Pages

Sunday, 19 April 2026

தமிழ் (தொல்காப்பியத்துக்கு முன்) - Tamil (Pre-Tolkāppiyam)

தொல்காப்பியர் காலத்துக்கு முன்பு இருந்த இலக்கணம் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. 

0

நூல்மரபு, மொழிமரபு, தொகைமரபு, விளிமரபு, மரபியல் - என்னும் தலைப்புகள் (இயல்கள்) மரபு எனக் குறிப்பிடப்படுகின்றன. 

மரபு என்பது வழிவழியாக வருவதைப் குறிப்பிடும் ஒரு சொல். 
மரபணு  என்பது அணுவின் வழிவழித் தோற்றம். 

பழக்க வழக்கங்களும், பேச்சும், எழுத்தும் வழிவழியாக வருகின்றன. 

மொழியில் மரபு என்பது பேச்சையும், எழுத்தையும் குறிக்கும். 

0

தொல்காப்பித்தில் கையாளப்படும் என்ப, என்மனார், ஆசிரியர்க்க - போன்ற சொல்லாட்சிகள் தொல்காப்பியர் காலத்துக்கு முந்தைய தமிழின் நிலையை உணர்த்துகின்றன. 

0

என்ப (என்பர்) என்னும் சொல் 145 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

என்மனார் (என்று கூறுவர்) என்னும் சொல் 75 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ஆசிரியர்க்கு என்னும் சொல் ஓரிடத்திலும்,  ஆசிரியர்க்க என்னும் சொல் இரண்டு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (இது நூலாசிரியர் கருத்து)

இங்குக் காட்டப்பட்டுள்ள 223-ல் சொல்லப்படும் கருத்துகளைத் தொகுத்துப் பார்த்தால் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்த தமிழின் நிலைமையைக் கண்டுகொள்ளலாம்.  

No comments:

Post a Comment