பக்கம் 19
புலந்திரனை அலங்கரித்தது
மைந்தன் இருக்கிறதோர் மண்டபம் சென்று ஏறினாள்
மாலை முடியானே மஞ்ச நீர் ஆடும் என்றாள்
மஞ்ச நீர்ச் சாலையிலே மன்னவனும் போய்ப் புகுந்து
ஆடை களைந்து வைத்து ஆபரணம் தான் கழற்றி
கத்தியுடனே அங்கி காவலும் தான் கழட்டி
சேரவே தான் கழட்டி செம்பொன் மணிமுடியான்
கொற்றவர்கள் கோமானும் குளித்துக் கரை ஏறினான்
துப்பட்டி கொண்டு துவட்டினார் சுந்தரிமார்
ஈரம் உலரவே இணை கவரி வீசினார்கள்
ஆடை எடுத்து உடுத்தி ஆபரணம் தான் பூட்டி
கச்சை வரிந்து கட்டி கத்தி மிகச் சொருகி
தென்னன் முடிவேந்தன் திருநீற்றுக் காப்பு அணிந்து
சிந்தித்து நின்று சிவனை அடிபணிந்து
செங்கழுநீர்ப் பூ எடுத்து சிவனாரைத் தோத்தரித்து
கஸ்தூரி பொட்டும் இட்டு கண்ட பெண்கள் சேர்ந்திடவே
மாணிக்க மண்டபத்தில் மன்னவனும் சென்றானே
சிங்காதனத்திலே திரள் வீரன் வீற்றிருந்தான்
அரசாளும் நாயகியார் அல்லியரும் கூறுகிறார்
மைந்தர் புலந்திரனை மயிலனையாள் தான் பார்த்து
ஆனந்த வாழ் மார்பா அடிசிலுக்கு வாரும் என்றாள்
சிங்காதனத்தை விட்டுத் திகழக் குதித்து இறங்கி
அமுது உண்ணும் மண்டபத்தே ஆணழகன் சென்றானே
அரசாளும் நாயகியாள் அல்லியரும் கூறலுற்றாள்
இரும் இரும் என்று இணை கடகக் கையமர்த்தி
பொற்கொடிக்கு மேலே புலந்திரனும் வீற்றிருந்தான்
சிங்க முக்காலி செம்பொன் தளிகை வைத்தாள்
கைக்கு நீர் வார்த்தார்கள் காவலனார் வீரியற்கு
நீர் சுழற்றி ஊற்றி நிகர் வளை முன்கையாலும்
போனகம் வாங்கிப் புரிகுழலாள் தான் படைத்தாள்
பத்து வகைக் கறியும் பதினட்டுப் பச்சசடியும்
நீர் கடகக் கையாலே நீர் எடுத்தாள் கொடுத்தாள்
அறிவுடை நாயகற்கு ஆகாரம் தான் கொடுத்தாள்
அந்த அடிசில் அமுது உண்ட பிற்பாடு
அத் தளிகை மாற்றி பொன் தளிகை முன்னே வைத்து
போனகம் வாங்கி புரிகுழலாள் தான் படைத்து
காய்ச்சிய பாலும் காட்டு மாங்கனிப் பழமும்
திரித்தி அமுதும் செலுத்திய நெய் பாலும்
கூட்டிப் படைத்தார்கள் கொம்பனை மார் தாதியர்கள்
அந்த அடிசில் அமுது உண்ட பிற்பாடு
கை கழுவ நீர் வார்த்தார் காரிழைமார் தாதியர்கள்
உத்தமி மைந்தனுமாய் ஒக்க உரா கொடுத்து
சித்திரம் சேர் மண்டபத்தில் தேன்மொழியாள் வீற்றிருக்க
முடிவு பூஞ் சந்தமும் மெல்லியரும் தான் வாங்கி
அடைக்காயும் வெள்ளிலையும் அன்பாகத் தான் வாங்கி
மைந்தருக்குத் தான் கொடுத்து மாது நல்லாள் அப்பொழுது
தானும் இலையமிர்தம் தையலரும் தின்றாளே
மாதா இளைப்பாற வான் கவுரி வீசினார்கள்
தாமக் குழலாள் தாதி முகம் தோக்கி
கொண்டு வந்து பூட்டும் என்றாள் குமரன் புந்திரற்கு
மச்சினியாள் மெச்ச வகைவகையாய்ப் பூஷணங்கள்
ஆபரணப் பேழை அலைகோதி தான் திறந்து
ஆனந்த மார்பனுக்கு ஆபரணம் தானெடுத்து
தெரிந்த பணிதிகளை செம்பொன் தளிகை வைத்து
கொண்டுவந்து முன்னே வைத்தாள் கொம்பேர் இடையாளும்
தென்னர் பெருமான் திருமேனி நீண்ட வல்லான்
ஆனந்த மார்பனுக்கு அருகாக வந்து நின்று
முத்தின் உருமாலை முகன் அறியத் தான் தெரிந்து
வேதிச்ச நற்புனுகால் மின்ன முகம் துடைத்து
கட்டழகர் நெற்றியிலே கஸ்தூரிப் பொட்டும் இட்டு
தேன் நல்கு தாரான் திருநீற்றுக் காப்பும் இட்டு
ஈரெட்டுப் பூண் கடுக்கன் இட்டு வில் அம் காதில்
அந்த முடி சுட்டி அழகாகப் பூட்டினார்
ஒரு முத்தே முத்து உலகமெல்லாம் பெற்றது போல்
பரிய முத்து பரிய முத்துத் தாழ்வடமும்
நவரத்னப் பதக்கமும் நாகரிகத் தாழ்வடமும்
ஆரப் பதக்கமும் அழகுச் சரப்பளியும்
பார்த்த பணிதிரமும் பருமுத்துத் தாழ்வடமும்
முன்கை முதாரிகளும் முழு கடக மோதிரமும்
சந்திர கடகங்கள் தாயத்துச் சோதி மின்ன
அஸ்த கடகமும் அழகான மோதிரமும்
முத்திரை மோதிரமும் முன்கையில் கடகமும்
பசும்பொன் பவுத்திரமும் சேர்த்த கணையாழிகளும்
பொன்னின் அரைஞாணும் பூட்டினார் பொற்சலங்கை
கச்சை இறுக அணைத்து கத்தி மிகச் சொருகி
பாங்குகள் தான் சொருகி பாலனிட காலில்
பூஞ்சிலம்பும் தண்டையும் பொன் மெட்டும் தான் அணிந்து
ஆபரணமெல்லாம் அடங்கலும் தான் பூட்டி
இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திர வர்னப் பச்சைவடம்
ஆனந்த மார்பனுக்கு ஆடை வரிந்து கட்டி
நிரஞ்சனமாகவே நிறைந்ததே மேனியெல்லாம்
இப்படியாக இயலாய் அலங்கரித்து
அரசாளும் நாயகியாள் அல்லியரும் கூறலுற்றறாள்
மைந்தர் புத்திரரைப் பார்த்து வல நாடி
கண் திருக்ஷ்டி வாராமல் காப்பிடுங்கள் தாய் என்றாள்
சந்தனமும் சாந்தும் சவ்வாதும் மிக அணிந்து
ஆலாத்தி காட்டும் என்றாள் ஆனந்த மார்பனுக்கு
முத்தாலே ஆலாத்தி முப்பது நூறாயிரம் பேர்
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்,
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர்
எளிய நடையில்
வெண்கலிப்பா யாப்பில்
இயற்றிய நூல் புலந்திரன் களவு மாலை
![]() |
| அரசன் ஒப்பனை |

No comments:
Post a Comment