Pages

Saturday, 23 May 2026

தெய்வம் divinity

எல்லாம் வல்ல தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன்
வாழ்வில் உயிரில் அறிவும் அவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்.

அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம்நீ
அவனில்தான்நீ உன்னில் அவன்
அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால்நீ சிறியோன்
அவனை அறிந்தால்நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்தஇடம்
அறிவு முழுமை அதுமுக்தி.

தெய்வம் எல்லா வல்லமையும் கொண்டது. அது எங்கும் இருக்கிறது. அது இல்லாத இடமே இல்லை. இதனை அவரவரே சிந்தித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். நம் உடலில் வலிமையாகவும், நம் உயிரில் நம்மை வாழ வைக்கும் அறிவாகவும் இறைவன் இருக்கிறான். நம் இன்ப துன்பமாக அவன் வெளிப்படுகிறான்.

The Divine possesses all power. It is omnipresent; there is no place where it does not exist. One must contemplate this personally to realize it. God resides within our bodies as strength, and within our souls as the consciousness that sustains our life. He manifests Himself as our joys and our sorrows.

அணுவின் இயக்கந்தான் இறைவனின் ஆற்றல். நம் வாழ்வு அந்தக் கூட்டியக்கத்தின் பக்குவம். உன்னில் இறைவன் இருக்கிறான். இறைவனுக்குள் நீ இருக்கிறாய். நம்மையும் இறைவனையும் பிரிக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்துகொண்டால் நீ பெரியவன். உணராவிட்டால் நீ சிறியவன். இதனை உணர்ந்துகொள்வதே முழுமை பெற்ற அறிவு. இந்த முற்றறிவுதான் முக்தி.

The motion of the atom is the power of God. Our life is the culmination of that collective motion. God resides within you; you exist within God. God and we are inseparable. If you realize this truth, you are great; if you fail to realize it, you remain small. To realize this is the essence of complete knowledge. This absolute knowledge is Liberation.

அணுவின் கூட்டுப் பக்குவமே நம் வாழ்வு


No comments:

Post a Comment