11
சபா மிருக வனம்
(1)
11 ஆம் ஆண்டு
பாண்டவர் காட்டில் வாழும் குடித்தனத்தில் பதினோராம் ஆண்டு தொடங்கிற்று.அருச்சுனன் ஆண்டிப்பண்டாரன் கோலத்துடன் அரனிடம் வரம் பெற்று வரப் போய்க்கொண்டிருக்கிறான்
சத்தம்
அரகராசிவ சிவாகண்டிகைசங்குஒலி கேட்கிறது
சபா மிருகம் = வெள்ளை யானை
இந்த ஒலியை வெள்ளானை கேட்கிறது.தன் நிழலைப் பார்த்தாலே குத்தும் யானை அதுஅருச்சுனன் செய்த அந்த ஒலியைக் கேட்டு அவனைக் கொல்ல ஓடிவருகிறதுவிழுந்ததுஅருச்சுனன் யானையைப் பார்த்தான்அம்பு எய்தான்வீரிட்டுக்கொண்டே விழுந்தது
பிராமணன்
மடிந்த யானையிலிருந்து பிராமணன் ஒருவன் தோன்றினான்.
அவனை ஆர் என்று அருச்சுனன் வினவினான். பிராமணன் சொல்கிறான்.
தேவலோகச் சிவன் பூங்காவனம்
இந்த வனத்தை நான் காத்துவந்தேன். உமையம்மை பூங்காவில் அழகி ஒருத்தியைப் கண்டேன். விரும்பினேன். அவள் கையைப் பிடித்தேன். என் கையைத் திமிறிப் பிடுங்கிக்கொண்டு உமை இருக்கும் இடத்துக்கு ஓடிவிட்டாள். உமை சிவன் பக்கத்துக்கு ஓடிவிட்டாள்.சிவனிடம் உமை முறையிட்டாள். சிவன் சபித்தார். யானை ஆனேன். சாப விடுதி எப்போது என்று வினவினேன்.அருச்சுனன் என்னைத் தேடி வருவான். அப்போது உன்னைக் கொல்வான். உன் சாபம் நீங்கும் என்றார். இப்போது அது நிகழ்ந்துள்ளது - என்றார் பிராமணர்.
குயவன் - குயத்தி
குயவன் பெயர் திருநீலகண்டர். அவன் நாட்டு அரசனுக்குப் பிறந்த நாள் விழா. விழாவுக்கு மண்பாண்டம் செய்து தருமாறு அரசன் ஆணாயிட்டான். குயவன் செய்து கொடுத்தான். அரசன் அவனுக்கு முத்து, பட்டாடை முதலியவற்றை நல்கினான்.அவற்றைப் பெற்றுக்கொண்டு குயவன் வீடு திரும்பினான். அப்போது கனத்த மழை. ஒரு வீட்டோரம் ஒதுங்கினான். அது தேவதாசி ஒருத்தி வீடு.அவள் தான் சாப்பிட்ட வட்டியைக் கழுவி சன்னல் வழியாக வெளியே ஊற்றினாள். அது குயவன் ஆடையை அழுக்காக்கிற்று. வருந்தினாள்.குயவனை உள்ளே அழைத்துச் சென்றாள். குளிப்பாட்டினாள். அவனுக்குப் பூசை செய்தாள். உணவளித்தாள். சந்தனம் தாம்பூலம் கொடுத்தாள். அன்று இரவு அவன் அவள் வீட்டில் இருந்தான். மறுநாள் தன் இல்லம் வந்தான்.
ஊடல்
குயவன் மனைவி குயத்தி கண்ணீர் விட்டாள். வேசி வீட்டில் விளையாடி வந்தீரோ என்றாள். உன்னோடு பேசமாட்டேன் என்றாள்.நல்லவன் மேல் பொல்லாங்கு சுமத்துகிறாய். நீ பெரும்பாவி என்றான்..காலம் உருண்டதுஅம்மை அப்பன் இருவரும் குயவன் குயத்தியைச் சேர்த்துவைக்க வந்தனர். ஆண்டி, ஆண்டிச்சி வடிவில் வந்தனர்.பசிக்கிறது. உணவு வேண்டும் என்றர். பசியாற்றினால் உங்களுக்குக் குழந்தைப்பேறு உண்டாகும் என்றனர்.
பத்து நாழிகை கழித்து வாருங்கள். உணவு தருகிறாம் என்றனர்.
இதோ நாங்கள் உணவு உண்ணும் திருவோடு. இதனை என் பாட்டனார் காலத்திலிருந்து வைத்திருக்கிறேன். இதனை இங்கே வைத்துவிட்டுச் செல்கிறேன். இதற்குப் பழுது நேர்ந்தால் உமக்குப் பழுது நேரும் என்றனர்.
- சங்கமரே! என் மனைவியிடம் சொல்லிச் சமைக்கச் சொல்லுங்கள் - என்றார் குயவர்.
திருவோட்டைப் வீட்டுப் பரணில் வைத்தார்.
நேரம் ஓடிற்று. சங்கமர் திரும்பி வந்து குயவரிடம் தன் திருவோட்டைக் கேட்டார். குயவர் வைத்த இடத்தில் தேடினார். திருவோட்டைக் காண முடியவில்லை. கை தட்டி மனைவியை அழைத்து சாடை காட்டித் திருவோடு எங்கே என்றார். புதிய திருவோடு ஒன்று விரைந்து செய்தார்.
உங்கள் திருவோட்டைக் காணவில்லை. இதோ புதிய திருவோடு என்று கொடுத்தார். அரசனிடம் முறையீடு.
பரதேசி உடைமையை நீ பறிக்கிறது தருமமோடா என்று கேட்டுப் பிரம்பால் அடிக்க அரசன் ஆணையிட்டான்.. அடித்தனர். குயவர் உடம்பெல்லாம் ரத்தம். குயவரை அரண்மனையைத் தாண்டிக் கொண்டு சென்றனர்.
அங்கே அம்மையப்பர் காளை மேலும், பிள்ளையார் பெருச்சாளி மேலும் குயவன் குயத்தியர்க்குக் காட்சி கொடுத்தனர்.
இது அந்தக் குயவன் நீலகண்டன் வேறு பெற்ற வனம் - என்று யானை மறைந்து தோன்றிய பிராமணன் கூறினான்.
- ஆண்டி அருச்சுனன் இந்த வனத்தைத் தாண்டி ஊர்க்குருவி வனம் சென்றான்.
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)

No comments:
Post a Comment