Pages

Saturday, 6 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 56

47

3. முருக முனிவர் வனம் - 2

பாண்டவர்கள் மூன்றாமாண்டு முருக முனிவர் வனத்தில் வாழ்ந்தனர். 

இடும்பன் சயந்தன்


பாண்டவர் மனைவி பாஞ்சாலியைக் கவர்ந்து சென்று துரியோதனனுக்குக் கொடுக்க, சயிந்தன் என்பவன் வருகிறான், 

துரியோதனன் சயிந்தனுக்குப் பட்டாடை போர்த்தினான் 
போய்வருக என்றான் 
வெகுமானம் பெற்றுக்கொண்டு வருகிறான்
 
படைத்துணையுடன் வருகிறான் 
சங்கு ஊதினர் 
அக்ரோணி சேனை புறப்பட்டது 

கலிங்கர்
தெலிங்கர்
காஸ்மீரக் கன்னடர்
ஈழத்து வங்கணர்
இளநாட்டுச் சோனகர் 

போருடை அணிந்துகொண்டு வந்தனர் 
மன்னர் பலர் வந்தனர் 

சயிந்தன் நெற்றியில் நாமம்  போட்டுக்கொண்டான் 
ஆடையைத் தட்டி வரிந்து கட்டிக்கொண்டான் 
தோளில் மடித்துண்டு உருமாலை போட்டுக்கொண்டான் 
வில்லேந்தி வருகிறான் 

தேரை வணங்கினான்
சிவ் என்று ஏறினான் 

அவனுக்குக் வெண்குடை
கவரி வீச்சு 

தெற்குத் தெரு தாண்டி
தேரோடும் வீதி விட்டு 
ஆயிரம் தெரு தாண்டி 
அங்காடி தான் தாண்டி 

கடையும் கடைத்தெருவும் கருமார வீதி விட்டு 
பட்டணத் தெரு தாண்டி - வருகிறான் 

செந்தூள் கருந்தூள் எழும்ப வருகிறான் 

பொல்லாச் சகுணங்கள் பொருந்தின 


  • வாயசம் (பூனை) வலமிருந்து இடம் சென்றது
  • வலியன் (கழுகு) இடமிருந்து வலம் சென்றது
  • சாரை குறுக்காச்சு
  • கோட்டான் குழறிற்று
  • ஆந்தை அலறிற்று
  • பல்லி பச்சை-மரத்திலிருந்து பட்ட-மரத்துக்குத் தாவிற்று
  • கிழவி ஒருத்தி நெருப்பு எடுத்துக்கொண்டு எதிரே வந்தாள் 

இவற்றை எண்ணிக் கலங்கினான்.
திரும்பிப் போனால் சிரிப்பார்களே என்று நினைத்தான் 

நடப்பது நடக்கட்டும் என்று தொடர்ந்தான். 

தொலைவில் தேரை நிறுத்தினான்
பர்னசாலைக்கு வந்தான் 
பாஞ்சாலி தனியாக இருந்தாள் 

அண்ணனைக் கண்டு அலறி ஓடிவந்தாள் 
வணங்கினாள் 
இருக்கத் தடுக்கு போட்டாள் 

அண்ணா 
இந்த வனத்துக்கு எதற்காக வந்தீர் - என்றாள் 

வனவாசம் வந்தீர்கள் என்று கேள்விப்பட்டேன்
பார்க்கலாம் என்று வந்தேன் - என்றான் 

துரியோதனன்
செய்த
கொடுமைகள்


எங்கள் பரிதாப வாழ்க்கையைக் கேள் - என்று பாஞ்சாலி கூறலானாள்

பேரன் குமாரனுக்குப் பூணூல் கல்யாணம் 
விருந்துக்கு வாருங்கள் என்று துரியோதனன் ஓலை அனுப்பியிருந்தான்
அதனை உண்மை என நம்பிப் பாண்டவர் சென்றனர்

ஆனால் பாண்டவர்களைக் கொல்ல அவன் திட்டமிட்டிருந்தான்

  1. தண்ணீர்ப் பந்தல் வைத்து விஷம் கலந்த நீரைத் தந்தான்  
  2. நடக்கும் வழியில் நஞ்சு முனை கொண்ட ஊசிகளைப் பதித்திருந்தான்
  3. மாளிகை வாசலில் பெரிய பொய்க்குழி வெட்டி அதில் விழ ஏற்பாடு செய்திருந்தான் 
  4. எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள் என்று விஷ எண்ணெய் தந்தான்
  5. மல்லர் பலரை அனுப்பி வதம் செய்து போடுங்கள் என்றான் 
  6. பவளக் குளத்தில் பவளம் போல் கழு ஊசிகளைப் பதித்து அதில் குளிக்கச் சொன்னான் 
  7. உண்ணும் சோற்றில் நஞ்சு வைத்தான் 
  8. குடிக்கும் நீரில் நஞ்சு வைத்தான் 
  9. வஞ்சகன் சகுனியுடன் சூதாடி எல்லாவற்றையும் தோற்கச் செய்தான் 
  10. பாண்டவர்க்கு விலங்கு பூட்டினான்
  11. காற்று நுழையாத கல்லறையில் அடைத்து வைத்தான் 
  12. அறையில் இருந்த என்னை அம்பலத்துக்குக் கொண்டுவந்து, ஒருவர் மயிரைப் பிடித்துக் கொள்ள ஒன்பது பேர் என் ஆடைகளைக் களைய ஏற்பாடு செய்தான்
  13. வாய்க்கு வந்தபடியெல்லாம் சொல்லி என்னைத் திட்டினான் 
  14. துஷ்டத்தனம் செய்தான் 
  15. காட்டுக்கு ஓட்டிவிட்டான் 
  16. 12 ஆண்டு காட்டில் இருக்கவேண்டும். யார் என்று அடையாளம் தெரியாமல் ஓராண்டு நாட்டில் வாழவேண்டும் என்று அனுப்பி வைத்திருக்கிறான். 

தலையில் கூடையை வைத்துக்கொண்டு அலைந்துகொண்டிருக்கிறோம்

என்று பாஞ்சாலி தன் வேதனையை சயந்தனிடன் வெளிப்படுத்தினாள்

சயந்தன் விடை


நீங்கள் காட்டுக்கு வரும்போது நான் வெளியூர் சென்றிருந்தேன் என்றான். 
அன்று நான் இருந்திருந்தால் உன்னை அம்பலத்துக்குக் கொண்டுவர விடுவேனா - என்றான் 

நீ 
பத்தினி
உத்தமி
காமாட்சி
என்று அறியாதல் அந்த ஊதாரி செய்துவிட்டான் 
அவன் வாழ்வு குலைந்துவிடும்
மகிழ்ச்சி அடங்கிவிடும் 

பொறுத்தவர் பூமி ஆள்வார் 
பொங்கினவர் காடு ஆள்வார் 

அஞ்சாதே
ஆயாசப்படாதே
பாரப் புலி போன்ற பஞ்சவர் எங்கே
ஐவரையும் காண ஆவலாய் இருக்கிறது - என்றான்

தனியாக உன்னை விட்டுவிட்டு எங்கே போனார்கள்
இன்று அவர்களை நான் காணமுடியாமல் போய்விட்டது 

அவர்கள் 
ஆணாய்ப் பிறந்தவர்கள் 
அலைந்தால் குற்றம் இல்லை 

நீ
பெண்ணாய்ப் பிறந்தவள் 
பின்தொடர நீதி இல்லை 

என் மாளிகை வாசலுக்கு வாராயோ தங்கையரே 
பார வனத்தில் திரிந்து பஞ்சவர்கள் மீளும் வரையில் 
என் அரண்மனையில் இருக்கலாம் 
வெதும்பி வெயிலில் அலையவேண்டியதில்லை
என்று வருந்தி அழைத்தான் 

பாஞ்சாலி சொல்கிறாள் 

ஐவரை விட்டுவிட்டு வருவேனா
நான் வரவேண்டும் என்று நீ நினைத்தால் ஐவரையும் கேட்டு அழைத்துச் செல்
என்றாள் 

சயந்தன் செயல்


இன்னும் ஒரு நாள் வந்து ஐவரைக் கேட்டு அழைத்துச் செல்கிறேன் - என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டு தேருக்கு வந்தான். 

அவன் சென்ற பின் அவன் வைத்துவிட்டுச் சென்ற கத்துயைக் கண்டாள். 
அதனை அவனிடம் கொடுக்க எடுத்துக்கொண்டு ஓடினாள். 

அண்ணா அண்ணா - என்று கூப்பிட்டுக்கொண்டே ஓடினாள்.
அவன் கேட்டும் கேளாதவன் போல் தேரை ஓட்டிச் சென்றான்

சொஞ்ச தூரம் சென்று அப்போதுதான் கேட்டது போல் தேரை நிறுத்துனான் 

இந்தா உன் வாள் என்றாள் 
ஒரு படி ஏறிக் கொடு என்றான் 
அவள் ஏறினாள்

எட்டவில்லை இன்னும் ஒரு படி எறு - என்றான் 
ஏறினாள் 

இன்னும் ஒருபடி ஏறு 
மூன்றாம் படிக்கு ஏறினாள்

வந்த காரியம் நிறைவேறியது என மகிழ்ந்தான்
தேரை வேகமாக ஓட்டினான் 

தேர் காற்றாய்ப் பறந்தது 

அண்ணா சயிந்தனே
அழிநினைவு தேடிவிட்டாய்
ஐவர் அறிந்தால் அனர்த்தம் வரும் உந்தனுக்கு 
தேரை நிறுத்து என்றாள் 
அவன் நிறுத்தவில்லை 

அவள் அபயக் குரல் எழுப்பினாள் 

புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில்  சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)

சயிந்தன் துரோபதையைத் தேர்மீது எடுத்துக்கொண்டு போதல்


No comments:

Post a Comment