Pages

Wednesday, 18 March 2026

அகத்தியர் பலர்

காலவெள்ளத்தில் அகத்தியர் என்னும் பெயரைப் பலர் சூட்டிக்கொண்டு தம் நூலை வெளியிட்டுள்ளனர். 

இலக்கிய மரபில் அகத்தியர் 
  • நூல்கள் அகத்தியரைத் தெய்வம் போல் முதலாவதாக வைத்துப் போற்றி வணங்குகின்றன. 
  • முதல் சங்கம், இரண்டாம் சங்கம் ஆகியவற்றில் இரு வேறு அகத்தியர் இருந்து தமிழுக்கு இலக்கணம் செய்தனர். 
  • 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அகத்தியர் சிவாலய முனிவருக்காகத் தேவாரத்திரட்டு என்னும் நூலாகத் தேவாரப் பாடல்களைத் திரட்டித் தந்திருக்கிறார். 
  • முருகனைப் போற்றும் "ஆறெழுத்து அந்தாதி" என்னும் நூலை ஓர் அகத்தியர் செய்திருக்கிறார். 
புராண அகத்தியர்
  • உலோபா முத்திரை ஓர் அகத்தியர்.  என்பவளை மணந்துக்கொண்டவர், ஓர் அகத்தியர். 
  • சிவன் பார்வதியை மணந்தபோது திருமணம் காண வந்த மக்கள் திரட்சியால் வடக்கில் கயிலை மலை தாழ்ந்தபோது தென்திசைப் பொதிகைக்கு வந்து வடக்கு தெற்கு நிலப்பகுதியைச் சமநிலைப் படுத்தியவர் ஓர் அகத்தியர். 
  • விந்த மலையை அடக்கியவர்
  • வாதாபியைச் சீரணித்தவர் 
  • தன் கரகத்தில் காவிரியைக் கொண்டுவந்தவர். 
  • சப்த ரிசிகளில் ஒருவர்   
யோக அகத்தியர் 
  • யோகம், ஞானம், ரசவாதம், வைத்தியம், காயகற்பம், காலம், பூசை, தீட்சை, பஞ்சபட்சி சாத்திரம், ஆருடம், வாகடம் (நாடித்துடிப்பு வழியில் நோய்களைக் கண்டறிதல்) முதலான கலைகளைச் சொல்பவர் ஓர் அகத்தியர். 
இவர்கள் பலர். பல்வேறு காலத்தவர். 

நூல் எழுதியவர் தன் கருத்தைப் பரப்பும் நோக்கோடு அகத்தியர் பெயர் இருந்தால் நூலுக்குப் பெருமை வரும் என்று எண்ணியும் அகத்தியர் பெயரைச் சேர்த்திருக்கலாம்.  

அரசு தொன்னூல் நிலையத்தில் அகத்தியர் பெயரில் 170 நூல்கள் உள்ளன. 

வரலாற்று அற்புதங்கள் \ மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 193

No comments:

Post a Comment