9
ரோம ரிஷி வனம்
பாண்டவர்கள் ரோம ரிசி வனத்தில் வாழ்ந்தனர்ரோம முனிவர் பாண்டவர் பன்னசாலைக்கு வந்தார்
தருமர்
தருமர் ஆசனம் தந்து முனிவரை அமரச் செய்தார்குருகுல வம்சத்தில் குந்தி மைந்தர் ஐந்து பேர்அவர்களில் தருமன் நான்வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் நால்வரும் என் தம்பியர்தரும்புரம் நாட்டை ஆண்டுவந்தோம்என் பெரிய தந்தை மகன் துரியோதனன்அவன் எங்களைச் சென்மப் பகையாளி எனக் கொண்டான்அதனால் அவன் எங்களைக் கொல்ல, பல சதிகள் செய்தான்மாயன் புண்ணியத்தால் எல்லாவற்றிலும் தப்பிப் பிழைத்தோம்
முனிவர்
ஐவரில் ஒருவன் பரமசிவன் கையில் படைக்கருவி பெற்றால் மாற்றானை வென்று அரசு புரியலாம் என்றார் முனிவர்மாயன் உதவி இல்லாமல் அதனைப் பெற இயலாது - என்றார் தருமர்
அப்படியானால் மாயனை அழையுங்கள் - என்றார் முனிவர்
தருமர்
அடியளந்த மாயவரே ஆண்டவரே வாருமையா - என்று தருமர் வேண்டினார்மாயவர் வந்தார்தருமர் அவரை மும்முறை வலம்வந்து வணங்கினார்பரமசிவனிடம் பாசுபதம் பெறுமாறு முனிவர் கூறுகிறார். நீர்தான் உதவவேண்டும் என்றார் தருமர்
பாட்டன்
பாண்டவர் பாட்டன் வேத வியாசர். அவரையும் அழையுங்கள் என்றார் மாயன்.வேத வியாசர் வந்தார். தருமர் வணங்கினார்.பரமனிடம் பாசுபதம் பெற ஆரைப் போகச் சொல்லலாம் என்று பாட்டன் எண்ணினார்தருமரைப் போக விட்டால் அவருக்கு அரன் பாதம் தெரியாதுவீமனால் பெற முடியாதுநகுல சகாதேவரால் முடியாதுஅருச்சுனன் ஒருவனே அரனைக் காண வல்லவன்என்றார் பாட்டன்
மாயன் அருச்சுனனை அழைத்தார்.
கயிலாயம் சென்று கர்த்தாவைக் கண்டு அதிக வரம் பெற்றுக்கொண்டு வா. வழியில் ஊர்வசி, மேனகை போன்றவர் அழகில் மயங்கிவிடாதே. பெண்களைத் தங்கை தமக்கை என்று சொல்லிவிட்டுப் போய்விடு - என்றார்
அருச்சுனன்
அப்படியே நடந்துகொண்டு அரனிடம் வரம் பெற்றுவருகிறேன் - என்றான் அருச்சுனன்.வழியில் சிவனாலேயே எந்தச் சோதனை வந்தாலும் வெற்றி கொள். வரும்போது ஏலகன்னி என்னும் பெண்ணை மணந்துகொண்டு வா - என்றார் மாயன்
அருச்சுனன் தன்னைச் சூலபாணி போல் ஒப்பனை செய்துகொண்டான்.
ஒற்றை வேட்டிபிரம முடிஉருத்திராட்ச மணிமணிமாலைகள்நாகமணிக் கங்கணம்வேலாயுதம்சூலாயுதம்புலித்தோல் ஆசனம்இடுப்பில் கிண்கிணிமயில்தோகைகுருயோக புத்தகம்சுரை-ஓடுகமண்டலம்கஞ்சாக் குடுக்கைசங்குகண்டிகைகணுக்கால் சிலம்புகால்மிதிமுதலானவற்றைத் தரித்துக்கொண்டான்
மாயனும், அவனது பாட்டனாரும்
அருச்சுனனை வாழ்த்தி வழியனுப்பினர்
அருச்சுனன் விரைந்தான்
மாயன் கன்னிப்பெண் உருவில்
அருச்சுனனைச் சோதிக்க வந்தார்.
காயாம்பழம் போல் கறுப்பு மேனிஈச்சம் பழம் போல் இருள் கறுப்பு மேனிசொருகிய சவுரி முடிகொண்டைக்குக் குப்பிகொலுசுக்கு முத்துகாதில் கம்மல் ஜிமிக்கிகழுத்தில் கனக மணித் தாழ்வடம்நடுக்கழுத்தில் காரைஒற்றைச் சரடுஇரட்டைச் சரடுமுத்துச் சரப்பளிமோகன மாலை
அணிந்துகொண்டு அன்னம் போல் நடந்துவந்தார்.
ஆசை உரை
ஐயா பெரியவரேஅறிவுள்ள சங்கமரேதீரப் படித்தவரேதெளிவுள்ள சங்கமரேபுதிதாய்த் தபசு பண்ணப்புத்தி மெத்த கற்றவரேஎங்கிருந்து போறீர்கள்இயலான சங்கமரேகோடி சரணம் ஐயாமும்பிட்டேன் நான் - என்றார்உம்மைக் கண்டபோதேஉருகுதே தேகமெல்லாம்காமக் கலை வேண்டும்மன்மதக் கலை வேண்டும்அரைநாழி என்னைஅணைத்திருந்து போகக்கூடாதாஒரு நாழி என்னுடனேஉளம் மகிழ்ந்து பாகக்கூடாதாஎன் மார்பைப் பார்தோளைப் பார்வண்ண முலையைப் பார்என் அழகைப் பார்
என்னைப்போல் அழகி எங்கே கிடைப்பார்கள்
தேடக் கிடைக்காதுதேசத்தில் கிட்டாதுகாணக் கிடைக்காதுகலியுகத்தில் கிட்டாதுமார்போடு அணைத்துமகாவிடாய் தீரும் ஐயாதோளோடு அணைத்துசுகம் மெல்ல தாரும் ஐயாபஞ்சணை மெத்தையிலேகொஞ்சி விளையாயாடும் ஐயாகுங்கும மெத்தையிலேகூடி விளையாடும் ஐயாஎன்று வழி மறித்தாள்.
அருச்சுனன் அழகியை ஏரெடுத்துப் பார்த்தான்
எண்ணாத எண்ணங்களை யெல்லாம் ஓட்டினான்கன்னியரிடம் மயங்காதே என்று மாயன் சொன்னதையும் நினைத்தான்அரன் இருக்கும் கைலாசம் செல்கிறேன்வம்பு பண்ணாதேவழி மறிக்காதேநீ என் தாய், தங்கை, அக்கா போன்ற பெண் நீதூரத் தள்ளி நில்தோசம் பண்ணாதேஎன்று சொல்லிக்கொண்டு நடந்தான்
அழகி சொன்ன நீதி
பெண்சாதி வந்தால் பெற்ற தாய் என்னலாமாமுறைப்பெண்ணை ஆத்தாள் என்னலாமாஆண்டிக்கு முறை இல்லைஅரிவாளுக்கு உறை இல்லைஎருகுக்குப் பேச்சு இல்லைஇடையனுக்கு முறையும் இல்லைஅரைநாழி போகம் அமர்ந்திருந்தால் போதும் ஐயாமார்போடே மார்பு அணைத்து மருவி முத்தம் தாரும் ஐயாதின்னப் பழம் இருக்கச் சேனை தூரம் போவானேன்கட்டிலுண்டு மெத்தை உண்டு
கால்பிடிக்கத் தாதி உண்டு
சோழிச் சதுரங்கம் சொக்கட்டான் ஆடலாம் வாதின்ன நல்ல பாக்குமுண்டுசெலவழிக்க ரொக்கம் உண்டுவாரும் ஐயா சங்கமரேமனைக்கு நாம் போயிருப்போம்
தானாக வந்த பெண்ணைத் தள்ளிவிட்டுப் போகலாமா
போனால் பலன் இல்லைபித்தனைக் காணல் அரிதுவிளையாடிப் போனாலே வித்தகரைக் கண்டிடலாம்இவ்வாறு சொல்லிக்கொண்டு முலையைத் தூக்கிக் காட்டினாள்
கொல்ல
வழி மறித்தவளை அருச்சுனன் கொல்ல நினைத்தான்வில்லை எடுத்து நாண் பூட்டினான்மோகினி மறைந்துவிட்டாள்.மாயன் அங்கே வந்தார்இது மாயனின் மாய வேலை என்பதை உணர்ந்துகொண்டான்மாயனை வணங்கினான்மாயன் துவாரகை மீண்டான்
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)

No comments:
Post a Comment