7
கெந்தருவ பருவதம்
1
ஏழாம் ஆண்டு
பாண்டவர்கள் காட்டில் வாழும் வாழ்க்கையின் 7 ஆம் ஆண்டு கந்தருவ மலையில் தொடங்குகிறதுஉணவுக்காகக் கூடையைத் தலையில் வைத்துக்கொண்டு பன்னசாலைக் குடிசையில் வாழ்கின்றனர்
மாயன்
மாயன் நீராடிய பின் சிவனுக்குப் பூசை செய்தார்நீராடிய பின் நீரை அள்ளி நீரில் ஊற்றிச் சூரியனுக்குப் பூசை செய்தார்
கெந்தருவன்
கந்தருவன்
அப்போது கந்தருவன் ஒருவன் வானில் பறந்துவந்தான்.அவன் வெற்றிலை எச்சிலைத் துப்பினான்அது தண்ணீரை அள்ளி ஊற்றும் மாயவன் கையில் விழுந்ததுமாயவன் வெகுண்டார்அவ்வலரிக் கண் இரண்டும்செவ்வலரி ஆயினநீல விழி இரண்டும்நருப்புத் தனல் ஆயினகோவைப்பழம் போன்ற கண்கள்பாவக்காய் போல ஆயினஅவனைக் கொல்லச் சக்கரத்தை விட்டார்
அரன்அமரர்பிரமன்இந்திரன்தேவர்கள்வந்து வணங்கித் தடுத்தாலும் இணங்காமல் அவன் தலையை அறு - என்றார்
நாரதர்
சக்கரம் வந்துகொண்டிருந்ததுகந்தருவன் நாரதர் எதிரில் வருவது கண்டான்வணங்கினான்சக்கரம் வருவதைச் சொல்லித் தப்பிக்க வழி கேட்டான்ஆதி சிவனிடம் அடைக்கலம் பெறு என்றார்
அரன்
கந்தருவன் அரனிடம் ஓடினான்அரவா!சங்கரா!சதாசிவா!சாந்தலிங்கா!தாணுவை!வெள்ளி ரிஷபம் ஏறும் வித்தகா!முக்கண் முதலவரேதிரிபுரம் எரித்த தேவாகாலனைக் கண்ணால் எரித்த கடவுளேகங்கை அணிந்தவனேகடுக்கை தரித்தவனேதிங்களைச் சூடியவனேஅந்தி வண்ணாஉனக்கு அபயம் என்றான்ஆரடா கந்தருவாஆரு உனக்குப் பகைவந்த வயணம் என்னதாம்பூலம் உமிழ்ந்ததுசக்கரம் வருவதுபற்றிக் கூறினான்கார்வண்ணன் எனக்குப் பகைஅதனால் நான் உன்னைக் காக்க முடியாதுபிரமனிடம் செல்என்றார்
பிரமன்
பிரமனிடம் வந்தான்உன்னை ஆதரித்தால் உலகளந்தான் பொல்லாப்பு வரும்எமனிடம் செல்என்றார் பிரமன்
எமன்
மாயனை எதிர்த்து என்னால் நிற்க முடியுமாமுடியாதுஆர் எதிர்த்தாலும் அருச்சுனன் வெல்வான்அவனிடம் செல்என்றான்
அருச்சுனன்
மாயன் சக்கரம் கொல்ல வருவது பற்றிக் கந்தரிவன் அருச்சுனனிடம் வந்தான்மாயன் பெருமாளுக்கு அன்பான வார்த்தை சொல்லி எந்த விதத்திலாவது என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிக்கொண்டு அருச்சுனனைச் சரணடைந்தான்.எந்த வகையிலாவது உன் இடரை அகற்றுவேன் என்று சொல்லி அருச்சுனன் கந்தருவனுக்கு அடைக்கலம் தந்தான்.
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)
No comments:
Post a Comment