Pages

Monday, 27 April 2026

கோவலன் கொல்லப்பட்டான்

1
மாதரி கண்ணகியை எப்படிப் பேணினாள் எனல்
  • மாதரி கண்ணகியை அடைக்கலமாகப் பெற்றாள்
  • புதிய பந்தல் வீடு கட்டித் தந்தாள்
  • ஆய்ச்சியர் மகிழ்வுடன் நீராட்டினர் 
  • மாதரி தன் மகள் ஐயையைக் கண்ணகிக்குத் தோழி ஆக்கினாள். 
  • கோவலனுக்குத் தங்கை என்றாள்
  • ஐயை இருவருக்கும் பணிவிடை செய்துவந்தாள்
2
  • நெல்லரிசி, பால், பாகற்காய், வெள்ளரிக்காய், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றைக் கொடுத்து சமைத்து உண்ணும்படி வேண்டினாள். 
3
  • ஐயை அடுப்பு எரித்தாள் 
  • கண்ணகி சமைத்தாள்
4
  • கோவலன் தாழை இலையால் பின்னப்பட்ட தடுக்கில் அமர்ந்தான்
  • மண் மொந்தையில் தண்ணீர் 
  • வாழை இலையில் உணவு
  • "அடிகள்! உண்க" - என்றாள்
  • வணிகர் முறைப்படி கோவலன் உணவு  உண்டான். 
5
  • இவன் ஆயர்பாடிக் கண்ணனோ
  • இவள் இராதையோ
  • என்று இருவரையும் எண்ணி ஆயர் வியந்து மகிழ்ந்தனர்
6
  • கண்ணகி கோவலனுக்கு வெற்றிலைப் பாக்கு கொடுத்தாள் 
  • வாங்கித் தின்ற  பின் பேசுகிறான்
  • "கல்லுக் காட்டில் என்னுடன் நடந்து வந்தாயே
  • "நம் தாய்தந்தையர் எப்படி இருக்கிறார்களோ
  • "பரத்தையோடு வாழ்ந்தேன்
  • "நன்றி கொன்ற எனக்கு உய்தி உண்டோ
  • "நான் உனக்குத் தந்த துன்பங்களை நீ நினைக்கவில்லை
  • "வா என்றதும் என்னுடன் வந்துவிட்டாய்
  • "இதனை நினைக்கும்போது என் மனம் நோகிறது" என்று சொல்லிக்கொண்டு கலங்கினான்.
7
  • என்னை இல்லறக் கடமைகளை செய்யாமல் வாழச் செய்தீர்
  • என் தாய் தந்தையரிடம் போலியாகப் புன்னகை காட்டிக்கொண்டு நான் வாழ்ந்தேன். இந்த நிலைக்கு என்னை ஆளாக்கினீர்
  • உன்னை நான் திருத்தவில்லை - என்று கண்ணகி கூறினாள். 
8
  • சுற்றத்தார், தோழியர், அடியோர் அனைவரையும் விட்டுவிட்டு வந்திருக்கிறாய். 
  • சிலம்பை விற்று வருவேன் 
  • அதுவரைக் கலங்காமல் இரு - என்றான்
  • அவனது கண்கள் கலங்கின. 
  • தெருவில் நுழைந்தான்
9
  • இது தீய நிமித்தம் என்பது கோவலனுக்குத் தெரியாது
  • ஆயர் தெருவைக் கடந்து வணிகர் தெருவில் நடந்தான் 
10
  • பொற்கொல்லன் ஒருவன் நூற்றுக் கணக்கானோர் பின்தொடர  எதிரே வந்துகொண்டிருந்தான்
  • அவனை அரச பொற்கொல்லன் என்று கோவலன் நினைத்தான்
  • "அரசி அணியத்தக்க காலணி ஒன்றுக்கு விலை மதிப்பிட முடியுமா" என வினவினான். 
11
  • எனினும் அரசனின் தலைமுடி முதலானவற்றைச் செய்பவன் நான்தான் - என்றான் பொற்கொல்லன்
  • கோவலன் சிலம்பைக் காட்டினான்.
12
  • பொற்கொல்லன் பார்த்தான்
  • பத்திக் கோவணம் என்னும் பொன்னால் செய்யப்பட்டு, உயர்ந்த வேலைப்பாடு கொண்டிருப்பதை உணர்ந்தான்
  • அரசி மட்டுமே அணியத் தக்கது - என்றான்
13
  • அதுவரை என் குடிலில் இரு
  • என அமர்த்திவிட்டுச் சென்றான்
14
  • அரசி சிலம்பை நான் திருடு வைத்திப்பதை மறைக்க ஆள் கிடைத்துவிட்டான் என்று எண்ணிக்கொண்டான்.
15
  • ஆடல் மகளிர் அழகில் அரசன் மயங்கினான் என ஊடிய அரசி அந்தப்புரம் சென்றுவிட்டாள்
  • அரசியின் ஊடலைத் தீர்க்க அரசன் அவளிடம் சென்றுகொண்டிருக்கிறான்
  • அந்தப்புர வாயிலில் பொன்கொல்லன் அரசனை எதிர்கொள்கிறான்.
16  
  • அரசி சிலம்பைத் திருடிய கள்வன் அகப்பட்டுக்கொண்டான்
  • அவனைப் பிடித்து என் குடிலில் வைத்திருக்கிறேன் - என்றான்
17
  • அரசன் ஆராய்ந்து பார்க்கவில்லை
  • சிலம்பு அவன் கையில் இருந்தால், அவனைக் கொன்றுவிட்டு, சிலம்பைக் கொண்டுவாருங்கள் - என்று சொல்லிக் காவலரை அனுப்பினான் 
18
  • இவர்கள் சிலம்பைப் காண வந்துள்ளனர்
  • சிலம்பைக் காட்டு - என்றான்
  • காட்டினான்
19
  • இவன் முகத்தைப் பார்த்தால் கள்வன் என்று தோன்றவில்லை
  • இவனைக் கொல்லக்கூடாது 
  • என்று சிலர் பேசிக்கொண்டனர். 
  • பொற்கொல்லன் திருடன் ஏமாற்றுவான் என்று அவர்களிடம் விளக்கிச் சொல்கிறான்
  • கொல்லாவிட்டால் அரசனால் தண்டிக்கப்படுவீர் - என அச்சுறுத்தினான்
20
  • திருடர்கள் 8 வகையாகத் தந்திரம் செய்து ஏமாற்றுவர் என்று கூறிப் பொற்கொல்லன் ஒவ்வொன்றாக எடுத்துரைக்கிறான்
21
  • பொற்கொல்லன் திருனைப் பற்றி ஒரு கதை சொன்னான்
22
  • காவலன் ஒருவன் மற்றொரு கதை சொல்லிக்கொண்டிருந்தான்
23
  • காவலன் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே கள்ளுண்ட போதையில் இருக்கும் ஒரு காவலன் கோவலனை வெட்டி வீழ்த்தினான்
24
  • எல்லாம் பண்டைய விதியின் விளைவு
கண்ணகி வாழ்க்கை பற்றிச் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் --- தொடுப்புகளைச் சொடுக்கி, பாடல் பகுதியையும், விளக்கத்தையும் பெறலாம். 

No comments:

Post a Comment