Pages

Friday, 1 May 2026

கண்ணகி தெய்வம் ஆனாள் - நடுகல்

வரிசை எண்ணில் பாடல் தொடுப்பு உள்ளது

  • செங்குட்டுவன் இங்கு நிலம் தரு திருவின் நெடியோன் குறிப்பிடப்படுகிறான்
  • மகளிர் விளக்கேற்றி "மன்னன் வாழ்க" என வாழ்த்தும் நேரத்தில் இவன் வஞ்சி நகருக்குள் நுழைந்தான்
  • படை வீரர்களும் ஊர் திரும்பினர்
  • அவர்களின் விழுப்புண்களுக்கு மகளிர் மார்பகம் வேது கொடுத்தது  
  • மகளிரின் முறுவல், முலை, மேனி வீரர்களுக்கு விருந்தாயிற்று
  • விருந்தளித்த தன் மேனியை மகளிர் கண்ணாடியில் பார்த்துக் கொண்டனர்  
  • யாழில் இசை பாடி மகிழ்வித்தனர்
  • காம-தேவன் ஆண்டுகொண்டிருந்தான்
  • அரசி வேண்மாள் வானில் நிலாவைக் கண்டு களிக்க வெளியில் வந்தாள்
  • விளக்கேந்திய மகளிர்
  • கருவிகளில் பண்ணிசை பாடிய மகளிர்
  • சாந்து, மணப்பொடி, புகை ஏந்திய மகளிர்
  • கண்ணாடி, மாற்றாடை, அணிகலன் ஏந்திய மகளிர்
  • அரசியுடன் வந்தனர் 
  • அரசனும் அரசியும் மணியரங்கில் அமர்ந்திருந்தனர்
  • சாக்கையன் சிவன் ஆடும் கொட்டிச்சேதம் (கொடுகொட்டி) ஆட்டம் இசை முழக்குடன் ஆடினான்
  • இந்தக் கூத்தை இருவரும் இரவில் கண்டு களித்தனர்
  • காலை 
  • அரசன் அரசவையில் இருந்தான்
  • நீலன் கஞ்சுகர் தலைவன்
  • கஞ்சுகர் கனக விசயருக்குப் பாதுகாப்பாகச் சேரன் அனுப்பிய காவலர்கள்.
  • நீலன், மாடலன் இருவரும் அவைக்கு வந்தனர்
  • சோழனும் பாண்டியனும் கூறியதைத் தெரிவித்தனர் 
  • கனக விசயரைக் காட்டியபோது, சோழன் சொன்னான்
  • அவந்தி, மகத நாட்டவர் கட்டித் தந்த சித்திர மண்டபத்தில் இருந்துகொண்டு சொன்னான்
  • போரில் எதிர்த்து நிற்க முடியாமல் தப்பி ஓடியவரைப் பிடித்து வந்தது வீரம் அன்று - என்றான்
  • பாண்டியன் சொன்னான்
  • அவனது குடைக்காம்பு ஆரிய மன்னர் போர்களத்தில் விட்டுச் சென்ற குடையின் காம்பாம்
  • அவன் கையில் இருக்கும் கோல், இந்திரன் மகன் சயந்தன் பாண்டியனுக்குப் பயந்து மூங்கிலாக மாறி ஒளிந்திருந்தபோது வெட்டிய மூங்கிலாம்
  • சேரன் தன்னிடம் தோற்றவரைக் காட்டுவது புதுமையாக இருக்கிறது - என்றான் 
  • கேட்ட சேரன், சோழனும் பாண்டியனும் தன்னை இகழ்ந்ததாக எண்ணி வெகுண்டான்
  • அரசே
  • சினம் வேண்டாம்
  • என்று மாடலன் வேண்டினான்
  • அரசனாக 50 ஆண்டுகள் இருந்துவிட்டீர்கள்
  • இன்னும் அறக்கள வேள்வி செய்யாமல் மறக்ககள வேள்வி செய்ய நினைக்கிறீர்கள் - என்றான்
  • போரில் கண்ட வெற்றிகள் ஒருவனுக்கு நிலையானவை அன்று
  • உனக்கு நரை வந்துவிட்டது
  • நான் சொல்வதைக் கேள்
  • உன் உயிர் அடுத்த பிறவியில் யாதாய் இருக்கும் எனக் கூறுவதற்கு இல்லை. 
  • உடம்பில் புகுந்த உயிர் வெற்றுடம்போடு அழியக்கூடாது
  • உடம்பின் நற்செயல்களை அடுத்த பிறவிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
  • அதற்கு நீயும் உன் மனைவியும் சேர்ந்து வேள்வி செய்ய வேண்டும் 
  • என்றான்
  • மன்னன் ஒப்புக்கொண்டான்
  • பார்ப்பனரைக் கொண்டு வேள்வி சாந்தி செய்ய ஏவினான்
  • கனக விசயரை விடுவித்தான்
  • அவர்களை வேளாவிக்கோ மாளிகையில் தங்க வைத்தான்
  • வேள்வி முடிந்த பின் நகருக்குள் செல்லலாம் என்று வில்லவன் கோதையிடம் தெரிவித்தான்
  • சிறையிலிருக்கும் அனைவரையும் விடுதலை செய்தான்
  • ஆட்சிப் பொறுப்பினைப் படைத்தலைவன் அழும்பில்வேளிடமும் ஆயத்தாரிடமும் ஒப்படைத்தான் 
  • தன் மைத்துனன் சோழன்  கிள்ளிவளவன் தன் நாட்டை ஆளுமாறு செய்தான்
  • கண்ணகிக்குக் கடவுள் மங்கலம் செய்தான்
  • கண்ணகியின் வஞ்சினத்தைப் பாராட்டினான்
  • வேங்கை மரத்தடியில் கடவுள் மங்கலம் செய்யப்பட்டது
  • வித்தகர் கண்ணகியைத் தெய்வப் படிமம் ஆக்கினர்
  • பூசை, விழா நடைபெற நிலங்கள் அளித்தான் 

No comments:

Post a Comment