வரிசை எண்ணில் பாடல் தொடுப்பு உள்ளது
- வேந்தன் தேவியே! கேள்.
- முற்பகலில் ஒருவனுக்குக் கேடு செய்தால் பிற்பகலில் அவனுக்குக் கேடு விளையும்
- இதுதான் உன் கணவனுக்கு நிகழ்ந்துள்ளது
- புகார் நகரில் வாழ்ந்த கற்புடை மாந்தர் 7 பேர்
- வன்னி மரத்தைத் திருமணத்துக்கு சாட்சியாக நிறுத்தியவள்
- அற்றங்கரை மணல்-பாவையை, கணவன் எனக் காத்தவள்
- காவிரியாறு இழுத்துச் சென்ற காதலன் ஆட்டனத்தியை ஆற்று வெள்ளத்திடம் கேட்டுப் பெற்றவள்
- வாணிகம் செய்யக் கப்பலில் சென்றவன் திரும்பும் வரையில் கடற்கரையில் கல்லாய் நின்று கணவன் திரும்பியதும் பெண் ஆனவள்
- மாற்றாள் குழந்தை கிணற்றில் விழ, தன் குழந்தையையும் கிணற்றில் எறிந்து இரண்டையும் மீட்டுக்கொண்டவள்
- கணவன் திரும்பும் வரை, தன் முகத்தைக் குரங்கு-முகம் ஆக்கிக் கொண்டவள்
- தந்தை மறுத்தும், தாய் அவள் தோழிக்குத் தந்த வாக்கின்படி, ஏழை ஒருவனை மணந்துகொண்டவள்
- இப்படிப்பட்டவர் வாழ்ந்த புகார் நகரில் பிறந்தேன் - என்று கண்ணகி பாண்டிமாதேவியிடம் கூறினாள்.
- நானும் ஒரு பத்தினி என்றால் மதுரையை எரிப்பேன் - என்றாள் கண்ணகி
- மதுரையை மூன்று முறை வலம்வந்தாள்.
- தன் இடப்பக்க முலையைத் திருகி மதுரை மீது எரிந்தாள்
- தீக் கடவுள் அவள் முன் நின்றான்
- எரிக்கும்போது யார் யாரை எரிக்காமல் விடவேண்டும் என வினவினான்.
- பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழந்தை - ஆகியவர்களை விட்டுவிட்டுத் தீய செயல் புரிபவர் பக்கம் சென்று எரிப்பாயாக - என்று கண்ணகி கூறினாள். அவ்வாறே மதுரை மாநகரம் எரிந்தது.
- வெண்பா
No comments:
Post a Comment