Pages

Monday, 20 April 2026

சிலப்பபதிகார உரை Commentary on the Silappathikaram

சிலப்பதிகாரத்துக்கு அரும்பதவுரை ஒன்று இருந்தது. அதன் குறிப்புகளுடன் ஆடியார்க்கு நல்லார் உரை பதிப்பிக்கப்படுள்ளது. 

இவை பற்றிய செய்திகளைத் தரும் பாயிரப் பாடல்கள் இங்குத் தரப்படுகின்றன. 

உரைப்பாயிரம் 
அவையடக்கம்


எழுத்தின் திறம் அறிந்தோ இன்சொல் பொருளின்
அழுத்தம் தனின் ஒன்று அறிந்தோ - முழுத்தும்
பழுதற்ற முத்தமிழின் பாடற்கு உரை இன்று
எழுதத் துனிவதே யான்   

  • சிலப்பதிகாரம் முத்தமிழ்ப் பாடல்களைக் கொண்ட நூல். 
  • இந்த நூலின்  எழுத்தாற்றல், பொருள் செறிவில் ஏதேனும் ஒன்று, முத்தமிழ்ப் பாடல் - ஆகியவை எனக்குத் தெரியுமோ தெரியாதோ - என்றெல்லாம் எண்ணிப் பார்க்காமல் உரை எழுதத் துணிந்திருக்கிறேன். 
 

சிறப்புப் பாயிரம்


பருந்தும் நிழலும் எனப் பாவும் உரையும்
பொருந்து நெறி எல்லாப் பொருளும் -  தெரிந்து இப்
படியார்க்கு நல் அமிர்தம் பாலித்தான் நன்னூல்
அடியார்க்கு நல்லான் என்பான்.
 
  • பருந்து பறக்கும் இடத்தைச் சார்ந்து அதன் நிழல் செல்வது போல் இந்த உரை பாடலைத் தழுவிச் செல்கிறது.

அடியார்க்கு நல்லார் உரைச் சிறப்புப் பாயிரம்


ஓரும் தமிழ் ஒரு மூன்றும் உலகு இன்புற வகுத்துச்
சேரன் தெரித்த சிலப்பதிகாரத்தில் சேர்ந்த பொருள்
ஆரும் தெரிய விரித்துரைத்தான்அடியார்க்கு நல்லான்
காரும் தருவும் அனையான் இரம்பையர் காவலனே. 

  • சேரன் பாடிய நூல் சிலப்பதிகாரம். 
  • இதற்கு அடியார்க்கு நல்லான் உரை எழுதியிருக்கிறான். 
  • இதற்கு இரம்பை அரசன் கைம்மாறு வேண்டா மழைமேகம் போலவும், கேட்டதையெல்லாம் தரும் கற்பக மரம் போலவும் உதவியிருக்கிறான். 

காற்றைப் பிடித்துக் கடத்தில் அடைத்து அக் கடிய பெரும்
காற்றைக் குரம்பை செய்வார் செய்கை போலும் மற்றுக் காலம்  எனும்
கூற்றைத் தவிர்த்து அருள் பொப்பண்ண  காங்கெயர் கோன் அளித்த 
சோற்றுச் செருக்கு அல்லவோ தமிழ் மூன்று உரை செய்வித்ததே  

  • காற்றைப் பிடித்து வெளியே விடாமல் குடத்துக்குள் அடைத்து வைப்பது போலவும், 
  • காற்றை வளைத்துக் கூடாரம் போட்டுக்கொள்வது போலவும் 
  • பொப்பண்ண காங்கெயர் எனக்குச் சோறுபோட்டுப் பேணி உரை எழுத வைத்திருக்கிறார்.  

சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரை, 
உ வே சாமிநாதையர் பதிப்பு, 1920,  பக்கம் 39

No comments:

Post a Comment