17
ராமரஷி வனம்
பாண்டவர் ஓராண்டு காலம் சூரியவனத்தில் இருந்துவிட்டு இரண்டாமாண்டு ராமரஷி வனத்துக்கு வந்தனர்.
கோலி வைத்த சும்மாட்டில் கூடைகூடையில் குடிவாழ்க்கைக்கான பொருள்கள்
ஆகியவற்றுடன் நடந்தனர்
முன்னைமுசுண்டைதூதுவளைபன்னைக் கலவைபறப்பைப்புளிக் கரனை
ஆகியவற்றைத் தின்றுகொண்டு திரிந்தனர்
இந்த வனத்தில் ஐந்து அடுக்குப் பர்னசாலை கட்டி அதில் இருந்தனர்
இந்த வனத்தில் வாழ்ந்த முனிவர் ராமரஷி
அரிராமாராமராமாஅரிகரிகோவிந்தாதாதர் தப்படிக்கும் சத்தம்
எது கேட்டாலும் அவர் சினம் கொள்வார்
தடியை எடுத்துக்கொண்டு வந்து சொன்னவரை அடிப்பார்
இப்படியிருக்கும் காலத்தில் ஒருநாள் மாயன் பெருமாள் வந்தார்
தாதனாகத் தப்பு அடித்துக்கொண்டு வந்தார்.
ஹரி ஓம் ஹரி ஓம் - என்று சொல்லிக்கொண்டு தப்பு அடித்தார்.
சங்கு ஊதினார்
ஆனை மேல் அரிசிங்கம் பாய்ந்தது போல் ராமரிசி அந்தத் தாதனை அடித்தார்
பெருமாள் விசுவரூபம் எடுத்தார்
கண்ட முனிவர் கை கால் விடவிடத்து நடுங்கினார்
சுவாமி சரணம்
என்று சொல்லிக்கொண்டு பணிந்தார்
என் அடியவர்களை நீ வணங்கவேண்டும்அவர்களுக்கு நீ உணவளிக்க வேண்டும்அவ்வாறு செய்யாமல் அவர்களை இளிவாகப் பேசுகிறாய்அடிக்கிறாய்ஏன் - என்றார்
முனிவர் சொல்கிறார்
தவமிருந்து தேடினேன்தங்கள் காட்சி கிடைக்கவில்லைஅதனால் இப்படிச் செய்தேன்என்றார்.
இன்று தங்களைக் கண்டேன்பாவங்கள் நீங்கிப் புனிதன் ஆனேன்
காயாம்பூ வண்ணர் சொல்கிறார்
இதுவரை நீ செய்த பாவத்துக்காக 1000 ஆண்டு பாம்பாய் கிடப்பாயாக என்று சாபமிட்டார்.
என் சாபம் எப்போது நீங்கும் - என்றார் முனிவர்
தருமன் தம்பி நால்வரையும் நீ விழுங்குவாய்
அருச்சுனன் அம்பு உன் உடலைக் கிழிக்கும்
அப்போது அங்கு நான் வந்து உனக்கு விடுதலை தருவேன்
என்றார் மாயன்.
இது தெரியாமல் பாண்டவர்கள் அந்த வனத்தில் வாழ்ந்தனர்
மாயன் சொன்னது போல் அவர்கள் வடக்குப் பக்கம் செல்வதில்லை
ஒருநாள்
வீமன்
அடங்கா வீமன்
ஆங்காரம் கொண்ட வீமன்
வடக்குப் பக்கம் போக்ககூடாது என்று மாயன் சொன்னாரே
ஏன்
காய்கனிகள் கிடைக்காதோ
இராட்சதர்கள் இருப்பார்களோ
முனிவர்கள் தவம் செய்வார்ளோ
வடக்கில் என்னதான் அதிசயம்
பார்க்கலாமே - என்று எண்ணினான்.
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)
No comments:
Post a Comment