பக்கம் 46
புலந்திரன் மனைவியின் முகத்தைப் பார்த்துப் பேசுகிறான்
- அன்ன நடையாளே
- அமிர்தப் பசுங்கிளியே
- வாழும் பெருமைகளையும், மாமன்மார் பெருமைகளையும் பேசினாய்
- மாங்கல்யத்துடன் இருக்கிறாய்
- கொண்டான் பெருமையைக் கூறவில்லையே
என்றான்
அவள் பெரிதும் சினம் கொண்டாள்
வந்த வழியைப் பார்த்துக்கொண்டு திரும்பிச் செல் - என்றாள்
அவன் பேசுகிறான்
- ஆரணங்கே
- இது யார் கோட்டை
- உன் மாமன் பெயர் என்ன
- மாலையிட்ட மணவாளன் பெயர் என்ன
- உன் பெயர் என்ன
- உன் ஊர் எது
- சொன்னால் போய்விடுகிறேன்
- சொல்லாவிட்டால் போகமாட்டேன் - என்றான்
அவள் பெருமூச்சு விட்டாள்
கண்ட கனவை நினைத்தாள்மணவாளன் பாண்டியர் வந்தாரோ என்று எண்ணினாள்இவர்மீது சினம் கொண்டோமே என்று வருந்தினாள்தூண் மறைவை விட்டு வெளியே வந்து பேசலானாள்
- அழகா
- இது கலந்தாரி அரண்மனை
- என் தாய் துற்சடை
- மாமன்மார் நூற்றொருவர்
- துரியோதனன் மனைவி பெருந்திருவாள் என்னை அருமையாய் வளர்த்தாள்
- கர்னர் மனைவி பொன்னுருவாள் என் மாமி
- மாமன்மார் பாண்டவர் ஐந்து பேர்
- மாமியார் ஏழு பேர்
- துரௌபதை
- சுபத்திரை
- பவளக்கொடி
- நாககன்னி
- போகவதி
- மின்னொளி
- அல்லி
சொல்லிவிட்டேன்எழுந்து செல் - என்றாள்
கணவன் பெயரைச் சொல் - என்றான்
- ’சுந்தரப் பூ முடியான்’- என்றாள்
- ‘ஆகாய இந்திரன்’ தேவி நான்
- ‘அருச்சுனன் ஈன்றெடுத்த அழகான இந்திரன்’ நான்
- ‘அத்திபுரம் அடங்கலும் என்னுடையது’
- ’ அவன் தென்பாண்டி நாடன்’
- ‘அதனால் பாண்டி நாடும் என்னுடையது’
பாண்டவரும் நூற்றுவரும் கூடி வாழும்போது சரிநிகர் சம்பந்தம் வேண்டும் என்று அருச்சுனன் மகனுக்கு என்னை மணம் முடித்து வைத்தனர்.
பாண்டவர் வனவாசம் போனபின்பு என்னைக் கணவன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல யாரும் இல்லை.
மாலையிட்ட மணவாளர் பாண்டிநாட்டில் இருக்கிறார்.
நான் இங்கு கர்னர் வைத்த சிறையில் வாடுகிறேன் - என்றாள்
சிறையிருக்கிறேன் என்று அவள் சொன்னது கேட்டு அவன் கண்கள் கலங்கின.
துடைத்துக்கொண்டான்.
சொல்கிறான்
"காரிகையாள் மாது கலந்தாரி நாயகியேஉன்னைமாலையிட்டுக் கொண்ட மணவாளன் நான்காணும்"
மதுரையை விட்டு வந்திருக்கிறேன்என் தாய் என்னை அனுப்பியிருக்கிறாள்ஆரும் அறியாமல் ஓமப் புகையாக வந்தேன்உனக்குத் தாலி கட்டியவன் நான்தான்"சுந்தரியே உன்னுடைய சுண்டுவிரல் பிடித்த"மன்னர் பெருமாள் மணவாளன் யான்காணும்"அன்னமே நீ எனக்கு அத்தை மகள்காணும்"மற்றொருவர் இங்கு வருவரோ"அரசாளும் நாயகியார் அல்லி திருமகன் யான்"வேறொருவர் என்று நினைக்காதே - என்றான்
அடையாளம்
அப்படியானால் அத்தை தந்த அடையாளத்தைக் கொடு - என்றாள்வைகைக்கரையில் சிவபூசை செய்தபோது மறந்து அங்கேயே வைத்துவிட்டேன் - என்றான்யாருக்கும் சொல்லமாட்டேன். இன்று இரவு இங்கேயே தூங்கிவிட்டு நாளை இரவு என்னிடம் வா - என்றாள்அடையாளம் தந்தால்தான் என் மெத்தையில் இடம் - என்றாள்
"இந்தாரும்" என்று அடையாளத்தைக் கொடுத்தான்
அடையாளத்தைப் பெற்றுக்கொண்டாள்நீரிட்டு அதற்குப் பூசை செய்தாள்பெட்டியில் வைத்துப் பூட்டிக்கொண்டாள்
அத்தை உறங்கும்போது இதனைத் திருடிக்கொண்டு வந்தாயா - என்றாள்
அத்தை கொடுத்தது உண்மையானால் இந்த மாணிக்கத்தூண் வெடிக்க வேண்டும் - என்றாள்
அவன் சிவனை வேண்டினான்தூண் வெடித்தது.
இன்னும் சோதனை
இந்தக் கல் கோட்டையை எட்டு அடி நகர்த்தி வை - என்றாள்சிவனை வேண்டினான்கோட்டை 8 அடி விலகிச் சென்றது
மேலும் சோதனை
இந்த வாசற்படியில் இருக்கும் மணிப்பதுமை பேசினால் நம்புவேன் - என்றாள்சிவனை வேண்டினான்பதுமை பேசிற்றுஇவர்தான் உன் கணவர். கூடி மகிழ்ந்திடுங்கள் - என்றது.
தன்னையே சோதிக்கிறாள்
நான் பத்தினி என்பது உண்மையானால், இவர் பார்த்தன் மகள் என்பது உண்மையானால் மாணிக்கத் தூணே நீ என்னிடம் வா - என்றாள்.தூண் வந்ததுமாமியார் தந்த அடையாளப் பொருள் இருக்கும் பேழையை அதனுள்ளே வைத்துப் பூட்டிக்கொள்ளுமாறு செய்தாள்.
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்,
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர்
எளிய நடையில்
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல்
(பாடல் பகுதிகளுடன் கதை)
No comments:
Post a Comment