Pages

Wednesday, 3 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 13

1
சூரிய வனம் 


காரானைக் கண்ணே கணபதியே முன்னடவாய் 

ஐவர் பஞ்ச பாண்டவர்கள் ஆரணியம் போன பின்பு 
தேசத்து அழகு மன்னன் திரியோதரப் பெருமான் 
மாமன் சகுனியிடம் வினவுகிறான்.

ஐவர் வனம் போய் ஐந்தாறு மாதம் ஆயிற்று 
செத்தாரோ பிழைத்தாரோ சேதி தெரியவில்லை 
என்றான்

தூதரை அனுப்பித் தேடிப்பார் - என்றான் சகுனி

அவ்வாறே அனுப்பினான் 
தூதர்கள் சென்றனர் 

செந்நாய் புலி கரடி சீறும் வனம் 
வேங்கை அடர்ந்த வனம் 
வெண் களா பூத்த வனம் 
கோங்கு பெருத்த வனம் 
கொன்றைகள் பூத்த வனம் 
பாதிரி முல்லை பருத்த வனம்

ஆகிய 
சூரிய வனம் சென்றடைந்தனர் 

அங்குப் பர்னசாலையில் பஞ்சவரைக் கண்டனர். 
திரும்பி வந்து செய்தி கூறினர் 

துரியோதனன் சகுனியைப் பார்த்தான் 
சகுனி சொல்கிறான். 

சினம் கொண்ட முனிவர் துருவாசர் 
அவரை நினைத்து தவம் செய் 
வருவார் 

அவருக்கு அமுதம் போல் விருந்து கொடு 
மகிழ்வார் 

துருவாசர் தன் மகிமை சொல்லி முடியாது
ஐவரைக் கொல்ல அவரிடம் யோசனை கேள்.

அவர் இசைந்தால் நாடு உன்னுடையது
அந்த முனிவரை ஆராலும் வெல்ல முடியாது.  - என்றான் சகுனி. 

கேட்ட துரியோதனன் உள்ளம் குளிருந்தான்
யாரும் அறியாமல் தனியே நடந்தான் 

முத்து மிதியடியைத் தொட்டு நடந்தசைந்தான்
பூங்காவனம் புகுந்தான்
புதிய கங்கையில் நீராடினான்

அரகரா என்று சிவனை நினைத்து நெற்றியில் திருநீறு அணிந்துகொண்டான் 

துருவச முனிவரை நினைத்துக்கொண்டு தவம் செய்தான்.
கண்களை மூடிக்கொண்டு அரிய தவம் செய்தான் 

முனிவர் ஞான திருஷ்டியால் உணர்ந்தார் 
சடை, சடைமுடி, கையில் கமண்டலம், காவி ஆடை தோற்றம் கொண்டவராக துரியோதனனிடம் வந்தார். 

துரியோதனன் மகிழ்ந்தான் 

  • எதற்காக அழைத்தாய் 
  • அமுது படைக்க 

முனிவர் மகிழ்ந்தார். 
துரியோதனன் விருந்து படைத்தான்

  • உண்டார் 
  • மகிழ்ந்தார் 

உன் விருப்பம் என்ன
கேள் தருகிறேன் - என்றார் 

  • ஐவர் வனவாசம் போயினர்
  • சூரிய வனத்தில் இருக்கின்றனர்
  • அவர்களைக் கொல்லவேண்டும் - என்றான் 

எப்படிக் கொல்வேன் - என்றார் 
\
உணவு படைக்கும்படிக் கேளுங்கள்
காட்டில் உணவு கிடையாது 
உணவு தரவில்லை என்று சபித்துவிடுங்கள் - என்றான் 

துருவச முனிவர் ஒப்புக்கொண்டார் 

அஸ்தினாபுரம் தாண்டி 
ஆறு சுனை தாண்டி
காடு செடி தாண்டி 
கரிய மலை தான் தாண்டி 
சில்லென்று பூத்த செடியும் வனாந்திரமும் 
கடுகி வருகின்றார் கனத்த முனியவரும் 

ஏழுலகை ஆண்ட எம்பெருமாள் இதனை அறிந்தார் 
அடியளந்த மாயவனார் ஆதிமூலம் ஏது செய்தார்
நம்பினவரைக் காக்கும் நாராயணன் எழுந்து 

காவலர்கள் பஞ்சவரைக் காக்க வந்தார். 

எங்கே போகிறீர் என்று முனிவரை வினவினார் 
வனசாரியாக வந்தேன் - என்றார் முனிவர் 

நாமும் வருகிறோம் - என்று சொல்லிக்கொண்டு துருவச முனிவருடன் சேர்ந்து நடந்து வந்தார் 

இருண்ட வனம் தாண்டி
மூங்கில் வனம் தாண்டி 
புலி கரடி சீறும் வனம் தாண்டி 
பாதிரி முல்லை பருத்த வனம் தாண்டி 

வரும்போது

இந்தப் பலா இலை எதற்கு உதவும் என முனிவரை வினவினார். 
பலா இலையில் உணவு உண்ணும் பேற்றை விட மேலானது எதுவும் இல்லை என்றார் முனிவர்.

அடுத்த வனத்தில் செல்லும்போது தாமரைப் பொய்கை ஒன்றைக் கண்டனர். 

  • இந்தப் பொய்கையின் சிறப்பு என்ன
  • இதில் குளித்தாலும், இதன் கரையில் தவம் செய்தாலும் சிவனாகவே மாறுவர் 

இருவரும் பாண்டவர் பர்னசாலைக்கு அருகில் வந்தனர் 
கண்ட பாண்டவர் ஓடிவந்தனர் 
இருவர் கால்களிலும் விழுந்து வணங்கினர்

காட்டுத் தழைகளை ஒடித்துக்கொண்டுவந்து ஐந்தடுக்கு மெத்தையாக்கி இருக்கை அளித்தனர் 

இருவரும் அதில் ஏறி அமர்ந்தனர் 

அளவளாவி உரையாடினர். 

தருமர் சொன்னார் 

துரியோதனன் எங்களை விருந்துக்கு அழைத்து விஷம் வைத்துக் கொல்ல நினைத்தான். 
நடக்கும் வழியில் ஊசிகளைப் புதைத்து வைத்தான் 
பொய்க்குழி வெட்டி அதில் இருக்க சிம்மாசனம் போட்டான் 
  
எண்ணெய் தேய்த்துக் குளிக்குபடி விஷ எண்ணெய் கொடுத்தான் 
உண்ணும் சோற்றில் நஞ்சு வைத்தான் 
குடிக்கும் நீரில் நஞ்சு கலந்தான் 

காற்று நுழையாத கல்லறையில் எங்களை இருக்கச் செய்தான்
 
அறையில் இருந்த பாஞ்சாலியை அம்பலத்துக்குக் கொண்டுவந்து வம்பு செய்தான்

12 ஆண்டு வனவாசம் செய்யும் என்று காட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறான்.
 
மேலும் ஓராண்டு ஆருக்கும் தெரியாமல் நாட்டில் வாழவேண்டும் என்று கூறியிருக்கிறான் 

இப்படி இருந்துவிட்டுத் திரும்பினால் பாதி நாடு தருவேன் என்று கூறியிருக்கிறான்

இது உங்கள் தலையெழுத்து 
ஈசன் எழுதிய அதில் எள் அளவும் குறையாது
என்று மாயன் கூறினார். 

புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில்  சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)


துருவாச முனிவருடன் கண்ணன் செல்லல்
AI figure



No comments:

Post a Comment