Pages

Wednesday, 3 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 16

பக்கம் 13

காலடி நோக நடந்து என்னைத் தேடி இருவரும் வந்திருக்கிறீர்கள். 
நான் என்ன செய்யவேண்டும் 
என்று தருமர் வினவினார். 

நீ உணவு அளிக்க வேண்டும் என்று  உன்னிடம் வந்திருக்கிறேன் என்றார் துருவாச முனிவர். 

இப்போதே உணவளிக்காவிட்டால் உங்களைக் கல் ஆகுமாறு சபிப்பேன் என்றார். 

தருமர் மாயனைப் பார்த்துப் புலம்பலானார். 

நாங்கள் மடியும் காலம் வந்துவிட்டது 
என்ன செய்வோம் என்றார்

மாயன் வீமனை அழைத்தார்

பலா இலைகள் பறித்துவா

பாறாங்கல்லுக்கு மேலே காமதேனு பால் இருக்கும். 
அதனைக் கொண்டு வா 

தாமரைப் பொய்கையில் தண்ணீர் கொண்டுவா
என்றார் 

வீமன் கொண்டுவந்தான் 

மாயன் மாயை
உணவு வந்தது 

பலா இலையில் முனிவருக்கு உணவு படைத்தனர் 
உண்ணும் உண்ணும் என்று உபசரித்தனர் 

முனிவர் உண்டார் 
பசி தீர்ந்தார் 
தாம்பூலம் போட்டுக்கொண்டார் 

தேவர் அருந்தும் திவ்யமான போஜனம் - என்று கூறிப் பாராட்டினார். 

கொல்லலாம் என்று வந்தவர் வாழ்த்தினார் 
நாராயணனை வணங்கினார்
எழுந்து நடந்தார்

சூரியவனத்தைத் தாண்டி, துரியோதனனிடம் வந்தார். 

துரியோதனன் வரவேற்றான்
ஐவர் மடிந்தனரா என வினவினான் 

அவர்களைப் போலச் சிறந்த உணவு இதுவரை யாரும் எனக்குப் படைக்கவில்லை - என்றார் 

ஐவர் கைகளால் நீ அழிவாயாக - என்று துரியோதனனைச் சபித்துவிட்டுச் சென்றுவிட்டார் 

மாயன் நடந்ததையெல்லாம் தருமருக்கு விளக்கினார். 
வேறு வனத்துக்குச் செல்லுங்கள் என்றார் 

வடதிசையில் செல்ல வேண்டாம் என்றார் 

ஏதாவது துன்பம் வந்தால் என்னை நினையுங்கள் என்றார் 

கருடனில் ஏறிச் சென்றார். 

புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில்  சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)

பாண்டவர் துருவாச மாமுனிக்கு உணவு படைத்தல் 


No comments:

Post a Comment