Pages

Saturday, 23 May 2026

புலந்திரன் களவு மாலை Pulanditran Kalavu Malai 23

பக்கம்  21

புலந்திரனுக்குத் தாயார் புத்தி சொல்வது 

ஆகாய வான்புரவி அலை தாரா நீ ஏறி 
ஒரு சாமப் பொழுதினிலே உத்தமரே நீ போய் 

மந்திர வாள் தாரேன்  மன்னர் பெருமாளே 
வாள் வைத்தால் கதவு திறக்கும் காண் மன்னவனே 

தானே திறக்கும் காண் தனஞ்செயனே பொற்கதவு 

போனார் போல் நீயும் பொற்கொடியை எழுப்பாதே 
ஆராய்ந்து பார்த்து ஆணழகா மன்னவனே 

கையாலே தட்டிக் காரிகையை எழுப்பாமல் 
காலாலே தட்டி மங்கையரை நீ எழுப்பும் 

சற்றேதான் தட்டலுமே தையல் எழுந்திருப்பாள் 

அவள் வாழும் பெருமைகளும் மாமன்மார் சேவகமும் 
உத்தமர்கள் பஞ்சவரை ஓட்டி அரசாள்வதுவும் 
கட்டழகர் பஞ்சவரைக் காடோட்டி ஆளுவதும் 
கர்னனிட அதிகாரம் காவல் போர் வீரியமும் 
ஏசாதும் ஏசி எடுத்துரைப்பாள் ஆமாகில் 

உத்தரங்கள் சொல்லாதே ஒக்க நின்று பேசாதே
 
கொற்றவனே உன்றனுக்குக் கோபம் வராமல் 
அத்தனைக்கும் உட்கொடுத்து அலை தாரா நீ கேட்டு 
எத்தனை சொன்னாலும் எனக்காக நீ பொறுத்து 

அன்னமே இக் கோயில் ஆர் கோயில் சொல்லும் என்று

ஆரணங்கே உன்னுடைய ஆச்சி பேர் சொல்லும் என்று

மங்கையரே உம்முடைய மாமன் பேர் சொல்லும் என்று 

அன்னமே உம்முடைய ஐயன் பேர் சொல்லும் என்று

மங்கை நல்லார் தன் பேரும் மணவாளன் தன் பேரும் 
ஆரமுடையாள் அடையாளம் சொல்லும் என்று 

நிரூப அடையாளம் நேரிழைக்குத் தான் கொடுக்க
தாரேன் அடையாளம் தையலர்க்கு நீ கொடுத்து  

அடையாளம் 

அல்லிக் கொடியும் அழுத்திய சீராவும் 
சீராரும் கச்சும் திருமுடியும் தான் கொடுத்தாள் 

உன்   
மாமிமார் இட்டதொரு பவுத்திரம் தான் கொடுத்தாள் 

வாங்கி முடிந்துகொண்டார் மன்னர் பெருமானும் 

மாதா அடையாளம் வைத்தான் மடிதனிலே 

அரசாளும் நாயகியாள் அல்லியரும் கூறுகிறாள்
 
அரும்பாவி வாசலிலே  அமிர்தம் புசியாதே 
கஸ்தூரி பூசாதே கபடனது வாசலிலே 
தண்ணீர் குடியாதே தையலது வாசலிலே 
கொப்பளித்து நீரைக் குடியாதே வாரும் என்றாள் 

இருந்து ஒரு சாமம் ஏந்திழையை நீ கூடி 
வர ஒரு சாமத்திலே வந்துவிடும் என்றாளே 

அருள் அருளும் என்றாரே அப்படியே ஆகுது என்றார்  

போக விடை தாரும் என்று புலந்திரனும் தெண்டனிட்டு
வந்து பணிந்ததொரு மகனாரை வாழ்த்தல்  உற்றாள்

நீரே அரசாள்வீர் நீடூழி காலமெல்லாம் 
என்னைப் பெறுவீர் எதிர்த்தார் முடி பெறுவீர் 

பிள்ளை பெறுவீர் பெருமாளைப் போல் வாழ்வீர் 
வாழ்ந்திடுவீர் என்று மனம் குளிர வாழ்த்தினாள் 

தேனல்லோதாரனுக்கு திருநீறு தான் கொடுத்தாள் 
வாய்த்த இலைச்சுருளும் வர்னப் பழக்காயும்
காவலன் வீரியற்கு கை நிறைய அள்ளி இட்டாள் 

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர், 
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் 
எளிய நடையில் 
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல் 

No comments:

Post a Comment