வரிசை எண்ணுக்குள் பாடல் தொடுப்பு உள்ளது
- குரவை ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்போது மூதாட்டி ஒருத்தி திருமால் கோயிலுக்குச் சென்றாள்
- கோவலன் கொலையுண்ட செய்தியை கோயிலில் பேசிக்கொண்டிருந்தனர்.
- அதனைக் கேட்டவள் பதறிக்கொண்டு திரும்பினாள்
- ஆயர் முன் முதாட்டி எதுவும் பேசாமல் நின்னறள்
- கண்ணகி கலக்கத்துன் தோழியரை வினவிக்கொண்டிருந்தாள்
- நேற்று பிற்பகலே என் கணவன் திரும்பியிருக்க வேண்டும்
- ஊர் மக்கள் என்னதான் பேசிக்கொண்டிருக்கின்றனர் - என்றாள்
- அரண்மனைச் சிலம்பை உன் கணவன் திருடிவிட்டான் என்று உன் கணவனைக் கொன்றுவிட்டனர் - என்றாள் முதியவள்.
- இந்தச் செய்தியைக் கேட்டதும் கண்ணகி பொங்கி எழுந்தாள்
- மன்னவன் செய்த தவற்றினால் நான் என் கணவனை இழந்தேன்
- இதற்காக நான் அழுதுகொண்டு சும்மா இருப்பேனா
- இப்படிச் சொல்லி அரற்றினாள்
- குரவை ஆடும் பெண்களே
- எல்லாரும் கேளுங்கள்
- காய்கதிர்ச் செல்வனே
- என் கணவன் கள்வனா
- உன் கணவன் கள்வன் அல்லன்
- பெண்ணே
- இந்த ஊர் எரியப் போகிறது
- இப்படி ஒரு குரல் கேட்டது
No comments:
Post a Comment