எண் தொடுப்பில் பாடல் உள்ளது
- செங்குட்டுவன் இமயத்தில் கல் எடுத்தான்
- கனக விசயர் தலையில் ஏற்றிக் கொண்டுவந்தான்
- கங்கையில் நீராட்டினான்
- தேவர்க்கும் அசுரர்க்கும் போர் நடந்த காலம் 18 ஆண்டு
- இராமனுக்கும் இராவணனுக்கும் போர் நடந்த காலம் 18 மாதம்
- பாரதப் போர் நடந்த காலம் 18 நாள்
- இந்தப் போர் நடந்த காலம் 18 நாழிகை
- ஆரிய மன்னர்கள் செங்குட்டுவன் கங்கை ஆற்றின் தென்கரையில் தங்கப் பல வகையான பாடி வீடுகள் (கூடாரங்கள்) கட்டித் தந்தனர்
- அன்று செங்குட்டுவனுக்குப் பிறந்த நாள்
- வெற்றி தேடித் தந்தவர்களுக்குப் பொன்னணிகள் வழங்கினான்
- அப்போது மாடல மறையோன் அங்கு வந்தான்
- மன்னனை வாழ்த்தினான்
- கானல் பாணி கனக விசயர்தம் முடித்தலை நெறித்தது - என்றான்
- இப்படிச் சொன்னால் இங்குள்ளவர்களுக்குப் புரியாது
- விளக்கமாகச் சொல் என்றான் சேரன்
- மாதவி பாடிய கானல் வரிப் பாடலால் கனக விசயர் கல்லைச் சுமந்தது பற்றி விளக்கமாகச் சொன்னான்
- மாடலன் மேலும் சொல்கிறான்
- கோவலன் இறந்த செய்தி கேட்டு - அடைக்கலப் பொருளைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக - மாதரி தன் உயிரை மாய்த்துக்கொண்டாள்
- கவுந்தியடிகள் உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்தார்
- உயிர் துறந்த பாண்டியனுக்குப் பின்னர் பொற்றேர்ச் செழியன் அரசன் ஆனான்
- புகார் நகரில் நான் சொல்லக் கேட்டு, கோவலன் தந்தை தன் செல்வத்தை எல்லாம் தானமாக வழங்கிட்டு சமணப் பள்ளியில் நோன்பு இருக்கிறான்
- கோவலன் தாய் துயரம் தாங்க முடியாமல் இறந்து போனாள்
- கண்ணகி தந்தை செல்வத்தைத் தானம் செய்துவிட்டு, சமணத் துறவி ஆனான்
- கண்ணகி தாய் உயிர் துறந்தாள்
- செய்தி அறிந்த மாதவி தன் மகள் மணிமேகலையை, மொட்டை அடித்து, புத்த மடத்தில் சேர்த்து, துறவி ஆக்கினாள்
- இப்படி என் வாய்ச்சொல் கேட்டுப் பலர் மாண்டுபோனதால் அந்தப் பாவத்தைப் போக்கக் கங்கையில் நீராட வந்திருக்கிறேன்
- பாண்டியன் இறந்த பின் பாண்டிய நாட்டில் என்ன நடந்தது - எனச் சேரன் வினவினான்
- மாடலன் சேரனைத் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று சொன்னான்.
- உன் மைத்துனன் கிள்ளிவளவன்
- அவன் தாயாதியர் 9 பேர்
- இவர்கள் இளவரசு பட்டம் பெற முடியாமல் கிள்ளிவளவனை எதிர்த்துப் போரிட்டனர்
- அவர் அனைவரையும் ஒரு நாள் போரிலேயே வென்று உன் மைத்துனன் கிள்ளிவளவன் அரசுரிமை பெறுமாறு செய்தவன் நீ
- மோகூரில் இருந்துகொண்டு நாடாண்ட பாண்டியனின் காவல்-மரம் வேம்பை வெட்டிய பொறையனே! கேட்டருள் என்று மாடலன் மேலும் சொல்கிறான்
- நீதிக்காகத் தன் உயிரைக் கொடுத்த பாண்டியனுக்குப் பின்னர் வெற்றிவேல் செழியன் அரசன் ஆனான்
- அவன் முதல் பணியாக 1000 பொற்கொல்லர்களைக் கொன்றான்
- மாடலன் கூறிக்கொண்டிருக்கும்போது பிறைநிலா தோன்றிற்று
- கணியன் பிறையை நோக்கினான்
- "வேந்தே! வஞ்சி நகரை விட்டு நாம் புறப்படு 32 மாதங்கள் ஆயின - என்றான்.
- மாடலனைத் தனியே அழைத்து, சோழ நாட்டில் தன் மைத்துனன் கிள்ளிவளவன் ஆட்சி எவ்வாறு உள்ளது - என வினவினான்
- மூன்று தூங்கெயில்களை அழித்த தூங்கெயில் எறிந்த தொடிதோள் செம்பினின் வழி வந்த சோழன் வெற்றிகள் பலவற்றைக் குவித்தான்
- புறாவுக்காகத் தன் உடலை அரிந்து கொடுத்த சோழனின் வழிவந்த அவன் அறநெறி பிறழாமல் ஆண்டுவருகிறான் - என்றான்
- செங்குட்டுவன் உடல் 50 கா நிறையளவு கொண்டது
- தன் எடைக்கு எடை ஆடகப் பொன்னை மாடலனுக்குப் பரிசாக வழங்கினான்
- தன்னிடம் தோற்ற கனக விசயரை சோழனுக்கும், பாண்டியனுக்கும் காட்டிவருமாறு 1000 கஞ்சுக வீரர்கள் துணையுடன் அனுப்பினான்.
- தும்பைப் பூ சூடி வடதிசை நோக்கிச் சென்ற செங்குட்டுவன் படை வாகைப்பூ சூடிக்கொண்டு நாடு திரும்பிற்று.
- செங்குட்டுவன் மனைவி கனக மாளிகை முத்துப் பந்தல் அன்னத்தூவி மெத்தையில் உறக்கமின்றிக் கிடந்தாள்
- செவிலியர் அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர்
- கூன்மகளும், குறுமகளும் ஓடிவந்து செங்குட்டுவன் வருவதை அரசிக்குக் கூறினர்
- குறத்தியர் தினைப்புனம் காக்கும் பாடல் ஒலி கேட்டது
- தேறல் உண்ட கானவன் மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்தான்
- குடவர் கோமான் திரும்பினான்
- நாளைக்கு நல்லேர் விழா - என்று உழவர்கள் பேசிக்கொண்டனர்
- கோவலர் குழல் ஊதினர்
- நெய்தல் நில மகளிர் கழங்கு ஆடிக்கொண்டு நெய்தல் பாணி பாடினர்
- அரசி நானிலப் பண்களையும் கேட்டுக்கொண்டிருந்தாள்
- வலம்புரி சங்கு ஊதும் ஒலியுடன் செங்குட்டுவன் வந்தான்.
No comments:
Post a Comment