காலை வேளை
- பொழுது புலர்ந்தது
- சிவன், திருமால், பலராமன், முருகன், அருகன், அரசன் கோயில் - முதலான இடங்களில் முரசு முழங்கிற்று.
தன்னைக் காட்டிக்கொள்ள
- கோவலன் தன்னைப்பற்றி ஊருக்கு உணர்த்தி வரும் விருப்பத்தில் கண்ணகியைக் கவுந்தியடிகளிடம் ஒப்படைக்கிறான்.
கவுந்தியடிகள் அறிவுரை
- எந்த நிலையிலும் சினம் கொள்ளாதே. வல்வினை தாக்கும். துன்பத்தில் சோராதே. பெண்களும் உணவும் மட்டுமே உலகம் அன்று. - என்பன போன்ற சில அறிவுரைகளை அப்போது கவுந்தியடிகள் கோவலனுக்குக் கூறுகிறார்.
- இராமன், நளன் மனைவியைப் பிரிந்து துன்புற்றது போல் நீ பிரிந்து துன்புறவில்லை என ஆறுதல் கூறினார்.
நுழை வாயில்
- நிலத்தடிச் சுருங்கை வழியில் கோவலன் மதுரைக்குள் நுழைந்தான்.
- மதிலைக் காக்கும் யவனருக்கு அஞ்சாமல் உள்ளே சென்றான்.
மக்களின் திளைப்பு
- மருத மரம் வைகைத் துறையில் படகில் உலவி மக்கள் களிப்புறுவர்.
- பொதியமலைச் சந்தனம் பூசிய மார்பில் கொற்கை முத்தணி பூண்டு பொழிலில் விளையாடித் திளைப்பர்.
- பொழுது இறங்கிய வேளையில் மனைவியைப் பாராட்டிக்கொண்டு மெத்தைமேல் இருப்பர்.
- முருகனை வரவேற்பது போல் மக்கள் சிவந்த ஆடை உடுத்திக்கொள்வர்.பல்வகைப் பூக்களாலும், பூசு பொருள்களாலும் ஒப்பனை செய்துகொள்வர்.
பருவ காலத் திளைப்பு
- குளிர் காலத்தில் தீக்காய்வர்.
- முன்பனிக் காலத்தில் நிலா முற்றத்தில் வெயிலில் காய்வர்.
- பின்பனி பங்குனி மாதத்தில் வில்லேந்தி விளையாடும் காமன் விழா நடக்கும்.
- இனவேனில் காலத்தில் பொதியமலைத் தென்றல் வீசும். அப்போது கொழுநனுடன் திளைப்பர்.
செல்வர்
- செல்வப் பெருங்குடி மக்கள் திளைத்து மகிழும் தெரு வழியாகக் கோவலன் சென்றான்.
காம விருந்தளிப்போர்
- காம விருந்தளிக்கும் மகளிர் வாழும் தெரு வழியே செல்கிறான்.
பல்வகைப் பண்டங்கள் விற்பனை
- பல்வேறு வகையான பண்டங்கள் விற்கும் அங்காடித் தெரு
- மணிக்கல் அணிகலன்கள் விற்கும் தெரு
- தரம் பிரித்துத் தங்க நகைகள் விற்கும் தெரு
- பட்டு, பருத்தி, கம்பளி ஆடைகள் விற்கும் தெரு
- உணவு தானியங்கள் விற்கும் தெரு - ஆகியவற்றைக் கண்டான்.
இனத்தவர் வாழும் தெரு - ஊர் அமைதி
- நால்வகை இனத்தவர் வாழும் தனித்தனித் தெருக்கள், சதுக்கம், ஆவணத்தெரு, துணிப்பந்தல் கடைக்கள், - முதலானவற்றைக் கண்டு இன்புற்றான்.
கண்ணகி வாழ்க்கை பற்றிச் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் --- தொடுப்புகளைச் சொடுக்கி, பாடல் பகுதியையும், விளக்கத்தையும் பெறலாம்.
No comments:
Post a Comment