Pages

Thursday, 11 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 163


காட்டில் பாண்டவர்க்கு ஆறாம் ஆண்டு

6
காமதேனு பர்வதம் 
காமதேனு மலை
2

போர்

திரியனைச் சித்திரசேனன் தாக்கினான் 
படையும் படையும் தாக்கின

காமதேனு - குதிரை - போர் 

காமதேனுக் காளைகள் திரியன் குதிரைகளைக் கொம்பால் குத்தின
குளம்பால் மிதித்தன
குதிரைகளை அதம் பண்ணின 

சாவு

மாண்டவர்கள் மட்டுமிதம் இல்லை
செத்தவர் எண்ணிக்கை செப்ப முடியாது 

சித்திர சேனன் அம்புகளைத்  தோடுத்தான் 

திரியன் சொன்னான் 

எவனோ தெரியாது இங்கு வந்தான் சண்டை பண்ண 
எதிர்த்துத் தாக்குங்கள் - என்றான் 

இருதிறப் படைகளுக்கும் போர் 

அளவிட முடியாத அம்பு வேகம் 
விதம் விதமான பாணங்கள் 
கோடிக்கணக்கான பாணங்கள் 

துரியன் விடும் பாணம் சொல்லி முடியாது 
கர்னர் விடும் பாணம் கணக்கிடப் போதாது 
துரோணர் விடும் பாணம் சொல்ல முடியாது 
கிருபாச்சாரி கேடான பாணம் விட்டார் 

பீஷ்மாச்சாரி வேண பாணம் விட்டார் 
அசுவத்தாமா அநேக பாணம் விட்டார் 
சகுனி சரம் மேல் சரம் பொழிந்தார் 

வாயு அஷ்திரம்
வருணன் அஷ்திரம்
சந்திர அஷ்திரம்
இந்திர அஷ்திரம்

கண்டான் சித்திரசேனன்  

தாக்க வந்த அஷ்திரங்களை அம்பு எய்து தடுத்து வீழ்த்தினான். 
மேலும் அம்புகளை எய்தான் 

ஆனை
குதிரை
ஒட்டை
மேல் இருந்த துரைகளை வீழ்த்தினான் 

தலைகளைத் தென்னங்குரும்பை போல் திருகினான் 
ஆலைக் கரும்பு போல் நசுக்கினான் 
நுங்கு போல் விழிகளைத் தோண்டினான் 
சதைகளை அறுத்துக் கழுகுக்குப் போட்டான் 

ஈரல்
குடல்
தொப்பை 
சரிந்தன 

பாளையங்கள் 

தண்ணீர் தண்ணீர் என்று தவித்தன 
அபயம் அபயம் என்று அலைந்தன 

திரியோதனன் தன் தேரை இழந்து நின்றான்

அவன் உடம்பில் அனேக துளைகள்
அவனைப் பிடித்துத் தேர்க்காலில் கட்டினர் 

தேவலோகம் கொண்டு சென்றனர் 
துரியாதனன் என்னென்னமோ எண்ணிப் புலம்பினான் 

ஆரோ தெரியாது ஆகாசம் கொண்டு போறான்   
எவனோ தெரியாது எமலோகம் கொண்டு போறான் 

ஐவரை அனர்த்தம் பண்ண வந்தேனே
என்னை ஒருவன் இழுத்துப் போறானே 
என்ன செய்வேன் 
என்று ஓலமிட்டான் 

உடன் வந்த அரசர்கள் எல்லாரும் என்னைக் கைவிட்டனர் 
ஆர் வந்து காப்பார்க்கள் 
எவர் வந்து காப்பார் 

கூவிப் புலம்பினால் குரல் கேட்டுத் தருமர் தம்பியரை அனுப்பிக் காப்பாற்றுவார் என்று எண்ணினான் 

இவனிடம் தப்பிப் பிழைத்தால் பின் தருமரைக் கொன்றிடலாம்

என்றெல்லாம் எண்ணினான் 

புலம்பல் 

அண்ணாவே அண்ணாவே 
அழகான தருமலிங்கம் 
ஐவரைப் பார்க்க வந்தேன் 
எவனோ தெரியாது என்னை இழுத்துப் போகிறான் 
ஆவியைக் காத்தாலே அனேக கோடி புண்ணியங்கள் 
என்று கூச்சலிட்டான்

கூச்சலைத் தருமர் கேட்டார் 

அவருக்கு மனம் கொள்ளவில்லை 
அருச்சுனனை அனுப்பினார் 
துரியனைக் காப்பாற்றி அழைத்து என்றார் 

அருச்சுனன் துரியன் செய்த கொடுமைகளை அண்ணனிடம் பட்டியலிட்டான் 
துரியன் செத்தால் பழுதில்லை என்றான் 

தருமர் விளக்கம் 

அவரவர் செய்த வினை அவரவர் அனுபவிப்பர் 
நன்மை செய்தவர்க்கு நன்மை விளையும் 
தீமை செய்தவர் இருளில் இடர்படுவர் 

வஞ்சனை  வேண்டாம் 

மாயன் துணை இருப்பார் 
என் ஆணை
இப்போதே சென்று காப்பாற்றி அழைத்து வா - என்றார்

அருச்சுனன் போர்க்கோலம் 

நீட்டிடும் கால்களுக்கு நெருஞ்சிப்பூ சல்லடம்
மண்டியிடும் கால்ளுக்கு மாதுளம்பூ சல்லடம்
குந்தியிடும் கால்ளுக்குக் குறிஞ்சிப் பூ சல்லடம்
தூக்கி வைக்கும் கால்ளுக்குத் துத்திப்பூ சல்லடம்

சல்லடங்கள் இட்டுமல்லோ  தட்டி வரிந்து க்கட்டி 
சிங்காணி வில் எடுத்துக்கொண்டு 
விசயன் வந்தான்

அருச்சுனனுக்கும் சித்திரசேனனுக்கும் சண்டை

இருவருக்கும் விற்போர்
யாருக்கும் யாரும் சளைக்காமல் சண்டையிட்டுக்கொண்டனர் 

சித்திர சேனன் வினா 

ஆரடா தம்பி நீ ஆணமை உள்ள சேவகனே
எவனடா தம்பி நீ எதிர்த்து சண்டை பண்ண வந்தாய்
உன் ஊர் எது
உன் தகப்பபன் யார்
என்று சித்திரசேனன் வினவினான்

அருச்சுனன்
 
யுத்த களத்தில் உறவின் முறை கேட்பாரோ
படுகளத்தில் ஒப்பாரி கேட்பாரோ பாருலகில்
என்றான் அருச்சுனன் 

என்றாலும் 
முதலில் நீ சொல் 
பின்னர் நான் சொல்கிறேன் 
என்றான் அருச்சுனன் 

சித்திரசானன் 

என் தந்தை தேவேந்திரன் - என்றான் சித்திரசேனன்

அருச்சுனன் 

அண்ணா
என்னை அறியாயோ
என் தாய் குந்தியம்மாள் 
என் தந்தை தேவேந்திரன் என்றான் 

சித்திரசேனன் 

ஒரு தந்தை பெற்ற பிள்ளை ஆனதால் என் அம்புகளுக்கு நீ பிழைத்தாய் 
என்றான் சித்திரசேனன் 

இருவரும் ஒருவருக்கொருவர் உறவாடிக்கொண்டனர் 

  • துரியன் என்ன செய்தான் - அருச்சுனன் வினா
  • காட்டில் மேய்ந்த காமதேனுப் பசுக்களை கவர்ந்து சென்றான் 
  • பிடித்து வர என் தந்தை என்னை அனுப்பினார் - விடை

  • இவன் படைகளை அழித்தேன்
  • இவனைத் தந்தையிடம் அழைத்துச் செல்கிறேன் - விடை 

  • நாளை அழைத்துச் செல்லலாம் 
  • இன்று இவனைக் கட்டவிழ்த்து விடு - அருச்சுனன் கேட்டான் 

சித்திரசேனன் மகிழ்ந்தான் 
துரியனைக் கட்டவிழ்த்து விட்டான் 

தந்தையிடம் சென்றான்
நடந்ததைக் கூறினான் 
தேவேந்திரன் மகிழ்ந்தான் 

அருச்சுனன் துரியனை தருமரிடம் அழைத்து வந்தான் 

துரியன் சொல்கினான் 

அண்ணா
ஆசையோடு உன்னைப் பார்க்கலாம்  என்று காட்டுக்கு வந்தேன் 

வேடரைப் போல வில்லேந்தி அலைவானேன் 
அத்தினாபுரம் ஆளலாம் 
என்னொடு வாருங்கள் - என்றான் துரியன் 

தருமர்

ஆறு ஆண்டு ஆயிற்று 
இன்னும் சில காலந்தானே 
நீ சொன்னபடி இருந்துவிட்டு வருகிறேன் 
சொன்னபடி சீமை தந்தால் போதும் - தருமர் கூறினார் 

கனிகள்

தருமன் கூறியபடி வீமன் கனிகள் பறித்துவந்தான்
துரியோதனன் உண்டான் 
பாண்டவரை இந்தக் காட்டிலேயே கொல்ல வேண்டும் என்று தினைத்துக்கொண்டே  கனிகளை உண்டான். 

கனிகளை மூட்டையாகக் கட்டினார் 
கொண்டுசென்று அத்தினாபுரத்தில் எல்லாருக்கும் கொடு - என்றார் தருமர்

காட்டைக் கடந்ததும் துரியன் பழமூட்டையை வாங்கிக்கொண்டு அருச்சுனனை அனுப்பிவிட்டான். 

நடந்தவை அனைத்தையும் துரியன் மாமன் சகுனியிடம் சொன்னான். 
சிலநாள் இதனைப் பேசிக்கொண்டிருந்தனர் 


சித்திரசேனன் துரியோதரனைத்
தேர்க்காலில் கட்டி இழுத்துச் செல்லல் 


No comments:

Post a Comment