Pages

Tuesday, 9 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 120


4
காளமகாரிஷிவனம்
5

ஒட்டன் ஒட்டச்சி

தருமன் மனத்தைத் தெரிந்துகொள்ள மாயன் ஒட்டனாகவும், எமன் ஒட்டச்சியாகவும் வந்து பிணத்தை இழுத்தல் 

இந்தக் குளத்து விஷ நீரைக் குடித்து யார் மாண்டாலும் அவரை எடுத்துக்கொண்டு போய்ப் புதைப்பது அரசன் எங்களுக்கு இட்டிருக்கும் கட்டளை என்று சொல்லிக்கொண்டு வீமன் அருச்சுனன் பிணங்களை ஒட்டனும் ஒட்டச்சியும் இழுத்தனர். 

பிணத்தை வாங்கினது

இவர்கள் என் தம்பியர்
நான் இருக்கும்போது என் தம்பியை இழுக்காதீர் 
கோடி சரணம் - என்றார்

வீமனைத் தருமர் வாங்கிவந்தார் 
அருச்சுனனைப் பாஞ்சாலி வாங்கிவந்தாள் 

நீங்களே எடுத்துப் புதையுங்கள் என்று சொல்லிவிட்டு இருவரும் நடந்தனர் 

தருமர் மாயவனை வேண்டினார். 

அடியளந்த மாயவரே ஆதிமூலம்  வாரும் 
எல்லை அளந்த சாமி எம்பெருமாள் மேகவண்ணா

கல்லான அகலிகையை நல்ல பெண் ஆக்கி வைத்தாய்
மூலம் என்னும் குஞ்சரத்தைக் காத்த முகில்வண்ணா

ஆலிலைமேல் பள்ளிகொண்ட அரிராமா வாருமையா
மச்ச வடிவு அச்சுதரே இச்சகத்தில் 
கூர்ம வடிவு கொண்டு பாதாளம் போய் வந்தீர் 

இரணியனைப் பங்கம் செய்தீர் 
ராமர் வடிவு கொண்டு ராவணனைச் சங்கரித்தீர் 
அரக்கு மாளிகையில் ஐவரையும் காத்தீர்

அம்பலத்தில் துரோபதைக்கு அட்சயத் துகில் கொடுத்தீர் 

உன் மகிமை யார் அறிவார் 

நீரே துணை அல்லால் வேறு துணை இல்லை 

கூடப் புலம்புகிறாள் கொம்பனையாள் துரோபதையும் 

மாயனும் 
எமனும்
வந்தனர் 

மாயப்பொய்கை - செய்திகளை விளக்கினர். 

மாண்டார் பிழைத்தால் வையகம் கொள்ளுமோ 
தம்பியரைத் தகனம் செய் - என்றனர் 

தருமர் புலம்பல் 

பச்சைப் புழு எடுத்துப் பெருநெருப்பில் போட்டடால் போல்
புலம்பினார் 

உன்னை நம்பி உயிர் கொண்டு உலாவுகிறேன்
நம்பி இருந்த என்னை நட்டாற்றில் விட்டுவிட்டாய் 

என்னையும் கொன்று தகனம் செய் - என்றார் 

துரோபதி

மாங்கலியப் பிச்சை 
மடிப்பிச்சை கேட்டாள் 

மாயன் 

மருத்துவர் போல் 
கையில் மருந்துப் பை
தோளில் சோளி
கையில் செபமாலை 
கமண்டலம் 
- கோலம் எடுத்துக்கொண்டு வந்தார் 

சிவசிவா என்று சொல்லிக்கொண்டு வந்தார் 

இறந்தவர் நால்வரில் யார் வேண்டும் - என்றார் 

என் தாயார் குந்தி வயிற்றில் பிறந்தவன் நான் ஒருவன் இருக்கின்றேன் 

என் மறுதாய் வயிற்றில் பிறந்த நகுலனை எழுப்பும் - என்றார் 

பிடித்து வைத்திருக்கும் நால்வரு உயிரையும் விட்டுவிடு என்று மாயவன் எமனிடம் கூறினார் 

எமன் பிடித்து வைத்திருந்த உயிரைத் திரும்பக் கொடுத்தான் 

  • பூத்திடம் காப்பாற்றத் தான் செய்தது பற்றி விளக்கினார். 

"என்ன வினை வந்தாலும் எம்மை நினையும்"
என்று சொல்லிவிட்டு மாயன் சென்னறார். 

No comments:

Post a Comment