Pages

Wednesday, 29 April 2026

மதுரைத் தெய்வம் சொன்னது

வரிசை எண்ணில் பாடல் தொடுப்பு உள்ளது

  • மதுரைத் தெய்வம் (மதுரை மீனாட்சி) கண்ணகியைப் பின்தொடர்ந்து நடந்துகொண்டிருந்தாள்
  • அவள் தோற்றம் பற்றிப் பாடல் விரிவாகப் பேசுகிறது
  • "பெண்ணே கேள்" என்று தெய்வம் பேசிற்று.
  • கண்ணகி முகத்தை மட்டும் திருப்பிப் பார்த்தாள்
  • பெருமாட்டியே நீ யார்
  • என்னைப் பற்றி அறிவாயா
  • என்று வினவினாள்
  • அறிவேன்
  • என் பெயர் கூடல் மதுராபதி
  • உன் கணவனுக்கு நேர்ந்தது பற்றிச் சொல்ல வருகிறேன். 
  • பாண்டியன் அறனிலை பிறழாதவன்
  • கதவைத் தட்டிய குற்றத்துக்காக, தன் கையைத் தானே வெட்டிக்கொண்டு, பொற்கைப் பாண்டியன் ஆனவன், பாண்டியன். 
  • பாரதப் போரில் இருதிறப் படைகளுக்கும் பெருஞ்சோறு அளித்த சேரனிடம் பரிசில் பெற்ற பராசரன் என்னும் பார்ப்பான் ஊர் திரும்பிக்கொண்டிருந்தான்
  • வழியில் பாண்டி நாட்டுத் தங்கால் என்னும் ஊரில் இளைப்பாறினான்.
  • சிறுவர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டனர்
  • அவன் சிறுவர்களுக்கு வேதம் சொல்லிக்கொடுத்தான்
  • வார்த்திகன் என்னும் சிறுவன் எளிதில் கற்றுக்கொண்டு ஓதிக் காட்டினான் 
  • வார்த்திகனுக்குப் பராசரன் தான் சேரனிடம் பெற்றுவந்த பரிசுகளில் சிறந்தவை சிலவற்றை வழங்கினான். 
  • பின்னர் தன் ஊர் புகார் நகரம் மீண்டான் 
  • பராசரன் தந்த அணிகலன்களை வார்த்திகன் அணிந்திருந்தான்
  • அதனைக் கண்ட ஊர்மக்கள் இளவரசன் நகைகளை வார்த்திகன் திருடிக்கொண்டான் என்று அவனைச் சிறையில் இடச்செய்தனர். 
  • அதனைக் கண்ட வார்த்திகன் மனைவி கார்த்திகை காளி கோயிலில் முறையிட்டாள். 
  • காளி தன் கோயில் கதவைச் சாத்திக்கொண்டாள்.
  • காளிகோயில் கதவு திறக்க முடியாமல் போனதைப் பாண்டியன் அறிந்தான். 
  • என் ஆட்சியில் கொடுமை நடக்கிறதா - என மன்னன் வினவினான். 
  • சிறையிலிருந்த வார்த்திகன் கொண்டுவரப்பட்டான். 
  • அவனிடமிருந்து மன்னன் உண்மையை உணர்ந்தான். 
  • வார்த்ததிகனை விடுவித்தான் 
  • மேலும் நிலக்கொடைகளும் வார்த்திகனுக்கு வழங்கினான்
  • கார்த்திகை மகிழ்ந்தாள் 
  • காளி கோயில் கதவம் தானே திறந்துகொண்டது 
    • பாண்டியன் நீதி தவறான் - என்று மதுராபதி தெய்வம் கண்ணகிக்கு இந்த நிகழ்வைக் கூறிற்று. 
  • ஆடி - தேய்பிறை - 8 ஆம் நாள் மதுரை எரியும் - என்னும் சாபம் இருந்ததுபற்றி மதுராபதி தெய்வம் கூறுகிறது.
  • அண்ணன் தம்பியர் சிங்கபுரம், கபிலபுரம் என்னும் ஊர்களில் இருந்துகொண்டு நாடாண்டு வந்தனர்
  • இரு நாடுகளுக்கும் இடையில் ஆறு
  • காத தூரம்
  • இந்த இடைவெளியில் யாரும் செல்வதில்லை
  • சிங்கபுரத்து வணிகன் சங்கமன் வணிகத்தின் பொருட்டு அந்த இடைவழிப் பகுதியில் தன் மனைவி நீலி என்பவளுடன் சென்றுகொண்டிருந்தான்.  
  • வணிக மூலதனமாகப் பெருஞ்செல்வம் வைத்திருந்தான். 
  • பரதன் என்பவன் கபிலபுர அரசனின் ஆளாக அப்பகுதியைக் காத்துவந்தான். 
  • பரதன் சங்கமனை ஒற்றன் என்று தன் மன்னனிடம் காட்டிக் கொலை செய்தான். 
  • மனைவி நீலி அழுது புலம்பினாள்.
  • 7 ஆம் நாள் கணவனுடன் வானுலகம் சென்றாள்.
  • அப்போது பரதனைச் சபித்தாள்
  • "எனக்குத் துன்பம் செய்த நீ இதே துன்பத்ததை அனுபவிப்பாயாக" - இதுதான் அந்தச் சாபம். 
    • பரதன் - கோவலன்
    • நீலி - கண்ணகி
  • முற்பிறவி வினை பின் பிறவியில் தாக்கும்
  • இன்றைக்குப் 14 ஆம் நாள் நீ உன் கணவனை வானோர் வடிவில் பெறுவாய் 
  • என்று மதுராபதி தெய்வம் கண்ணகியிடம் கூறிற்று.
  • கிழக்கு வாயில் வழியே மதுரைக்குள் நுழைந்தேன்
  • மேற்கு வாயில் வழியே நீங்குகிறேன்
  • என்று மதுராபுரித் தெய்வத்திடம் கண்ணகி கூறினாள்
  • வைகை ஆற்றின் ஒருபுறக் கரை வழியே நடந்தான்
  • நெடுவேள் குன்றத்தில் ஏறினாள்
  • வேங்கை மரத்தடியில்  நின்றாள்
  • தேவேந்திரன் கோவலனுடன் வான-ஊர்தியில் வந்து கண்ணகியை வானுலகுக்குக் கொண்டு சென்றான்.
  • வெண்பா
  • தெய்வத்தைத் தொழாமல் கொழுநனைத் தொழுபவளை, தெய்வம் தொழும். 
  • இதில் உள்ள கட்டுரை மதுரைக் காண்டத்தின் செய்திகளைத் தொகுத்துக் கூறுகிறது.
  • அரசன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.

No comments:

Post a Comment