Pages

Wednesday, 29 April 2026

குன்றக் குரவை

வரிசை எண்ணுக்குள் பாடல் தொடுப்பு உள்ளது

  • குன்றக் குறத்தியர் கண்ணகியை வினவுகின்றனர்
  • எங்கள் தெய்வம் வள்ளி போல் வேங்கை மர நிழலில் நிற்கின்றீர்
  • நாங்கள் நடுங்கும்படி ஒரு முலையை இழந்து நிற்கின்றீர்
  • நீர் யார் என அறியலாமா
  • ஊழ்வினை வந்து உருத்திய காலத்தில் மதுரை நகரில் கணவனை இழந்து இங்கு வந்திருக்கும் கொடிய வினைக்காரி நான் - என்று சினம் தணிந்த நிலையில் கண்ணகி மலைக்குறத்தியரிடம் கூறினாள்.
  • கேட்டதும் குறத்தியர் கைகூப்பி, கண்ணகியை வணங்கினர்
  • அப்போது மலர்-மாரி பொழிந்தது
  • வானவர் தலைவன் கோவலனுடன் வந்து கண்ணகியை அழைத்துச் சென்றான். 
  • இதனைக் கண்ட மலைக்குறத்தியர்
  • இவளைத் தெய்வமாக வழிபடுவோம்
  • பறம்பு மலை அருவி ஓரத்தில் இவளுக்குக் கல் நடுவோம்
  • நம் இசைக்கருவிகளை முழக்குவோம்
  • விழா எடுப்போம்
  • இவள் ஒருமுலை இழந்த நங்கை தெய்வம் 
  • என்று தீர்மானிக்கின்றனர். 

குரவை என்பது ஒரு நடனக்கூத்து. இது பாடிக்கொண்டு ஆடப்படும். இங்குள்ள பாட்டு கொச்சகக் கலிப்பா யாப்பிசை கொண்டதாக உள்ளது. இதில் தரவு, மூன்றடுக்குத் தாழிசை என்னும் உறுப்புகள் இடம் மயங்கி வந்து இறுதியில் சுரிதகம் கொண்டதாக அமைந்துள்ளது. 

  • குரவை ஆட்டம் 
  • அருவியில் நீராடுவது போல்  நடனம் ஆடுகின்றனர்
  • (கலிப்பா - தரவு)
  • புனல் ஓடுகிறது என்று பாடிக்கொண்டே ஆடுகின்றனர்
  • (3 தாழிசைப் பாடல்)
  • வேலவன் முருகன் மலைத்தெய்வம்
  • மாமரத்தை வெட்டி வீழ்த்திய வேலைப் பாடுவோம் (தரவு)
  1. சூரபன்மனைக் கொன்றது
  2. மயிலில் ஏறியது
  3. சரவணப் பொய்கையில் 6 தாய்மாரிடம் பால் உண்டது  (3 தாழிசை)
  • பற்றிக் பாடுவோம்
  • வெறியாட வேலன் வருக (தரவு) (தோழி கூற்று)
  • வெற்பன் செய்த நோயைத் தீர்க வேலன் வந்தால் அவன் மடவன் (3 தாழிசை) (தலைவி கூற்று)
  • வேலன் வந்தால் வெற்பனோடு திருமணம் நடக்க உதவ வேண்டும் என்று அவனை வேண்டிக்கொள்வோம் - என்று தோழி கூறும் பாட்டு 
  • வெற்பனோடு தலைவிக்குத் திருமணம் நடத்திவை என வேண்டும் 3 தாழிசைப் பாட்டு.
  • பாடி ஆடுகின்றனர் 
  • இந்தப் பாட்டாட்டதை தலைவன் மறைந்திருந்து கேட்டு, திருமண மாலையுடன் வெளிப்பட்டு வர தலைவி தலைவனின் அடிகளைத் தொழுவதாகச் சொல்லும் பாட்டு (கலிப்பா சுரிதகம்)  
  • (இத்துடன் கலிப்பா முடிகிறது)
  • என் தலைவிக்கு வேலன் தெய்வம் அன்று
  • வெற்பனாகிய நீதான் தெய்வம்
  • என்று தோழி வெற்பனாகிய தலைவனிடம் கூறுகிறாள்

இங்கே 
பாடுபொருள் 
மாறுகிறது

  • இனி முலையால் மதுரையை எரித்து கணவனுடன் வானுலகம் சென்றவளைப் பாடிக் குரவை ஆடுவோம் என்கின்றனர். 
  • கண்ணகி மதுரையை எரித்ததைப் பாறிக்கொண்டு குரவை ஆடுகின்றனர்.
  • கணவனுடன் வானுலகம் சென்ற காட்சி பற்றிப் பேசிக்கொள்வதை மக்கள் நிறுத்தவே இல்லை
  • வானுலகம் சென்றவள் திரும்பி வரமாட்டாள்
  • இவளைப் பாடும் மகளிர் தாம் விரும்பும் கணவனை அடைவர். 
  • என்கின்றனர்
  • குரவையில் பாடியது கேட்டுத் தலைவன் வந்தான். 
  • கொல்லிமலையை ஆளும் குடவர் கோமான் வாழ்க
  • இமயத்தில் வில் பொறித்த சேரன் வாழ்க
  • என்று கூறி இந்த கூத்து முடிகிறது. 

No comments:

Post a Comment