10
பேரண்ட வனம்
2
ஏலகன்னி
அரகரா
இந்தச் சத்தத்தை ஏலகன்னி கேட்டாள்ஆரடி தாதியரேஅலங்காரத் தோழிகளேவருவது யார் - என்றாள்
சங்கமர்
எவரோ ஒருவர்ஆதிசிவன் போல அழகர்ஒருகாலும் இப்படி ஒருவன் வந்ததில்லைஎன்று பார்த்தவர் ஓடிவந்து கூறினர்
நடந்தாள்
ஆண்டியைக் காண நடந்தாள்பார்த்தாள்உள்ளம் உருகினாள்
காம விகாரம்
ஐயா பெரியவரேஅறிவைப் படைத்தவரேதீரப் படித்தவரேதெளிவறிந்த சங்கமரேபுதிதாய்த் தபசு பண்ணப்புத்தி மிகக் கற்றவரேவருவீர் வருவீர் என்று வழி பார்த்துக் காத்திருந்தேன்எப்போது வருவீர் என்று இந்த வனம் காத்திருந்தேன்உன்மேல் ஆசைப்பட்டிருந்தேன்காம விகாரத்தால் களையிழந்து நிற்கிறேன்என்மார்பைப் பார்தோளைப் பார்வண்ணம் பார்காணக் கிடையாதுகருதினால் கிட்டாதுமார்போடு மார்பு அணைத்துதோளோடு தோள் அணைத்துசுகத்தைத் தாபொன்னும் பொருளும் உண்டுபொக்கிஷங்கள் மெத்த உண்டுதின்ன நல் பாக்கு உண்டுதிரவியங்கள் மெத்த உண்டுமருவி விளையாடலாம் - என்றாள்
சங்கமன்
சவகமன் அவளை ஏரெடுத்தும் பார்க்கவில்லை
ஏலகன்னி சொல்கிறாள்
ஏன்காணும் அருச்சனரேஏரெடுத்துப் பார்க்கவும் கூடாதாவாய் திறந்து பேசக்கூடாதாபேசினால் முத்து உதிர்ந்துவிடுமாவாய்முத்து உதிர்ந்தால் வாரி எடுக்கேனோஎன்னிடம் பேசினால் என்ன குறை நேர்ந்துவிடும்வாரும் என்று சொல்லி ஏலகன்னி வழிமறித்தாள்அருச்சுனன் சிவன் நினைவிலேயே இருந்தான்
ஏழு கோடு
ஏலகன்னி அவனுக்கு முன்னே 7 கோடு கிழித்தாள்உன் குரு மீது ஆணைஐவர் மேல் ஆணைஉன் தாய்மேல் ஆணைகோட்டைத் தாண்டி நீ செல்லக்கூடாதுஎன்று சொல்லிவிட்டு மண்டபத்துக்குள் சென்றுவிட்டாள்
எண்ணினான்
ஆரை நினைத்தால் தப்பலாம் என்று எண்ணினான்அந்த வனத்துக் கன்னியை நினைத்தான்சூலிகபாலிசுந்தரிதுர்க்கையேசண்டிப் பிடாரியம்மாசங்கரியேஏகவல்லிமண்ணுப் பிடாரியம்மாவழக்காடும் துர்க்கையரேஆபத்து வேளையிலே ஆதரிக்க வேணும் அம்மாஎன்று வேண்டினான்
காளி வந்தாள்
வாள்வளைதடிஅம்பு வில்ஆயுதம்ஏந்திக்கொண்டு வந்தாள்
ஆணைக் கட்டு விடுதலை
ஏலகன்னி கோடு போட்டுத் தடுத்திருந்த ஆணைக்கட்டுகளை விடுவித்தாள்அஞ்சாதே என் மகனேஆணையிட்டேன்தோஷம் இல்லை என்றாள்விசயன் அரனை நோக்கிச் சென்றான்
ஏலகன்னி
ஒப்பனை செய்துகொண்டாள்அருச்சுனனுக்காகச் சமைத்தாள்தாதியர் பள்ளியறைக் கட்டில் மெத்தைகளைச் சோடித்தனர்இன்னிசை முழக்கத்துடன் சென்று அருச்சுனனை மறித்தாள்
காளி அருளால்
கட்டுக் கோடுகளைக் கடந்து அருச்சுனன் போய்க்கொண்டிருந்தான்
பேரண்ட வனம் முற்றும்
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)
No comments:
Post a Comment