நிழலுக்காக
நிழலுக்காக, கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மூவரும் காளி கோயிலின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.
சாலினி வேடம்
காளிக்குக் கடமை செலுத்தாவிட்டால் எயினர்க்கு வெற்றி தரமாட்டாள் - என்று சொல்லிக்கொண்டு சாலினி ஒருத்தி சாமியாடினாள்.
குமரி ஒருத்திக்கு சாலினி வேடம் கட்டியிருந்தனர். பாம்புக்குட்டி இடைக்கயிறு, தலையில் பன்றிப்பல் பிறை, புலிப்பல் தாலி, கையில் வில் - என்று வேடம் கட்டியிருந்தனர். கலைமான் ஒன்றில் அவளை ஏற்றி வைத்துக் கூட்டிக்கொண்டு வந்தனர். பயறு, எள்-உருண்டை, கறிச்சோறு, பூ, புகைப்பொருள் முதலானவற்றை ஏந்திக்கொண்டு பெண்கள் அவளுக்குப் பின்னே வந்தனர். பறை, உடுக்கு,, யாழ், குழல், மணி முதலான இசைக்கருவிகள் முழங்கின. சாலினியை எல்லாரும் கைகூப்பி வணங்கினர்.
கண்ணகியைப் போற்றல்
சாலினி தெய்வம் ஏறிய வாக்கால் கண்ணகியைப் போற்றினாள். கொங்கச் செல்வி, குடமலையாட்டி, தென்தமிழ்ப்பாவை செய்த தவத்தால் பெற்றிருக்கும் தவக்கொழுந்து, ஒரு மணியாய் உலகுக்கு ஓங்கிய திருமணி - என்றெல்லாம் பாராட்டினாள். அதனைக் கேட்ட கண்ணகி சிரித்துக்கொண்டு கணவனுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டாள்.
கொற்றவை பாட்டு
- சாலினி கொற்றவையின் புகழை இசையோடு பாடிக்கொண்டு ஆடினாள்.
- சொல்வதை, பாட்டு-மடக்கு ஆக்கி, கொற்றவையைப் போற்றுகிறாள். - 3 பாடல்
- வளப்பேறு பெற்ற வள்ளியாகப் பாவித்து 3 பாடல்.
- கொற்றவையை முன்னிலைப்படுத்திப் போற்றும் 3 பாடல்
- கொற்றவைக் கூத்து நடக்கிறது
- கொற்றவை புகழைப் போற்றும் பாடல்கள் \ துறைப்பாட்டு மடை
கண்ணகி வாழ்க்கை பற்றிச் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் --- தொடுப்புகளைச் சொடுக்கி, பாடல் பகுதியையும், விளக்கத்தையும் பெறலாம்.
No comments:
Post a Comment