4
காளமகாரிஷிவனம்
3
தருமர்
- வீமன்
- அருச்சுனன்
- நகுலன்
- சகாதேவன்
நால்வரையும் விஷ நீர் அருந்தச் செய்துமாயனும் எமனும் திட்டமிட்டுக் கொன்றனர்
தருமர்
மானைக் கொண்டுவரச் சென்ற வீமன்அவனை அழைத்துவரச் சென்ற மற்ற மூவர்திரும்பவில்லை என்றுஅவர்களைத் தேடிக்கொண்டு தருமர் வந்தார்
வேதாளம்
இப்போது காளமுனிவர் வேள்வித் தீயில் வேதாளம் தோன்றிற்று
என்னை ஏன் அழைத்தீர்யாரைக் கொல்ல வேண்டும்வயிறு பசிக்கிறது - வேதாளம்
முனிவர்
இந்த வனத்தில் இருக்கிறார் பஞ்சவர்கள்வீரப் புலி போல வேந்தர்கள் ஐவர் உண்டுபாரப் புலி போலப் பஞ்சவர்கள் ஐவர் உண்டுஐவரையும் கொன்று தின்று அரைநொடியில் வாரும் - என்றார்
வேதாளம் மனம் குளிர்ந்தது
பல்லைக் கடித்துக்கொண்டுஎங்கே எங்கே என்று கொக்கரித்துத் தேடிக்கொண்டு வருகிறதுகும்மாளம் போட்டுக்கொண்டு வருகிறதுஅந்த வனமெல்லாம் ஆராய்ந்து வருகையிலே
பிணம்
செந்தாமரைப் பொய்கையண்டைச் செத்திருக்கக் கண்டதுமாமரச் சோலைக்கீழ் மாண்டிருக்கக் கண்டதுஇறந்தவர் அல்லாமல் இன்னும் ஒருவர் இல்லைசெத்தவர்கள் அல்லாமல் மற்றும் ஒருவர் இல்லைமாண்ட பிணம் தின்ன மாமுனி போகச் சொன்னார்எத்தனை நாளைக்கு முன் செத்த பிணம் இதுவோ
செத்த பிணத்தையோ நான் தின்று புகிக்கிறதுமாண்ட பிணத்தை நான் வயிறார உண்பேணோநாறும் பிணம் எடுத்து நானோ உண்கிறது
முனிவரை
என்று சொல்லி வேதாளம் எழுந்ததுஅகோர கோபத்துடனே திரும்பி வந்தது
முனியை எடுத்ததுவயிற்றைக் கிழித்ததுநெஞ்சைப் பிளந்ததுகொன்றது
அந்த வனத்தை விட்டு வேறு வனத்துக்குப் போய்விட்டது.
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)
No comments:
Post a Comment