43
முருகரஷி வனம் 1
பாண்டவர்கள் மூன்றாவதாக முருகரஷி வனம் வந்தடைந்தனர்.
கூடை தலைமேலேகுடிவாழ்க்கை கானகத்தில்வனமே குடித்தனம் என்று வந்தனர். வாழ்ந்தனர்.ஏழடுக்குப் பர்னசாலை போட்டுக்கொண்டனர்
நாகக் கொடி வேந்தன் சொல்கிறான்
பஞ்சவர்கள் செத்தாரோ பிழைத்தாரோ சேதி தெரியவில்லைஎந்த வனத்தில் இருக்கிறார் என்று அறிந்துகொண்டு அவர்களுக்குத் தெரியாமல் வந்துவிடுங்கள் என்று தூதுவரை அனுப்பினான்.
ஒற்றாள் ஒருவன் ஓடினான் கானகத்தே
காடும் செடியும் கரியமலை தான் தாண்டிஆறும் சுனையுமல்லோ அதிக வனம் தான் தாண்டிவேங்கை அடர்ந்த வனம் வெண்களா பூத்த வனம்கோங்கு பெருத்த வனம் கொன்றை களாப் பூத்த வனம்வனமாய் வனம் தாண்டி வாரார்கள் தூதுவர்கள்
சூரியவனம், ராமரிசி வனம் கடந்து முருகரிசி வனம் வந்தனர்
அந்த வனத்தில் ஐவரையும் கண்டார்கள்
திரும்பி வந்தனர்துரியோதனனிடம் கூறினர்
துரியோதனன் திடுக்கிட்டான்
மனம் கலங்கினான்
அவையில் இருந்த மன்னர்களிடம் கூறினான்
தோறா வடிவழகி துரோபதைமேல் எந்தனுக்குஆசை அலையுதுகாண்நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுகிறதுஅசை அவள்மேலே ஆதரவு பாய்மேலேசிந்தை அவள் மேலே சீவன் பதைக்கிறதுஅன்று அவளை வரவழைத்தேன்ஆசைகாட்டிப் பேசினேன்மடிமேல் உட்கார் என்றேன்அவள் இணங்காமல் போய்விட்டாள்அதனால் நாட்டை விட்டே ஓட்டிவிட்டேன்
அவளைச் சிறை பிடித்துக் கொண்டுவர, துரைகள் யாரேனும் உண்டா? சொல்லுங்கள் - என்றான்.
கொண்டு வருவோருக்கு ஆதீனம், அரசபதவி, செல்வம் அனைத்தும் தருவேன் - என்றான்
யாரும் வாய் திறக்கவில்லை.
சிந்து தேச அரசன் மகன் சயிந்தன்
எழுந்தான்நான் கொண்டுவருகிறேன் - என்றான்துரியோதனன் மனம் குளிர்ந்தான்.அவனுக்கு தாம்பூலம் கொடுத்தான்
பேரிகை முழக்கத்துடன் படை புறப்பட்டது
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)
No comments:
Post a Comment