பக்கம் 15
அல்லி தன் மகன் புலந்திரனுக்கு விலங்கு போடச் சொன்னது
அரசாளும் நாயகியார் அல்லியரும் தான் கேட்டு
சீரி பொறி பறந்து செவ்வாள் கருக விட்டு
எதித்து எதிர்த்துப் பேசுவதும் என்னுடன் சொல்லுவதும்
மறுத்துத் தடுக்கின்றாய் மன்னா கர்வம் என்ன
இந்தக் கருவத்தை இப்போது அடக்குவேன் பார்
கட்டழகி தாதியரே கருமானை அழையும் என்றாள்
விஜயனார் தன் மகனை விலங்கிலே போடும் என்றாள்
கால் விலங்கு கை விவங்கு கழட்டவொண்ணாப் பெருவிலங்கு
மார் விலங்கு தோள் விலங்கு மன்னனுக்குப் போடும் என்றாள்
புலந்திரன் சொல்வது
போரஞ்சா மன்னவன் புலந்திரனும் கூறலுற்றான்
என்னை விலங்கு போட என் செய்தேன் என் தாயே
போகாத அரண்மனைக்குப் பொற்றொடியே போனேனா
மங்கையர் கோவிலுக்கு வலுவிலும் போனேனா
குடிமகள் வாசலிலே கூசாமல் போனேனா
உப்பரிகை ஏறி தான் உயரக் குதித்தேனா
கப்பல்கள் சோங்குகள் களவுகள் செய்தேனா
என்ன கொடுமை செய்தேன் என்னை விலங்கில் இட
அல்லி விளக்கம்
அரசாளும் நாயகியார் அல்லியரும் கூறுகிறாள்
ஆரடா தம்பியரே அல்ல என்றால் போதாது
அத்தனையும் அல்லாமல் அரசே நீர் கேட்டருள்வீர்
மச்சினியாள் மீறி வளர்ந்திருக்க
மாது சிறை இருக்க மன்னவனே ஆகாது
குடியாள் சிறை இருக்க கொற்றவனே ஆகாது
நாடும் வராது மன்னா நகருகளும் சேராது
ஊரும் வராது கண்டீர் உத்தமனே உந்தனுக்கு
மச்சினியாள் கோயிலுக்கு மகனே நீ செல்லும் என்றாள்
புலந்திரன் வினா
போரஞ்சா மன்னன் புலந்திரனும் கூறலுற்றான்
உன்
ஆக்கினைக்குத் தான் பயந்து ஆய்ச்சியரே போனாலும்
அவன்
கற்கோட்டை முத்திரையும் கர்னனுட காவல்களும்
சுத்தி மதில் எழுப்பிச் சூரியனைக் காணாமல்
பக்கத்திலே எழுப்பிப் பகவானைக் காணாமல்
வாசலுக்கு ஆயிரம்பேர் வாள் வீரர் காவலுக்குள்
உருவின ஆயுதங்கள் உறையிலே போடாமல்
விழித்த கண் சிமிட்டாமல் மெல்லியலிடம் இருப்பார்
காசிவள நாடாளும் கர்னன் அதிகாரம்
தாமக் குழலாளின் தலைவாசல் காப்பானாம்
அத்தனையும் நான் கடந்து ஆய்ச்சியரே போனாலும்
ஆயிரம் தாதி அவளுடனே இருப்பாராம்
அம்மா நீராடி ஆடும் கடலாடி
விளையாடி வீற்றிருப்பார் மெல்லியலார் ஆயிரம் பேர்
பொற்றொடியாள் அரண்மனைக்கு போகும் வகை செய்யும் என்றான்
மேகப் புரவி
அரசாளும் நாயகியாள் அல்லியரும் ஏது சொல்வாள்
ஆரும் அறியாதே அம்மானைக் காணாதே
அருகிருக்கும் தொழியர்கள் யாவரும் அறியாமல்
மாதினிட வாசலிலே மன்னவரே நீர் போவீர்
மேகப் புரவியது வேந்தனே நான் தருவேன்
என் ஆணை மன்னா நீ இனி ஒன்றும் சொல்லலாதே
மன்னா நீ பேசாதே மன்னர் பெருமானே
தருமர் திரு ஆணை தம்பியர் தன் ஆணை விட்டேன்
மாதருடன் கூடி மருவி வருமளவும்
என் ஆணை மட்டும் இருக்கட்டும் இந்திரனே
புலந்திரன் = இந்திரன்
என்றும் அவள் உரைக்க இன்பமுடன் கேட்டு
மாதாவின் பாதம் மலர் தூவித் தெண்டனிட்டு
கொம்பனைக்குத் தெண்டனிட்டு கூறுவான் இந்திரனும்
உம் ஆணை கொண்டு நான் ஊர் வழிப் போவேனோ
தாய் ஆணை கொண்டு நான் தனி வழியே பொவேனோ
போனால் பலிக்குமோ பெற்றொடியே என்றனுக்கு
ஆணை விடுமின் என்று அடி வணங்கித் தெண்டனிட்டான்
அரசாளும் நாயகியாள் அல்லியரும் தான் கேட்டு
விட்டானே ஆணையெல்லாம் வேந்தர் பெருமானே
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்,
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர்
எளிய நடையில்
வெண்கலிப்பா யாப்பில்
இயற்றிய நூல் புலந்திரன் களவு மாலை
![]() |
| மேகப் புரவி |

No comments:
Post a Comment