கந்தன் பள்ளிக் கடவுளர்
சமணத் துறவிகள் கடவுளர் எனப் போற்றப்பட்டனர். உறையூரில் அவர்கள் வாழும் பள்ளி ஒன்று இருந்தது. கோவலன், கண்ணகி, காவுந்தி மூவரும் அன்று அங்குத் தங்கினர். அப்போது காவுந்தி ஐயை அங்கிருந்த கடவுளர்க்கு, திருவரங்கத்தில் சாரணர் கூறிய கருத்துகளை எடுத்துரைத்தார். பொழுது புர்ந்ததும் ஒரு மரநிழல் பூங்கா சென்று அமர்ந்திருந்தனர்.
மாங்காட்டு மறையவன்
மேற்கு மலைத்தொடர் மாங்காடு என்னும் ஊரில் வாழும் மறையவன் அங்கு வந்தான். பாண்டியன் பெருமைகளைச் சொல்லி அவனை வாழ்த்திக்கொண்டிருந்தான். குமரித்துறையில் நீராடிவிட்டு வருவதாகவும், திருமால் திருவரங்கத்தில் கிடந்த வண்ணமும், திருவேங்கடத்தில் நிற்கும் வண்ணமும் காணப் போய்க்கொண்டிருப்பதாகவும் கூறினான். ஐயை மதுரை செல்லும் வழிகளைக் கூறுமாறு அவனை வினவினார்.
மூன்று வழி
கொடும்பாளூரிலிருந்து வலப்புறமாகச் செல்வது சிறுமலை வழி. இது சுற்றுவழி. இடப்பக்கமாகச் செல்வது அழகர்-மலை வழி. அங்கே சிலம்பாறு பாயும். மூன்று பொய்கை இருக்கும். அந்தப் பொய்கைகளில் நீராடி, இம்மை மறுமைக்கு வேண்டிய சித்திகளைப் பெறலாம். இடைப்பட்ட வழி சோலை-வழி. இவ்வழியில் செல்லும்போது பெண்-தெய்வம் தோன்றி வழியில் செல்வோரைத் துன்புறுத்தும். - என்று மூன்று வழிகளை மாடல மறையவன் கூறினான்.
வலப்பக்க வழியும், இடப்பக்க வழியும் வேண்டுவதில்லை என்பதற்கான காரணத்தை கவுந்தியடிகள் குறிப்பிட்டு, இடைப்பட்ட வழியைத் தெரிந்தெடுத்துக்கொள்கின்றனர்.
இடைப்பட்ட வழியில் சென்றனர்
வழியில் தாகம் தீர்க்கும் தண்ணீருக்காக, கோவலன் தனியே செல்கிறான். மாதவியின் தோழி வயந்தமாலை உருவில் பெண்தெய்வம் அவன் முன் தோன்றி அவனை மயக்குகிறது. கோவலன் மந்திரம் சொல்கிறான். பெண்தெய்வம் அவனிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு மறைகிறது.
வில் உழவர்
கோவலன் தாமரை இலையில் தண்ணீர் கொண்டுவந்து காவுந்தி தாகத்தைப் போக்குகிறான். வேடர்கள் வில்லால் உழுது உண்பவர்கள். அவர்ளின் தெய்வம் கொற்றவை. பின்னர் மூவரும் கொற்றவை கோயிலுக்குச் செல்கின்றனர்.
கண்ணகி வாழ்க்கை பற்றிச் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் --- தொடுப்புகளைச் சொடுக்கி, பாடல் பகுதியையும், விளக்கத்தையும் பெறலாம்.
No comments:
Post a Comment