விநாயகர்
ஐந்து கரத்தோனே அரனார் திருமகனே
அறுமுகற்கு மூத்தவனே ஆனைமுகப் பிள்ளையாரே
தொந்தி விநாயகரே தொப்பைக் கணபதியே
பானை வயிற்றோனே பழம் ஏந்தும் கையோனே
மூல முதலே நீர் முன்னடக்க வேணுமையா
சரஸ்வதி
நாவில் சரஸ்வதியே நான்முகனார் தேவியரே
சதுர்முகனார் தேவியரே தாயே சரஸ்வதியை
வாக்கு வரம் அருள்வாய் மறையவனார் தேவியரே
இந்தக் கதை சொல்வதற்க்கு என் கருத்தில் வாரும் அம்மா
தப்புகள் இல்லாமல் தாயே நீ வாக்கு அருள்வாய்
பஞ்சவர்கள் தன் கதைக்கு பார்வதியே முன்னிருந்து
குற்றங்கள் வாராமல் கொண்டணைத்துக் காரும் அம்மா
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)


No comments:
Post a Comment