவே இவர் படும் பாடு அதனை
தூய குலத்து உதித்த துரோணர் ஓடிவந்து
காசி வள நாடு ஆளும் கர்னரைக் கண்காட்டி
நாம் என்ன செய்யலாம் என வினவினார்
- இது துரோபதை சொன்ன சோஷம்
- இவர்கள் பத்தினிக்குச் செய்த பாவம்
என்று எண்ணிய கர்னர்பாரளந்த மாயனை நினைத்துக்கொண்டு கழுதையைத் தட்டினார்.
கழுதையுடன் ஒட்டிக்கொண்டிருந்தவர் அனைவரும் விடுபட்டனர்
சயிந்தகனை இறக்கினர்
சயந்தகன் நடந்ததையெல்லாம் விளக்கமாகக் கூறினான்
கேட்ட துரியன் மனம் சலித்தான்
வரிசித்து மன்னன் சயிந்தகன் தவம் செய்தான்
ஆதிசிவன் தோன்றினார்வீமனைக் கொல்ல வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொண்டான்
அத்தினாபுரம் திரும்பினான்
துரியோதனனிடம் சொன்னான்
துரியோதனன் மகிழ்ந்தான்பாண்டவர் வனவாசம் மூன்று ஆண்டு கழிந்தது.
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)
No comments:
Post a Comment