15
பாண்டியன் நல்லாட்சி
- கோவலன் மதுரை நகரைச் சுற்றிப் பார்த்த பின் கவுந்தியடிகளுடன் தன் மனைவி இருக்கும் புறஞ்சேரிக்கு மீண்டான். பாண்டியனின் நல்லாட்சி பற்றி விளக்கினான்.
மாடலன்
- மாடலன் என்னும் மறையவன் பொதிய மலையை வலம்வந்த பின்னர் குமரித் துறையில் நீராடிவிட்டுத் தன் ஊருக்குத் திரும்புகையில் கவுந்தியடிகளைக் கண்டதும் வணங்கினான்.
- கோவலன் மாடலனை வணங்கினான்.
- மாடலன் கோவலனைப் பாராட்டுகிறான்.
- கோவலன்-மாதவிக்குப் பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா. கோவலன் தன் குலதெய்வம் ‘மணிமேகலை’யின் பெயரைக் குழந்தைக்குச் சூட்டசொன்னான். கணிகையர் கூட்டம் அப் பெயரை உரக்கச் சொல்லிச் சூட்டியது.
- அப்போது பொன்னணிகள் தானமாக வழங்கப்பட்டன. அதனைப் பெறக் முதிய கூனப் பார்ப்பனன் ஒருவன் வந்திருந்தான். அப்போது அங்கிருந்த யானை பாகன் கட்டுப்பாட்டை மீறி, கூனனைத் துதிக்கையால் பற்றியது. இதனைக் கண்ட கோவலன் யானை மேல் தாவி ஏறி அதனை அடக்கி, முதியவனைக் காப்பாற்றினான்.
- இது கோவலனின் கருணைமறம்.
- வளர்ப்புப் பிள்ளை கீரியைப் கொன்ற மனைவியைக் கணவன் அந்தணன் விட்டுவிட்டுச் சென்றான். செல்லும்போது அவள் கையில் வடமொழியில் எழுதிய ஓலை ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.
- கடமை உணர்ந்த மகனிடம் ஓலையைக் கொடு - என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
- தகாத செயல் செய்தவள் என்று அவள் ஓலையை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை
- கோவலனிடம் கொடுத்தாள்.
- பெற்றுக்கொண்ட கோவலன் அவள் பெயரில் தானம் பல செய்து அவள் பாவத்தைப் போக்கினான்.
- விட்டுச் சென்ற கணவனையும் அவளோடு சேர்ந்து வாழுமாறு செய்தான்.
- இது செல்வத்தின் சீரிய வாழ்க்கை.
- பத்தினி ஒருத்தி பற்றி அவள் கணவனிடம் ஒருவன் இல்லாததும் பொல்லாததும் சொன்னான். இப்படிப் பொய் சொன்னவனை பூதம் கைப்பறிக்கொண்டது.
- பொய் சொன்னவனின் தாய் கதறிளான். தன் உயிரை எடுத்துக்கொண்டு தன் மகனை விட்டுவிடுமாறு வேண்டினாள். பூதம் ஏற்கவில்லை. அவனைக் கொன்று தின்றுவிட்டது.
- பூதத்தால் கொல்லப்படவனின் தாயைக் கோவலன் காப்பாற்றினான்.
- இது வறியோரைப் பேணிய செம்மாப்பு.
- இப்படி இம்மையில் கோவலன் செய்தவை எல்லாம் நல்வினை. இவன் இப்போது துன்புறுவது முன்வினைப் பயனோ என்று மாடலன் கோவலனைப் பாராட்டுகிறான்.
- பாண்டியன் நகரில் தன் மனைவி நடுங்கும்படி கோவலன் எருமைக்கடா மீது செல்லும் கனவு
- மகள் மணிமேகலையைத் தாய் மாதவி புத்தத் துறவியிடம் ஒப்படைப்பது போன்ற கனவு
- இது பலிதமாகும் போலும் - என்கிறான், கோவலன்.
- புறஞ்சேரி துறவிகள் வாழுமிடம். பொழுது இறங்குவதற்கு முன் இதனை விட்டு நீங்கி மதுரை சென்றுவிடுக - என்று மாடலனும், கவுந்தியடிகளும் கூறினர்.
- புறஞ்சேரியில் இயக்கி என்னும் தெய்வத்துக்குப் பால் கொண்டுவந்த மாதரி என்னும் ஆயர்குடி முதியவள் கவுந்தியடிகளைக் கண்டதும் தொழுதாள்.
- பசுவை வளர்த்து, அது நோகாமல் அதன் பாலைப் பெற்று விற்று வாழும் வாழ்க்கை குற்றமற்றது. இப்படி வாழ்பவளிடம் கண்ணகியை ஒப்படைப்பதில் தவறு ஒன்றும் இல்லை - என்று எண்ணி ஒப்படைக்கிறார்.
- கண்ணகி, கோவலன் - ஆகியோரின் பெற்றோர் இவர்களின் இருப்பை அறிந்தால் உடனே வந்து அழைத்துச் செல்வர். அதுவரை உன்னிடம் வைத்திருக்குமாறு இவர்களை அடைக்கலமாகத் தருகிறேன் - என்று சொல்லி ஒப்படைத்தார்.
- இவர்களுக்கு நீ தாயாக இருந்து காப்பாற்று
- கண்ணகி வெயிலில் வெந்து வந்திருக்கிறாள்
- கற்புக் கடமை செய்துகொண்டிருக்கும் தெய்வம் இவளைப் போல வேறொருத்தியை நான் பார்த்து இல்லை.
- பத்தினித் தெய்வம் இருக்கும் நாட்டில் மழை வளம் சுரக்கும்.
- என்றெல்லாம் கூறி இருவரையும் கவுந்தியடிகள் மாதரியிடம் ஒப்படைத்தார்.
- அப்போது அடைக்கலப் பொருளைப் பேணலின் திறம் பற்றிப் பண்டைய நிகழ்வு ஒன்றைக் கூறுகிறார்.
- காவிரிப்பூம்பட்டினத்தில் பாறை மேடையில் சமண நோன்பிகள் திரண்டிருந்தனர். அங்கு, பாதி உடம்பு குரங்காயிருந்த வானவன் ஒருவன் வந்தான்.
- குரங்கை அடைக்கலம் பெற்றுப் பேணி, பெற்ற பேறு பற்றிய வரலாற்றைச் சொல்கிறார்.
- மாதரி கோவலனையும், கண்ணகியையும் அடைக்கலமாகப் பெற்றுக்கொண்டாள்
- மதுரையைக் காக்கப் பயன்படுத்துவதற்காக மதுரை மதிலில் பல்வேறு வகையான போர்க்கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.
- அந்த மதிலைக் கடந்து மாதரி இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.
கண்ணகி வாழ்க்கை பற்றிச் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் --- தொடுப்புகளைச் சொடுக்கி, பாடல் பகுதியையும், விளக்கத்தையும் பெறலாம்.
No comments:
Post a Comment