Pages

Friday, 12 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 200


8
குருபர ரிஷி வனம்
குருபர முனிவர் வனம் 

பாண்டவர்களின் காட்டு வாழ்க்கையில் எட்டாம் ஆண்டு இந்த வனத்தில் நடக்கிறது 

துரோபதை தனிமையில் சென்று வனத்தின் அழகினைக் கண்டு மகிழ்கிறாள் 

உத்த குருபரர் அந்த வனத்தில் தவம் செய்யும் முனிவர் 

அவர் நீராடும் குளம் 
அதில் பாயும் ஆறு அகிலாண்ட காவேரி
அந்த ஆறு பாரிசாத மலர் ஒன்றை அடித்துக்கொண்டு வந்தது
அதனை மணமும் அழகும்  அவளை ஈர்த்தன 

வீமனிடம் சொன்னால் பரித்துத் தருவார் என எண்ணினாள் 
காணாதது கண்டேன் 
பாராதது பார்த்தேன் 
அந்த மலரைப் பறித்துத் தா 

அனுமன்

வீமன் அந்தப் பூ இருக்கும் மரத்தைத் தேடிக்கொண்டு சென்றான்

அந்த மரத்தின் காவலாளி அனுமன்
அனுமன் வீமனைப் பார்த்தார்

ஆரடா நீ
எங்கே போகிறாய் - என்றார்

குரங்கா

சாண் உயரம் உள்ள குரங்கா என்னைத் தடுப்பது என்று எண்ணி அதன் முகுகில் குத்தினான் 

அனுமான் வீமனைக் குத்த இரண்டு ஓசைகளும் இடி போல் கேட்டன

என்னை அடித்தவனை இக்கணமே கொன்றிடுவன் - என்று வீமனை அடித்தான் 

வீமன் மல்லாந்து வீழ்ந்தான்
மூர்ச்சையானான் 
மூர்ச்சை தெளிந்து எழுந்தான்
 
அனுமன் கண்டான் 

என் அடி பட்டவர் யாரும் எழுந்தது இல்லை 
இவன் எழுந்திருக்கிறான் 
இவன் யார் என்று எண்ணினான்

ஆரடா நீ
நான் அனுமான் தூதன் - என்றான் 

அண்ணா

நீ அண்ணன் என்று அறியாமல் செய்துவிட்டேன்   
என்று சொல்லிக்கொண்டு மூன்று முறை சுற்றிவந்து அனுமனை வணங்கினான். 

நான் குந்தி மகன் வீமன் என்றான்
இருவரும் உறவாடிக்கொண்டனர் 

எதற்காக இங்கு வந்தாய்

பாஞ்சலன் மகளுக்குப் பாரிசாத மலர் பரிக்க வந்தேன் 

குருபர முனிவர் வனத்தில் ஏழு லட்சம் கிங்கிலியர் காவலாக உள்ளனர் 
அவர்கள் உன்னைக் கொல்ல நினைப்பர் 

அவருடைய புட்ப வனம் ஆருக்கும் தெரியாது 
எப்படிப் போய் வருவாய் - என்றான்  அனுமன் 

ஆதலால் உன்னை என் வாலில் கட்டித் தூக்கிச் செல்கிறேன் 
நீ ஆருக்கும் தெரியாமல் மலர்களைப் பறித்துக்கொண்டு வந்துவிடு - என்றான் அனுமன் 

வாலில் கட்டித் தூக்கிச் சென்றான் 

வீமனை வனத்தில் அவிழ்த்து விட்டான் 

வீமன் பூ மரங்களை சின்னாபின்னம் ஆக்கினான்
 
காவலர் தடுத்தனர் 

தடுத்தவர்களை  வீமன் அதம் செய்தான் 

தப்பிப் பிழைத்தவர்கள் முனிவரிடம் முறையிட்டனர் 

முனிவர் பல்லக்கில் ஏறிக்கொண்டு வந்தார்
 
வீமனைச் சபிக்க வந்தார் 

மாயன் இதனை அறிந்தார் 
தருமனிடம் வந்தார் 

வீமன் எங்கே என்றார் 
அறியேன் என்றார் தருமர் 
பூ பறிக்கப் போயிருக்கிறார் என்றாள் துரோபதி

மாயன் தருமரை அழைத்துக்கொண்டு முனிவரிடம் வந்தார்

தருமரை யார் என்று முனிவர் வினவினார் 

மாயன் 

அரனாரின் ஆதி கயிலாயத்தில் குருபர முனி பெயரால் ஒரு வேளை மணி அடிக்கப்படுகிறது

இவர் தரும ரிசி

இவர் பெயரால் மூன்று வேளை மணி அடிக்கப்படுகிறது - என்றார் 

கேட்டதும் முனிவர் தருமரை வணங்கினார்

குருபர முனி இருவருக்கும் அரியணை இட்டார் 
அமர்ந்தனர். 

மாயன்

அறியாமலும், தெரியாமலும் அடியார் செய்த தவறுகளை பெரியவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்
வனத்தை அழித்த வயனத்தைச் சொல்லுங்கள் என்றார் மாயவன்

அப்போது காவலர் வீமனை அழைத்துக்கொண்டு வந்தனர்

வீமனைக் கண்டதும் மாயன் வீமனை வணங்கினார் 

வீமன் முனிவரை வணங்கினான்

முனிவர் வெலவெலத்துப் போனார்

ஏன்

எதற்காக முனிவரின் வனக் காவலர்களைக் கொன்றாய் என்று மாயன் வினவினார். 

வீமன் சொன்னான் 

குருபர முனிவரின் பெருமையை உலகில் பேசப்பட்டதைக் கேட்டேன். முனிவரைப் பார்க்க வந்தேன். காவலர் தடுத்தனர். கொன்றேன். பொறுத்தருள வேண்டும். இப்போது முனிவரைக் காணும் பேறு பெற்றேன்  

கருதி தவம் செய்தாலும் காணற்கரிய முனிவரைக் கண்டேன் - என்றான்

முனிவர் என் ஆசிரமம் வரவேண்டும் என வேண்டினான். 

எட்டாம் ஆண்டு முடிந்தது

புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில்  சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)

அனுமன் - வீமன் சண்டை

அனுமன் மாயனை வணங்குதல்


No comments:

Post a Comment