10
பேரண்ட வனம்
1
பத்தாம் ஆண்டு
பாண்டவர் இந்த ஆண்டு பேரண்ட வனத்தில் வாழ்ந்தனர்விசயன் பூத நாதனை நாடிப் போய்க்கொண்டிருந்தான்
பேரண்டன்
இந்த வனத்தில் இருப்பவன் பேரண்டன்அவன் தொலைதூரம் சென்றிருந்தான்அவன் மனைவி பேரண்டச்சிஅவள் தனிமையில் இருந்தாள்
அரகர என்னும் சத்தத்தை அவள் கேட்டாள்
பேரண்டச்சி அழகு
கொத்தளம் போல் மூக்குமத்தளம் போல் புட்டகம்ஊனமூஞ்சிக் குரங்கு போல் தலைசெம்பட்டை மயிர்சிங்கம் போல் பல் வளைவுஓணான் போல் முதுகுபனைமரம் போல் பல்பருவதம் போல் கண்கழுத்தில் கண்டமாலைஇடுப்பில் அரைக்கடுவன்துடையில் சிரங்கு
- அவள் முலை
நிற்கும்போது நிலத்தைத் தொடும்கப்பலில் வரும் கொப்பரைத் தேங்காய்தோணி மேல் வரும் சுரைக்காய்
- பல்லிலே பாசி
தாமரையில் ஒழுகும் நீர் போல் எச்சில்
உடம்பெல்லாம் ஒரே துர்நாற்றம்காயத்தில் கற்றாழை நாற்றம்அருகில் வந்தால் அசிங்கம்
மரவுரி ஆடைஅவள் ராட்சசிஅரக்கி
ஆண்டி அருச்சினன் அருகில் வந்து நின்றாள்
பண்டாரத்தைப் பார்த்ததும் ஆசைப்பட்டாள்
வாயைத் திறந்து பேசலானாள்
நில்லும் ஐயா சங்கமரே நெடுந்தூரம் போகாதே
உன்மேல் எனக்கு ஆசை
என்மார்பைப் பார்தோளைப் பார்மருவி விளையாட வா
அரைநாழி என்னுடனே அமர்ந்திருந்து போங்காணும்வருவீர் வருவீர் என்று வழி பார்த்துக் காத்திருந்தேன்
மன்மத பாணம் என் மார்பைத் துளைக்கிறதுஎன் மோகத்தைத் தீர்
என்னைப் போல் பெண் உனக்கு எங்கே கிடைப்பார்கள் - என்றாள்
விசயன் அவளைக் கண்டுகொள்ளவில்லை
அரகரா என்று சொல்லிக்கொண்டு நடந்தான்
- அவள்
ஆசைப்பட்டு வந்தேன்நீ என்னைப் பார்க்கவும் இல்லைநீ பாதகன் - என்றாள்
என் புருஷன் வந்த பின் உன்னை என்ன செய்கிறேன் பார் - என்றாள்
தன் வளையல்களை உடைத்துக்கொண்டாள்மார்பெல்லாம் கீறிக்கொண்டாள்தன் முகத்தில் தானே அறைந்துகொண்டு புலம்பலானாள்
பேரண்டன்
மனைவியின் அழுகைக் குரல் கேட்டு, பேரண்டன் வந்தான்வயிறு பசிக்கிறதா என்று 50 யானை தின்னக் கொடுத்தான்
அவள் சொல்கிறாள்
நான் பெண்ணாய்ப் பிறந்த பாவிநீ என்னை வழியில் கண்டு வாழ்க்கை கொடுத்தாய்உன் மனைவியாய் இருந்துகொண்டு ஊருக்கெல்லாம் ஆக முடியுமா
ஆண்டிப் பெரியவன் ஒருவன் வந்தான்தண்ணீர் தருபடி தன் குடுக்கையை நீட்டினான்கொண்டுவந்து கொடுத்தேன்
கஞ்சா குடிக்க நெருப்பு எடுத்துக்கொண்டு வா என்றான்கொடுத்தேன்
திருநீற்றை அள்ளித் தந்தான்அணிந்துகொண்டேன்
வாடி, போடி என்று பேசினான்தன் தொடையில் ஏறும் என்றான்என் கையைப் பிடித்து இழுத்தான்பொல்லாத்தங்கள் செய்துவிட்டுப் போய்விட்டான்
அவனைப் பிடித்துக்கொண்டு வாஇல்லாவிட்டால் செத்துப் போவேன் - என்றாள்
பேரண்டன்
சினத்துடன் எழுந்தான்ஆலமரத்தைப் பிடுங்கி வைத்துக்கொண்டு நடந்தான்
ஆரடா பண்டாரம் அறிவு கெட்ட சங்கமரேஎன் பெண்டாட்டியைத் துன்புறுத்தியவன்பிச்சை எடுக்கும் உனக்கு பெண்டாட்டி கேட்கிறதா - என்றான்
விசயன் நிகழ்ந்ததைக் கூறினான்பேரண்டன் தன் செவியில் வாங்கவில்லைபெண்டாட்டி சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான்
அருச்சுனன் அவனைக் கொல்ல, வில்லை வளைத்தான்மந்திரம் சொன்னான்எய்தான்பேரண்டன் தலை துண்டாயிற்று
பேரண்டச்சி புலம்பல்
மற்றொரு அம்பால் அந்தத் தலையை, பேரண்டச்சி வாசலில் விழும்படிச் செய்தான்.தலையைக் கண்டு பேரண்டச்சி புலம்பலானாள்
- மலையே பருவதமே மண்மேலே சாய்ந்தாயோ
- மேக மலையே நீ விண்ணுலகம் சேர்ந்தாயோ
- வச்சிரத் தூணே மண்ணோடு உளுத்தீரோ
- கல்லான தூணைக் கறையான் அரித்ததுவோ
- இரும்பான தூணே நீ இற்று விழுந்தாயோ
- எங்கேயோ வானம் இடிக்கிறது என்று இருந்தேன்
- தப்பாமல் அந்த இடி தலையில் விழ்ந்தது ஐயோ
- ஆரைச் சதம் என்பேன் இனி யாரைச் தஞ்சம் என்பேன்
- பார்த்த முகங்கள் எல்லாம் வேற்றுமுகம் ஆச்சுதையா
- சந்தன இரு புயத்தைச் சரிய வெட்டிப் போட்டாரோ
என்றல்லாம் சொல்லிக்கொண்டு அடிவானத்து இடி போல் அழுது புலம்பினாள்
தெய்வக் கண்ணியர்
பேரண்டச்சி அழுகுரல் கேட்டுத் தெய்வப் பெண்கள் வந்தனர்சத்த (ஏழு) கன்னியர் வந்தனர்
அழுதவளை ஏன் என்று கேட்டனர்பண்டாரம் பற்றி அவள் சொன்னாள்
கணவனை எழுப்பித் தரும்படி மாங்கலிய பிச்சை கேட்டாள்
கன்னியர் அருச்சுனனைக் கண்டனர்சீவனை வதம் செய்துவிட்டுச் சிவனிடம் போகலாமா - என்றனர்
அருச்சுனன் நடந்ததைக் கூறினான்.
பெண் பிழையைப் பொறுத்து அவளுக்கு மாங்கலியப் பிச்சை தரும்படி வேண்டினர்
தேவேந்திரனுக்கு ஓலை
தேவேந்திரனேதந்தையேமந்திரக் குந்தி பெற்ற மகன் அருச்சுனன் எழுதுகிறேன்பேரண்டன் உயிர்பிரமலோகம்எமலோகம்எங்கிருந்தாலும் திரும்ப அனுப்பி வை - என்று எழுதி தன் அம்பில் கட்டி அனுப்பினான்.
தேவேந்திரன் எமனிடம் சென்றான்பேரண்டன் உயிர் ஆட்டுவதற்காகச் செக்கில் பாடப்பட்டிருந்தது
அதனை இந்திரன் பெற்றான்திருப்பி அனுப்பி வைத்தான்பேரண்டன் பிழைத்தெழுந்தான்
பேரண்டச்சி அருச்சுனனை வணங்கினாள்ஆபத்து வேளையில் அழைத்தால் உனக்கு நான் உதவுவேன் என்றாள்
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)

No comments:
Post a Comment