பக்கம் 40
சந்தனம்
மனைவி கலந்தாரியைத் தட்டி எழுப்பினால் கூச்சல் போடக்கூடும். அப்போது பலரும் விழித்துக்கொள்வர். என்ன செய்யலாம் என்று புலந்திரன் நினைத்தான்.
சந்தனத்தை அள்ளி அவள்மேல் எறிந்தான்.
அது அவள் மேனியில் சில்லென்று விழ அதனை அவள் பல்லி எச்சம் என்று எண்ணித் திரும்பிப் படுத்து உறங்கலாளாள்.
அவன் நித்திராதேவியை வேண்டினான்.
தூக்கதேவி அவனுக்கு உதவினாள்.
திருநீறு
புலந்திரன் மனைவிமீது தேவேந்திர பகவான் தந்த திருநீற்றைத் தூவினான். தன் மந்திர வாளால் தட்டினான்.
கலந்தாரி விழித்துக்கொண்டாள்.
ஆண்மகனைக் கண்டாள்.
நடுக்கம்
"ஆரமுலையாளுக்கு அடித்தொடையும் காலும்" நடுங்கின.
மெத்தையை விட்டு இறங்கித் தூணுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டாள்.
அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்
அழகன்
அங்குராயம் (கள்ளழகு) என்பார்கள். இவர் கள்ளழகர் அல்லர்.
அம்மான்மார் (தாய்மாமன்கள்) அல்லர்.
மாமன்மார் பாண்டவர் அல்லர்.
16 வயது வாலைப் பிராயத்தவர்.
எப்படி உள்ளே வந்தார்?
காவல் என்ன ஆயிற்று
தாதியர் இல்லாமல் தனியே இருக்கிறேனே!
இவர் என்னை வலியப் பிடிக்க வந்தால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவேன்.
எனக்குக் கட்டப்பட்ட கல்லுக்கோட்டை என்னவாயிற்று?
கர்னர் இட்ட காவல் என்னவாயிற்று?
வாளைக் கையில் வைத்துக்கொண்டு இவர் காவலாளிகளைக் கொலை செய்துவிட்டு வந்தாரோ?
மதிலைத் தாண்டி வந்தாரோ?
தோற்றம்
இவர் முடிமேல் முத்துமாலை இருக்கிறது.
நெற்றியில் திருநீறும் பொட்டும் இருக்கிறது.
பட்டுச்சட்டை அணிந்திருக்கிறார்.
நிலா போன்ற பார்வை.
மார்பில் பதக்கங்கள்.
கையில் கடகம், மோதிரம்.
தாமரை நிறம்.
பவளநிற வாய்
சந்திர சூரியருக்கு மேலான அழகு
யார்
அஞ்சாமல் வந்த நீ ஆர்?
அழகாய் இருக்கிறாய்
என் அழகை எங்கே பார்த்தாய்
காலையிலா
மாலையிலா
பொய்கைக் கரையிலா
வைகைக் கரையிலா
வீதியிலா
உப்பரிகை மேலா
மதிலைத் தாண்டிக் குதித்தாயோ
நமக்குள் முகப்பழக்கம் இல்லையே
- கேட்டுக்கொண்டு பேசாமல் நின்றான்
ஊமையா
செவிடா
சீதைக்கு இல்லாத அழகா என்னிடம் இருக்கிறது
நான் அகலிகையா
வாய் திறவாமல் இருந்தால் வாளுக்கு இரையிடுவேன்
ஆர் பெற்ற மகனோ
எழுந்து போய்விடு
- இப்போதும் பேசவில்லை
நான் தருமர் மருமகள்
வீமர் மருமகள்
இரட்டையர் நகுல-சகாதேவர் மருமகள்
ஆணாலே கெட்டவர்கள் உலகத்தில் ஆரும் இல்லை
பெண் சீதை பேச்சைக் கேட்டு இராமன் கெட்டான்
பெண் சூர்ப்பனகை பேச்சைக் கேட்டு இராவணன் கெட்டான்
நான் பெண்
என்னைத் தொட்டு நீ கெட்டழியப் போகிறாய்
உன்னைப் பெற்றவளும் பெண்தானே
"போடா நீ மன்னவனே"
- இதற்கும் அவன் பேசவில்லை
"காவலைத் தாண்டிவந்த கட்டழகா"
"காவலர்கள் கண்டால் கத்திக்கு இறையாவாய்"
கர்னர் கண்டால் உன்னைப் பலியிடுவார்
உன் ஆச்சி அறியாமல் என் அரண்மனைக்கு வந்தாயோ
ஆருக்கும் தெரியாமல் வந்தாயோ
எதற்காக வந்து இறக்கப் போகிறாய்
உத்தமனே
வீரியனே
நீ உயிரோடு இருந்தால் மக்களைப் பெற்று மகிழ்வோடு வாழலாம்
நான் குலமாது
உனக்கு விலைமாது ஒருத்தி கிடைக்கவில்லையா
கோயில் தேவடியாள் கிடைக்கவில்லையா
பாண்டவர் கண்டால் அவர்களின் கோபத்துக்கு நீ இரையாவாய்
எழுந்து நடவும் - என்றாள்
அவன் மகிழ்வு
இத்தகைய பேச்சுகளைக் கேட்டுப் புலந்திரன் மகிழ்ந்தான்
அறைத்த சந்தனம் அள்ளி இறைக்கப்பட்டது போலவும்
வற்றிக் கிடந்த காவேரியில் வெள்ளம் பெருகி வந்தது போலவும்
உள்ளம் குளிர்ந்து
தோள் பூரித்தான்.
பேசாமல் இருந்தான்
கலந்தாரி தூஷித்தாள்
சினத்துடன் அமைதியானாள்.
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்,
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர்
எளிய நடையில்
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல்
(பாடல் பகுதிகளுடன் கதை)
No comments:
Post a Comment