Pages

Tuesday, 28 April 2026

ஊரைச் சுற்றிக்கொண்டு அரற்றினாள்

வரிசை எண்ணுக்குள் பாடல் தொடுப்பு உள்ளது

1 --- கண்ணகியின் வஞ்சின முழக்கம்
  • அரசன் முறை இல்லாதவன்
  • அவன் ஆட்சியில் வாழும் பத்தினிப் பெண்களே
  • நான் பெரும் துயரத்தில் இருக்கிறேன் 
  • என் கணவன் கள்வன் அல்லன் 
  • என் கல் சிலம்பு ஒன்றையே விற்க வந்தான்
  • அதனைப் பிடுங்கிக்கொள்ளக் கொன்றுவிட்டனர்
    • என் கணவனைக் காண்பேன்
    • உங்கள் கண்முன் அவன் என்னோடு பேசுவான்
    • அவன் பேசாவிட்டால் என்னைக் கொடுமைக்காரி எனத் திட்டுங்கள்
  • என்று மதுரைத் தெருவெங்கும் முழங்கிக்கொண்டே கண்ணகி சென்றாள்
  • கேட்டவர்களின் மனம் குழம்பிற்று  
2 --- மக்கள் கலக்கம்
  • அரசன் இவளுக்கு நீக்க முடியாத துன்பம் கொடுத்துள்ளான்
  • அதனால் அவனது வளையாச் செங்கோல் வளைந்துவிட்டது
  • இது சிலம்பு ஒன்றால் விளைந்திருக்கிறது
  • என்று சொல்லி அழுதுகொண்டே கோவலன் உடம்பைக் காட்டினர்
  • பொழுது இறங்கும் நேரம்  
3 ---  கண்ணகி புலம்பல்
  • குருதி வெள்ளத்தில் கணவனைக் கண்டாள்
  • மண்ணில் கிடக்கிறாயே
  • இது பாண்டியன் செய்த கொடுமை என்று யாரேனும் சொல்லமாட்டார்களா
  • இந்த ஊரில் பெண்கள் இருக்கிறார்களா
  • சான்றோர் உள்ளனரா
  • தெய்வம் இருக்கிறதா
  • என்று சொல்லி, கணவன் மார்பைத் தருவினாள்
  • அவன் உணர்வு பெற்று எழுந்தான்
  • "உன் முகம் வாடியிருக்கிறதே" - என்றான்
  • அவள் கண்ணீரைக் கையால் துடைத்தான். 
  • அணைத்த கைகளால் அடிகளைப் பற்றினாள்
  • "இரு" என்றான்
  • போய்விட்டான் 
  • இது என்ன மாயமா
  • தெய்வம் என்னை மருட்டியதா
  • மன்னனிடம் நீதி கேட்பேன்
  • என்றாள்
  • புகார் நகரில் இருந்தபோது தான் கண்ட கனவை நினைத்தாள்
  • அரண்மனை வாயில் முன் நின்றாள்

No comments:

Post a Comment