Pages

Friday, 1 May 2026

கண்ணகியை வாழ்த்தும்போது மூவேந்தரையும் வாழ்த்தினர்

வரிசை எண்ணில் பாடல் தொடுப்பு உள்ளது

  • கண்ணகிக்கு என்ன நேர்ந்தது என்பது இப்பகுதியில் உரைப்பாட்டாகச் சொல்லப்படுகிது
  • கண்ணகியை வளர்த்தவள் காவல்பெண்டு
  • கண்ணகியின் பணிப்பெண் அடித்தோழி
  • கடவுள் சாத்தனுடன் வாழ்ந்தவன் தேவந்தி. கணவனைப் பிரிந்து தனிமையில் இருந்தபோது கண்ணகிக்கு ஆறுதல் கூறியவள்
  • புகார் நகரத்தில் வாழ்ந்த இவர்கள் கோவலனுக்கு நேர்ந்தது கேட்டு, கண்ணகியைத் தேடிக்கொண்டு வந்தனர். 
  • அடைக்கலம் இழந்தேன் என்று மாண்டு போன மாதரியின் மகள் ஐயை என்பாளும் மதுரையில் இந்த மூவருடன் சேர்ந்துகொண்டாள். 
  • செங்குட்டுவன் நடுகல் நிறுத்தி, கண்ணகியைத் தெய்வமாக்கினான். 
  • அங்கு இந்த நான்கு பேரும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு அரற்றுகின்றனர்
  • தேவந்தி சொல்கிறாள்
  • கண்ணகிக்கு நான் தோழி
  • கணவனுடன் காட்டு வழியில் வந்த கண்ணகியை வளர்த்த தாய் நான்
  • கற்புக் கடம் பூண்ட கண்ணகிக்குப் பணிவிடை செய்யும் தோழி நான் 
  • தேவந்தி அரற்றுகிறாள்
  • தீக்கனா கண்டாயே. பலித்துவிட்டதே
  • செய்தி அறிந்தது உன் தாயும், மாமியும் மாண்டனரே - தெரியுமா
  • காவற்பெண்டு அரற்றுகிறாள்
  • செய்தி அறிந்து உன் தந்தையும், மாமனாரும் துறவு பூண்டனர் - தெரியுமா
  • அடித்தோழி அரற்றுகிறாள்
  • மாதவியும் மணிமேகலையும் துறவு பூண்டது தெரியுமா
  • ஐயையைக் காட்டி, தேவந்தி அரற்றுகிறாள்
  • அடைக்கலம் காக்க முடியவில்லையே என்று மாதரி உயிர் விட்டாள்
  • இதோ அவள் மகள்
  • செங்குட்டுவன் வியக்கிறான்
  • இது என்ன
  • வானில் மின்னல் தோன்றுகிறதே
  • கண்ணகியின் வாக்கு கேட்கிறது
  • தென்னவன் தீது இல்லாதவன்
  • நான் அவன் மகள்
  • நான் வெற்றிவேல் முருகன் குன்றத்தில் விளையாடிக்கொண்டிருப்பேன்
  • வாருங்கள் 
  • சேர்ந்து விளையாடலாம் 
  • எல்லாரும் சொல்கின்றனர்
  • சிலம்பால் பாண்டியனை வென்றவளைப் பாடுவோம்
  • செங்கோல் வளைந்தால் பாண்டியர் உயிர் வாழார் - என்று சேரன் வாயால் சொல்ல வைத்ததவளைப் பாடுவோம்
  • சேரன் கண்ணகியைத் தன் மகள் என்கிறான்
  • கண்ணகி தன்னைப் பாண்டியன் மகள் என்கிறாள்
  • நாம் சேரனையும் பாண்டியனையும் வாழ்த்துவோம் 
  • கண்ணீருக்கு விலையாகப் பாண்டியன் தன் உயிரைத் தந்தான் - அவன் குலம் வாழ்க
  • சேரன், தன் மகள் கண்ணகியை வடமன்னர் தலையில் ஏற்றினான். - சேரன் குலம் வாழ்க  
  • எல்லா
  • சோழன் புகார் நகரைப் பாடுவோம்
  • அம்மானைப் பாடல் 
  • தூங்கு எயில் எறிந்தவன்
  • புறாவுக்காகத் துலையில் ஏறியவன்
  • பசுவுக்கு நீதி வழங்கியவன்
  • இமய மலையில் புலி பொறித்தவன் 
  • அம்மனைப் பந்துகளைக் கைகளால் தட்டிக்கொண்டு பாடினர்
  • பந்தடி பாட்டு
  • பந்தடி ஓசை கொண்டு தென்னனை வாழ்த்தும் 3 பாடல்
  • சேரனின் வில் சின்னத்தைப் போற்றிக்கொண்டு ஊஞ்சலாடும் 3 பாடல்
  • உலக்கையால் குற்றிக்கொண்டு மூவேந்தரைத் தனித்தனியே போற்றும் 3 பாடல்

No comments:

Post a Comment