Pages

Thursday, 30 April 2026

இமய மலையிருந்து கண்ணகிக்கு நடுகல் - காட்சி

வரிசை எண்ணுக்குள் பாடல் தொடுப்பு உள்ளது. 

  • வாய்வாள் கோதை எனப் போற்றப்படுபவன் சேரன் செங்குட்டுவன்
  • கடல் போரில் கடம்பர்களை வென்றவன்
  • இமயத்தில் வில் பொறித்தவரின் வழித்தோன்றல் 
  • இலவந்தி என்பது அவன் வாழும் வெள்ளை-மாளிகை
  • அவன் மனைவி இளங்கோ வேண்மாள்
  • மலைவளம் காணவேண்டும் என்று இவளுடன் மாடத்தில் இருக்கும்போது விரும்பினான்
  • அரசு சுற்றம் சூழப் புறப்பட்டுச் சென்றான்
  • தலைநகர் வஞ்சிமுற்றத்தை விட்டுச் சென்றான் 
  • பேராறு (பேரியாறு) பாயுமிடம் சென்றான்
  • யானைமேல் ஏறிக் கண்டு களித்தான்
  • அதன் மணல் பரப்பில் அரசச் சுற்றம் சூழ அமர்ந்திருந்தான்.  
  • குன்றக் குரவை பாடும் ஒலி கேட்டது
  • வள்ளைப்பாட்டு, 
  • தேன் எடுக்கும் ஒலி 
  • பாகர் யானையைப் பழக்கும் ஒலி
  • முதலான பல்வகை ஓசைகள் கேட்டன.
  • கானவர் அரசனுக்குத் திறைப்பொருள்கள் கொண்டுவந்தனர் 
  • அவற்றில் யானைத்தந்தம், அகில் முலான எண்ணற்ற பொருள்கள் இருந்தன. 
  • காணிக்கை கொண்டுவந்த மலைக்குறவர்கள் கண்ணகி வானில் சென்றது பற்றிக் கூறினர். 
  • அவள் யாரோ
  • எந்த நாட்டவளோ
  • இந்த நாட்டுக்கு வந்தாள் 
  • என்று கூறினர் 
  • மன்னன் மலைவளம் காணும்போது (மணிமேகலை காப்பியம் இயற்றிய) தண்டமிழ்ச் சாத்தன் உடனிருந்தார்.
  • அந்தப் பெண்ணைப்பற்றிய செய்திகள் தனக்குத் தெரியும் என்று அனைத்தையும் கூறினார். 
  • "உன்னிடம் முறையிடுபவள் போலச் சேரநாட்டுக்கு வந்திருக்கிறாள்" - என்றார். 
  • முறை தவறிய செய்தி பிற மன்னர் அறிவதற்கு முன் பாண்டியன் தன் உயிரை விட்டது அவனது வளைந்த கோலைச் செங்கோல் ஆக்கி இருக்கிறது - என்றான் சேரன்
  • மக்களைக் காக்கும் மன்னனாகப் பிறத்தல் துன்பம் தருவதே அல்லாமல், தொழும் தகைமை உடையது அன்று - என்றான்
  • இரண்டு பெண்கள்
  • ஒருத்தி கணவனுடன் உயிர் துறந்த பாண்டிமாதேவி
  • மற்றொருத்தி போராடி இந்நாட்டுக்கு வந்தவள்
  • இருவரில் யார் வியப்புக்கு உரியவர் 
  • என்று சேரன் தன் மனைவி வேண்மாளை வினவினான்.
  • காதலனுடன் உயிர் துறந்த பாண்டியன் மனைவி கற்பு சிறந்ததுதான்
  • என்றாலும்
  • கற்பரசி என்பதை நிலைநாட்டிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்த கண்ணகியை நாம் வாழ்த்தி வணங்க வேண்டும் - என்றாள் சேரன் மனைவி.
  • சேரன் சிற்பக் கலைஞனைப் பார்த்தான்
  • கலைஞன் புரிந்துகொண்டான்
  • சிலை செய்யும் கல்லை,
  • பாண்டினின் பொதிய மலையில் எடுத்து, சோழனின் காவிரியில் நீராட்டிக் கொண்டுவரலாம்
  • இமய மலையில் எடுத்து கங்கையில் நீராட்டிக் கொண்டுவரலாம்
  • இரண்டும் தகவு தகவுடைய செயல்தான் - என்றான்.
  • இமயத்தில் கல் எடுத்துவரலே தனக்குப் பெருமை எனச் சேரன் கருதினான். 
  • போர் தொடங்கும் வஞ்சி மலர் சூடிக்கொண்டு சேரர் படை புறப்பட்டது. 
  • வீரர்களுக்குப் பெருஞ்சோறு வழங்கப்பட்டது.   
  • வில்லவன் கோதை என்பவன் சேரர் படையின் தலைவன்
  • கொங்கு நாட்டில் பாண்டியனையும், சோழனையும் வென்ற புகழ் மறைந்துகொண்டு வருகிறது
  • வடதிசை மன்னர்களை வெல்லவேண்டும்
  • ஓலை அனுப்புங்கள் - என்றான் வில்லவன்.
  • அழும்பில் வேள் என்பவன் சேரனின் அமைச்சன்
  • இவன் சொல்கிறான்
  • மற்ற நாட்டு ஒற்றர்கள் நம் வஞ்சி நகரில் இருக்கின்றனர். 
  • "இமயத்தில் கண்ணகிக்குக் கல் எடுக்கச் சேரன் வருகிறான்
  • "எல்லாரும் பணிந்து திறை கொடுக்க வேண்டும்
  • "இல்லாவிட்டால் 
  • "இவன் 
  • "கடம்பர்களைக் கடற்படை கொண்டு வென்றது போலவும்
  • "இமயத்தில் இவன் முன்னோன் வில் சின்னம் பொறித்தபோது நிகழ்ந்தது போலவும்  
  • "நிகழும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" - 
  • இவ்வாறு கூறி வஞ்சி நகரில் முரசு அறையப்பட்டது.  

No comments:

Post a Comment