Pages

Friday, 22 May 2026

புலந்திரன் களவு மாலை Pulanditran Kalavu Malai 19

பக்கம்  17

அல்லி இந்திரனை வேண்டுதல்

ஆகாயப் புரவி அழைப்பித்து நான் வருவேன்
இந்திரரே நீரே இரும் என்று சொல்லி 
  • இந்திரரே = புலந்திரனே 

கட்டழகி நாயகியும் காவலிலே போய் புகுந்து 
ஆழஞ் சுனையில் அரசியரும் தான் இரங்கி 

காலோடும் கண்ணும் கனிவாயும் கொப்பளித்து 
வாயோடு பல்லும் மதி முகமும் சுத்தி செய்து 

தென்மதுரை நாடாளும் திருநீற்றுக் காப்பணிந்து 
சிந்தித்தது நின்றாளே சிவனை அடி பணிந்து 

தேவேந்திரனை நினைத்து அங்கே தெண்டனிட்டாள் 
மைந்தன் புலந்திரற்கு வான் புரவி வேணும் என்று 
மைந்தனுக்குச் சகாயமாய் வரவழைக்க வேணும் என்று 

ஆகாய வான் புரவி ஆரணங்கு வேணும் என்று 
இந்திரனை நோக்கி ஏந்திழையும் தெண்டனிட்டாள் 
மருமகள் தான் நினைக்க மன்னவரும் தான் கேட்டு
  • அல்லி இந்திரனுக்கு மருமகள்

தேவேந்திரரும் தான் தேவி முகம் நோக்கி 
கண்டாயோ பெண்ணரசே கயற்கண்ணாள் நின்றவிடம் 
  • பெண்ணரசே = இந்திராணியே
தன்
மைந்தருக்கு மைந்தருமாய் வாய்க்கவே வேணும் என்று
புத்திரற்குப் புத்திரனாய் பிறக்கவே வேணுமென்று 
தவசுகள் செய்கின்றாள் தையல் இளம்பிறையாள் 

என்றுரைக்க இந்திரனார் இந்திராணி தான் கேட்டு 
தேங்காய்க்கு மூன்று கண் தேசத்தில் என்பார்கள் 

ஓடும் அயில் கண்ணாட்கு ஒரு கண்ணே உள்ளதுவும் 

தோளுக்குத் தோளு துணை வேண்டும் இந்திரரே
அதனாலே அல்லவோ ஆரணங்கு வருந்துகிறாள் 
ஆகாய வான் புரவி அனுப்பவே வேண்டுகிறாள் 

தேவேந்திரன் புரவி கொடுத்தது

தேவேந்திர பகவான் சிரித்து மனம் மகிழ்ந்து 
வானத்து மேகங்கள் வானவர் கோன் வரவழைத்து 

பார்த்தானே இந்திரனும் பார்வைகள் கொள்ளாதே 
இப்படிக்குப் போனாலே இந்திரற்கு ஏற்காது 
என்று இவர் நினைத்து இன்பமுள்ள பேரனுக்கு 

பூமியில் வாழ்கின்ற புரவியைப் போல் சோடித்து 
அங்குபடி  வைத்தலவோ அழகாய் அலங்கரித்து 

நாலுகால் வண்டையமாம் நடுக்கழுத்தில் கொலுசுகளாம் 
செம்பொன் சிறு சதங்கை சேர்ந்த பலகரையும் 
அம்பொன்னின் கிண்கிணியும் அழாகப் பூட்டினாராம் 

மாணிக்கம் தன்னாலும் வைடூரியம் தன்னாலும் 

நெற்றிக்குச் சுட்டி கட்டி நேர் விழிக்கு மை எழுதி 
மெத்தை மடித்தி இட்டு மேலே அணை கோலி

சித்திரம் சேர் பட்டு சீராய் மடித்து இட்டு 
குப்பியில் சாந்தும் குழாயில் புனுகுகளும் 

வாய்த்த இலைச் சுருளும் வர்ணப் பலாக் காயும் 
பட்டுப் புனுகுகளும் சவ்வாது பரிமளங்கள் 
பூவால் அங்கரித்தார் புலந்திரனார் புரவி தன்னை 

வகை வகையாய்ப் பூச்சரங்ககள் வைத்துப் புரவியிலே 
ஜோடித்து அலங்கரித்து சுந்தரற்கு வேண்டும் என்று 

தேவேந்நதிர பகவான் சிரித்து அலங்கரித்து 
ஏற்குமோ இப்புரவி இந்திரற்கு ஏற்கும் என்று 

தட்டிப் பரவியைத் தாம் அந்த வாழ் மார்பன் 
குதிரைக்கு உபதேசம் கூறினார் காதிலே தான்
 
ஆகாயம் போகாதே அவலோகம் போகாதே 
செம்பொன் மணிமுடியான் தேவியிட கோவிலுக்கு  

அருசாமப் பொழுதிலே உத்தமனைக் கொண்டு சென்று 
இருசாமப் பொழுதினிலே இருக்குமட்டும் தானிருந்து 
விடிய ஒரு சாமத்திலே விடுபட்டு வந்துவிடு

அப்போது   வான்புரவி அவருடனே சொல்லுகுது 

அருள் அருளும் ஐயாவே அப்படியே ஆகும் என்று 
வந்ததுகாண் புரவி மதுரைவள நாட்டிற்கு 

செம்பொன் கடிவாளம் தென் நாடி கை பிடித்து 
மலர் காவி தான் நடந்து வைகை வள நாட்டியரும்

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர், 
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் 
எளிய நடையில் 
வெண்கலிப்பா யாப்பில் 
இயற்றிய நூல் புலந்திரன் களவு மாலை

வான் மேகக் குதிரை 

No comments:

Post a Comment