3
ஆடல், பாடல், அழகு மூன்றிலும் குறைவில்லாதவள் மாதவி.
ஆடல் ஆசிரியன் திறமை
இசையமைத்துப் பாடக் கற்றுத் தருபவன் திறமை
நாட்டியம் கற்றுத் தரும் ஆசிரியன் திறமை
தண்ணுமை ஆசிரியன் திறமை
குழல் இசை கூட்டித் தருபவன் திறமை
யாழ் இசை கூட்டும் புலவன் திறமை
ஆட்டத்துக்கு விருதாக வழங்கப்படும் தலைக்கோல் எப்படிப்பட்டது
தலைக்கோல் யானையின் தலைமேல் வைத்து, அரசனும் அவன் சுற்றமும் சூழ்ந்து வர, ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது
மேடையில் இருந்த இடப்பக்கத் தூணுக்குப் பின்னால் மறைந்து நின்ற மாதவி ஆடும் மேடைக்கு வந்தாள். ஆட்டத்துக்கு இசை கூட்டித் தருபவர்கள் மேடையின் ஓரமாக அமர்ந்திருந்தனர்.
குழலுக்கேற்ப யாழ், யாழுக்கேற்பத் தண்ணுமை, தண்ணுமைக்கேற்ப முழவு - என்று இசைக் கருவிகள் முழங்கின.
11 முறை வழிவழியே இசைக்கருவிகள் முழங்கிய பின்னர், அந்தரக் கொட்டு முழக்கினர்.
பின்னர் முழக்குக்கு ஏற்ப அடி வைத்து மேடையில் ஆடிய மாதவி முதலில் நாட்டுக்கூத்து ஆடினாள். ஒவ்வொரு ஆட்டத்தையும் ஐந்து முறை ஆடிக் காட்டினாள்.
இப்படிப் பத்து சுற்றுகள் ஆடினாள்.
ஆட்டத்துக்குப் பரிசாக மன்னன் தலைக்கோல் விருதுடன் 1008 கழஞ்சு நிறுவை அளவுள்ள பொன்னும் வழங்கினான்.
மாதவிக்கு அரசன் சூட்டிய விருது மாலையை, அவள் தாய், அவளது தோழி கூனியின் கையில் கொடுத்து விற்று வருமாறு அனுப்பினான். "இந்த மாலையின் விலை 1008 பொன். இதனை வாங்குபவர் மாதவியைப் பெறலாம்" என்று சொல்லி அனுப்பினாள். கோவலன் விலை கொடுத்து அந்த மாலையை வாங்கினான். மாதவியை விலையாகப் பெற்றான். அவளுடன் இருந்து இன்பம் துய்த்தான். அவளை விட மனமில்லாமல் வாழ்ந்நதான். தன் மனைவி கண்ணகியை மறந்தான்.
கண்ணகி வாழ்க்கை பற்றிச் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் --- தொடுப்புகளைச் சொடுக்கி, பாடல் பகுதியையும், விளக்கத்தையும் பெறலாம்.
No comments:
Post a Comment