Pages

Tuesday, 28 April 2026

வழக்கும் தீர்ப்பும் | The Case and the Verdict

வரிசை எண்ணில் பாடல் தொடுப்பு உள்ளது

1 
  • அரண்மனை வாயில் காவலனிடம் கண்ணகி பேசுகிறாள்
  • எல்லா
  • அரசன் குடையும், கோலும் நிலத்தில் விழும்
  • திசையெல்லாம் அதிரும் 
  • வானவில் ஒடியும்
  • விண்மீன்கள் உதிரும்
  • எங்கும் இருளும்
  • இவற்றை நான் காண்பேன்
2  
  • வாயில் காவலன் நினைக்கினான்
  • அப்படியாயின் மன்னர்க்கு நான் சொல்ல வேண்டும்
3 
  • அரசன் மனைவி கோப்பெருந்தேவி கனா
  • அரசன் அரியணையில் இருக்கிறான்
  • அரசி தான் கண்ட தீய கனா பற்றிச் சொல்ல அவனிடம் செல்கிறாள்
  • அழகியர் வண்ணம், சுண்ணம் முதலான மங்கலப் பொருள்களுடன் அவளோடு செல்கின்றனர் 
4 
  • வாயில் காவலனிடம் கண்ணகி சொல்கிறாள்
  • தவறான தீர்ப்பு சொன்ன அரசனின் வாயில் காவலனே
  • கணவனை இழந்த பெண் ஒருத்தி கையில் சிலம்புடன் வாயிலில் நிற்கிறாள் என்று உன் அரசனிடம் சொல்.
  • வாயிலோன் மன்னனிடம் கூறுகிறான்
  • வாழி வேந்தே
  • காளி போல் ஒருத்தி
  • கையில் சிலம்பு வைத்துக்கொண்டு
  • சினக்கோலத்துடன் வாயிலில் நிற்கிறாள்
  • "உள்ளே வர விடுக" என்றான் மன்னன்
  • நுழைய விட்டான்
  • அரசன் முன் நின்றாள்
  • கண்ணீருடன் நிற்பவளே
  • நீ யார்
  • வேந்தன் வினவினான்
  • தேரா மன்னா
  • புறாவை காப்பாற்றத் தன்தசையைக் கழுகுக்குத் தந்தவன்
  • தன் மகன் மேல் தேரை ஓட்டி, பசுவுக்கு நீதி வழங்கியவன்
  • ஆட்சித் தலைநகர் புகார் என் ஊர்
  • ஊழ்வினையின் தாக்கத்தால் என் கணவன் உன் நகரில் என் சிலம்பை விற்க வந்தான்
  • அவன் உன்னால் கொல்லப்பட்டான்
  • நான் அவன் மனைவி கண்ணகி
  • கள்வனைக் கொல்லுதல் கடுங்கோல் அன்று
  • ஆட்சி முறைமை
  • என்றான் அரசன்
  • ஆராயாத அரசனே
  • என் சிலம்பின் உள்ளே இருக்கும் பரல்கள் மணிக்கற்கள்
  • என்றாள் கண்ணகி
  • இனியவை சொன்னாய்
  • என் சிலம்பில் இருக்கும் பரல் முத்து
  • என்றான் அரசன்
  • இரண்டு சிலம்புகளையும் கொண்டுவரச் சொன்னான்
  • கொண்டு வந்தனர்
  • கண்ணகி முன் வைத்தான்
12
  • கண்ணகி தன் சிலம்பை எடுத்தாள்
  • உடைத்தாள்
  • அதிலிருந்து தெறித்த மணிக்கல் ஒன்று மன்னன் வாயில் பட்டது
  • அரசன் மணிக்கல்லைக் கண்டான்
  • தன் குடையைச் சாய்த்தான்
  • செங்கோலைக் கையிலிருந்து விட்டுவிட்டான்
  • பொற்கொல்லன் சொல்லைக் கேட்ட நானோஅரசன்
  • நானே கள்வன்
  • மக்களைக் காக்கும் பாண்டியர் ஆட்சி என்முதல் பிழைபட்டது
  • கெடுக என் ஆயுள்
  • என்றான்
  • பதறி விழுந்தான்
  • மாண்டான்
  • கண்ட அரசியும் விழுந்தாள்
  • மாண்டாள்
  • சேர்க்கப்பட்ட 3 வெண்பாக்கள் வினைவிளைவை உணர்த்துகின்றன

No comments:

Post a Comment