வரிசை எண்ணுக்குள் பாடல் தொடுப்பு உள்ளது
- அரண்மனையில் காலை முரசம் முழங்கிற்று
- அன்று அவள் அரண்மனைக்கு நெய் வழங்கும் முறைநாள் எனபதை மாதரி நினைத்தாள்
- தன் மகள் ஐயையை அழைத்துத் தயிர் கடைய மத்தும் கயிறும் கொண்டுவருமாறு கூறினாள்
- மகள் கொண்டு வந்தாள்
- குடத்தில் ஊற்றிய பால் உறையவில்லை
- கன்று பால் குடிக்கத் தாயிடம் செல்லவில்லை
- இது போல் சில தீய அறிகுறிகள்
- மாதரி மகளிடம் கூறினாள்
- துன்பம் வரப்போகிகிறது
- ஆயர்பாடியில் மாயவன் பிஞ்ஞையோடு ஆடிய கதையைச் சொல்லி, குரவை ஆடி அவன் அருளைப் பெறலாம் - என்றாள்
- மாயவன் 7 காளைகளை அடக்கினான்
- அந்தக் காளைகள் என்று 7 பெண்கள் நிறுத்தப்பட்டனர்
- அவர்களை அடக்குவது போல் ஆடினர்
- 7 பண்ணிசை
- 7 பெண்
- யாழில் 7 நரம்புகளை நெருடுவது போல் ஆடினர்
- ஆடும் பெண்களுக்கு குரல் முலான இசையின் பெயர் சூட்டப்பட்டது
- மாதரி "ஐ" என்றாள்
- குரவை ஆட்டம் தொடங்கிற்று
- கை விரல்களைக் கோத்துக்கொண்டு
- ஏழிசைப் பண் கூட்டி முல்லைத் தீம்பாணி பாடிக்கொண்டு ஆடினர்
- மாயவன் குழல் ஊதியதைப் பாடினர்
- மாயவனின் மாயச் செயல்களைப் பாடினர்
- யாழில் விரல்கள் பண்ணிசை நரம்புகளை மாறி மாறித் தொடுவது போல் தொட்டுக்கொண்டு ஆடினர்
- பலராமன் பார்த்துக்கொண்டிருக்க
- மாயவன் நப்பின்னையோடு சேர்ந்து
- பூந்தாதுகள் எருவாகக் கொட்டிக் கிடக்கும் மன்றத்தில்
- ஆடியது போல் ஆடினர்.
- பாண்டியன் புகழைப் பாடிக்கொண்டு ஆடினர்.
- மாயன் கடல் கடைந்தது
- வெண்ணெய் திருடி உண்டது
- மூவுலகும் அளந்தது
- ஆகியவற்றைப் போற்றிப் பாடிக்கொண்டு ஆடினர்.
- திருமால் புகழைக் கேட்காத செவியால் பயன் இல்லை
- அவன் அழகைக் காணாத கண்களால் பயன் இல்லை
- அவனை வாழ்த்தாத நாவால் பயன் இல்லை
- என்றெல்லாம் பாடிக்கொண்டு ஆடினர்.
- குரவையில் நாங்கள் போற்றிய தெய்வம் எங்கள் குறையைத் தீர்க்க வேண்டும்.
- வானவனாகிய இந்திரன் தலையில் வளை உடைத்த பாண்டியன் எப்போதும் வெற்றி பெற வேண்டும்
- என வேண்டிக்கொண்டு கூத்தாட்டத்தை நிறைவு செய்தனர்.
No comments:
Post a Comment