Pages

Thursday, 30 April 2026

கண்ணகிக்குக் கல் எடுக்கச் சென்றது - கால்கோள்

 எண் தொடுப்பில் பாடல் 

  • ஆட்சிக்குத் துணை புரியும் அரசனின் சுற்றம் கூடியிருந்தது
  • முனிவர்கள் சொன்னதாக, செங்குட்டுவன் கூறுகிறான். 
  • "தமிழ் அரசர் இமயத்தில் வில், கயல், புலிச் சின்னங்களைப் பொறித்த காலத்தில் எம்போன்ற அரசர் இல்லை" என்று வடபுல மன்னர் சிலர் பேசிக்கொண்டார்களாம். 
  • அவர்களை வென்று கண்ணகி நடுகல்லைச் சுமந்து வரச் செய்வேன்
  • செய்யாவிட்டால் "நான் குடி நடுங்க ஆளும் கொடுங்கோலன்"
  • சினம் தணிக என ஆசான் செங்குட்டுவனிடம் கூறினான்
  • பஞ்சாங்கம் சொல்லும் பெருங்கணி கூறினான்
    • நல்ல நேரம். 
    • விரும்பிய திசையில் செல்லலாம்
  • பெருஞ்சோறு என்னும் அரசு விருந்து 
  • படைத்தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது
  • படைக்கருவிகள் இடம் பெயர்த்து வைக்கப்பட்டன
  • செங்குட்டுவன் சிவனை வணங்கினான்
  • வஞ்சி சூடினான்
  • யானைமேல் ஏறினான்
  • திருமால் சடாரியைத் தோளில் பெற்றுக்கொண்டான்
  • நாடக மகளிர் அரங்கில் அணிவகுத்து, கைகூப்பி வணங்கினர்
  • மாகதர், சூதர், வைதாளிகர் வாழ்த்தினர்
  • படைவீடு அமைத்து படை தங்கிற்று
  • காண வந்த வானவரை மன்னன் வணங்கினான்
  • முனிவர்கள் வாழ்த்தினர்
  • வடநாட்டு அந்தணர்களைக் காப்பது உன் கடமை - என்றனர்
  • கொங்கண, கருநாடக கூத்தாடிகள் ஆடிப் பாடி வாழ்த்தினர்
  • குடநாட்டு மகளிர் கூத்தாடினர்
  • ஓவியர் குடிமக்கள் வாழ்த்தினர்
  • கூத்தர் கூத்தாடி வாழ்த்தினர்
  • வாழ்த்திய எல்லாருக்கும் மன்னன் பரிசு வழங்கினான்
  • கலைஞரும், படையினரும் சென்றனர்
  • சஞ்சயன் என்பவன் இவர்கள் செல்ல ஊர்திகள் கொடுப்பதாகச் சொன்னான்
  • சஞ்சயன் மன்னனை வாழ்த்தினான்
  • சஞ்சயன் நூற்றுவர் கன்னர் தலைவன்
  • ஆணையிட்டால் அந்தக் கல்லை அங்கிருந்து நான் கொண்டுவந்து தரமாட்டேனா - என்றான்
  • கனகன், விசயன் இருவரும் பாலகுமரன் மகன்கள் 
  • அவர்கள் தமிழ்வேந்தர் ஆற்றலை அறியாமல் பேசியிருக்கின்றனர்
  • அவர்களை அடக்கச் செல்கிறேன்
  • சஞ்சையன் கங்கையைக் கடக்க, படகு உதவின் நன்று - என்றான் சேரன்  
  • பாண்டியனின் ஓலை ஒன்று செங்குட்டுவனுக்கு வந்தது
  • நீலகிரிப் பாடிவீட்டை விட்டு செங்குட்டுவன் படை சென்றது
  • சஞ்சையன் படகு உதவியால் கங்கை ஆற்றைக் கடந்தான்
  • வட கரையில் பாடிவீடு அமைத்துத் தங்கினான்
  • கனகனும் விசயனும் மன்னர் பலரின் படைத்துணையுடன் செங்குட்டுவன் படையை எதிர்கொண்டனர்
  • செங்குட்டுவன் என்னும் சிங்கம் வடவர் படைகளாகிய யானைகளைத் தாக்கிற்று
  • போர் நடந்தது 
  • கனகன், விசயன் இருவரும் பிடிபட்டனர்
  • இவர்க்களுக்குத் துணைநின்ற 52 அரசர்கள் மாறு வேடத்தில் தப்பித்துக்கொண்டனர் 
  • செங்குட்டுவன் வெற்றியைப் போற்றி, அவனது தேருக்கு முன்னரும், பின்னரும் கலைஞர்கள் குரவை ஆடினர்.
  • படைத்தலைவன் வில்லவன் கோதையுடன் செங்குட்டுவன் மறக்களப் போரில் வென்றான்
  • கல் எடுக்கும் சடங்கிற்குத் தீ வளர்த்து வேதம் ஓதப்பட்டது  
  • இமயத்தில் தேர்ந்து கண்ணகிக்குக் கல் எடுக்கப்பட்டது

No comments:

Post a Comment