Pages

Tuesday, 17 March 2026

மலைக்கிழத்தி பாகா

முதுகுன்றைப் போற்றும் பாடல்கள் 

முதுகுன்றம்
பச்சைக் கொடியும் படரும்
பழமலை

நீற்றை அணிந்து நினைந்து உருகி நெஞ்சமே 
போற்று செழுந்திருவின் பூமானும் - சாற்றும் 
கலைக்கிழத்திக் கோனும் கருதரிய கோல 
மலைக்கிழத்தி கோமான் வரும். 

  • திருவின் பூமான் - திருமால்
  • கலைக்கிழக்கோன் - பிரமன் 
  • இவர்களால் நினக்கவும் முடியாதவன் மலைக்கிழத்திக் கோன் - சிவன் 
  • சிவனைத் திருநீறு அணிந்து போற்று. 

மன் அருணையோ நமசிவாய குருராயனது 
பொன்னடியில் என்னைப் பொருத்துவாய் - துன்னனுமலர்ப் 
பாதா, மலைக்கிழத்தி பாகா, பரமசிவ
நாதா, பழமலை வாணா. 

  • மணிதுத்தாறு பாயும் பழமலை வாணா! நமசியாய குருராயன் அடிகளின் என்னைச் சேர். 

விருப்பாய் முதுகுன்றின் மெய் புதுமை கேளீர் 
நெருப்பாய் மலை ஒன்று நிறுகும் - பொருப்பில் ஒரு 
பச்சைக் கொடியும் படரும் அதனருகே
உச்சிக்கே அறும் ஓடும். 

  • ஒரு மலை நெருப்பாய் நிறுகிறது
  • இந்த மலையில் பச்சைக்கொடி (உமை) படர்கிறது.
  • இது புதுமை. 

"சிதம்பரத்தில் தெய்வீகமுற்று விளங்கிய குரு நமச்சிவாய தேவ சுவாமிகள் அருளிச் செய்த சிவக்ஷேத்திரக் கோவைத் திருவெண்பா" என்று தலைப்பிட்ட நூல் ஒன்று 9 வெண்பாக்களுடன் உள்ளது. 

இவை பெருநூல் ஒன்றின் பகுதியா, தனிநூலா என்பது விளங்கவில்லை. 

இது விருத்தாசல புராணம் நூலின் இணைப்பாக உள்ளது. 

இதன் 2 பாடல்கள் "மலைக்கிழத்தி" என்று இவ்வூர் மலைத் தேவியைக் குறிப்பிடுகின்றன. 

அதன் 6 ஆம் பாடலில் "ஓம் நமசிவாய குரு" என்று ஆசிரியர் பெயர் வருகிறது. 

இதனால் இந்த நூலின் ஆசிரியர் குருநமச்சிவாயர் எனக் கொள்ளலாம். அவற்றில் உள்ள 3 பாடல்கள். 

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 178

பழமலை நாதர்


 

No comments:

Post a Comment