Pages

Tuesday, 9 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 131

முன்கதை

5
சயிந்தவ மகாரிஷி வனம்
1


மாம்பழம்

பாண்டவர் காட்டில் வாழும் ஐந்தாம் ஆண்டு 

கூடை தலைமேல் வைத்துக்கொண்டு திரியும் வாழ்க்கை
பன்னசாலை அடுக்கு வீடுகள் 

துரோபதி அந்த வனத்தில் உலாவி வந்தாள் 

மிகப் பெரிய மாமரம் 
அதில் சூரியகாந்தி மலர் போல் ஒரே ஒரு பழம்
அதனைத் தின்ன ஆசைப்பட்டாள் 

பறித்துத் தா வீமனிடம் சொன்னால் பறித்துத் தின்றுவிடுவார் 

நகுலன், சகாதேவனிடம் சொன்னால் என்னால் முடியாது என்று சொல்லிவிடுவார்கள்

என்று எண்ணினாள் 

அருச்சுனனை
 
பறித்துத் தருமாறு அருச்சுனனைக் கேட்டாள். 
கொஞ்சிக் கேட்டாள் 
தனியே அழைத்துச் சென்று கேட்டாள்

காணாது கண்டேனையா
கண்டாசைப் பட்டேன் ஐயா 
பாராது பார்த்தேனையா
பார்த்து ஆசைப்பட்டேன் ஐயா

தங்கத்தைக் காய்ச்சித் தரையில் கவிழ்த்து போல் 
பொன்னை உருக்கியல்லோ பூமியிலே விட்டது போல் 
சூரியனைப் போல் அழகாய்த் தோணுது மாங்கனிதான்
சந்திரனைப் போல் அழகாய் தான் இருக்கும் மாங்கனிதான் 

அந்தக் கனி தின்ன ஆசை
பறித்துத் தாரும் 
பறித்துத் தராவிட்டால் எதுவும் தின்னமாட்டேன்
தண்ணீரும் குடிக்கமாட்டேன்
என்றாள் 

அருச்சுனன் பறித்துத் தர ஒப்புக்கொண்டான் 

வந்தான் 
பார்த்தான் 
வானத்தில் ஆயிரம் யோசனை தூர உயரத்தில் பழம் இருந்தது

வில்லை வளைத்தான்
மந்திரம் சொன்னான் 
எய்தான்
பழம் மண்ணில் விழுந்தது
அப்போது வானமே அதிர்ந்தது. 

தூக்க முடியவில்லை

பழத்தை அவனால் தூக்க முடியவில்லை
வீமனை அழை என்றான் 

தருமருக்குத் தெரியாமல் வீமனை அழைத்து வந்தாள் 
இருவராலும் பழத்தைத் தூக்க முடியவில்லை 

நகுல சகாதேவரை அழையும் என்றனர் 
நால்வர் சேர்ந்தும் தூக்க முடியவில்லை

ஐந்து பேரும் திகில் அடைந்தனர் 

தருமரை அழைத்து வந்தாள்
தருமர் சொல்கிறார் 

ஆர் உண்ணும் கனியோ
தேவர் 
அரசர்
முனிவர்  
ஆர் உண்ணும் கனியோ

என்று எண்ணித் தருமர் மனம் கலங்கினார்
 
மாயனை நினைத்தார் 

மாயன் வந்தார் 
வணங்கினர் 

மாங்கனி பற்றிக் கூறினர்

என்னால் எதுவும் செய்ய இயலாது என்றார் மாயவன் 

தருமர் புலம்பல்

ஆகாத தம்பியர் அசடருடன் பிறந்தேன்
பொல்லாத் துஷ்டருடன் பிறந்த ஒரு தன்மையினால்
 
என் 
அங்கம் குலையுதே ஆண்டவரே என்ன செய்வேன் 

என்னை அறியாமல் இக்கனியைத் தான் அறுத்தார் 
அறிந்தனேயாமாகில் அறுக்கவொட்டேன் மாங்கனியை 
பார்த்தேனேயாமாகில் பறிக்கவொட்டேன் மாங்கனியை
 
அடியார்கள் செய்த பிழை ஆண்டவரே மனம் பொறுத்து  
தெரியாதார் செய்த பிழை தேவர் மனம் பொறுத்து 

உன்
உள்ளங்கை நெல்லிப்பழம் உருக் குழைந்து போகாமல் 
காக்கக் கடன் உமக்கு

மாயன் விடை

என்னை வருத்தாதே 
என்மேல் சலியாதே 
என்றார் 

தருமர் வேண்டுதல் 

இந்தக் கனி எப்படியாவது மரத்தில் இருந்த இடத்தில் பொருந்துக்கொள்ள வேண்டும். 
இதற்கு வழி செய்யுங்கள்
என்றார்

புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில்  சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)

வீழ்த்திய மாம்பழத்தை எடுக்க முடியவில்லை


No comments:

Post a Comment